நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேர்தலுக்கு பின் "புரட்சி" செய்ய திட்டம்? இப்போதே டிரம்ப் கொடுக்கும் சிக்னல்.. கலக்கத்தில் அமெரிக்கா

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் தனக்கு எதிராக வந்தால், அதை அதிபர் டிரம்ப் ஏற்றுக்கொள்ளாமல் ஏதாவது பிரச்சனை செய்ய வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இதற்கான அறிகுறியை இப்போதே டிரம்ப் வெளிப்படுத்தி வருகிறது.

Recommended Video

    தேர்தலுக்கு பிறகு புரட்சி? Trump கொடுத்த சிக்னல்

    அதிபர் டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். கொரோனா பாதிப்பு மற்றும் ஜார்ஜ் பிளாய்டு கொலைக்கு இடையே இந்த தேர்தல் நடக்க உள்ளது.

    ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கு நாளுக்கு நாள் செல்வாக்கு கூடிக்கொண்டே செல்கிறது. அதிலும் முன்னாள் துணை அதிபர் பிடனுக்கு முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ஆதரவு தெரிவித்து இருப்பதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    எச்1 பி , எச் 4 விசா இந்த ஆண்டு இறுதி வரை ரத்து.. டிரம்ப் அதிரடி அறிவிப்பு.. பின்னணி எச்1 பி , எச் 4 விசா இந்த ஆண்டு இறுதி வரை ரத்து.. டிரம்ப் அதிரடி அறிவிப்பு.. பின்னணி

    எதிராக வந்தால்

    எதிராக வந்தால்

    இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் தனக்கு எதிராக வந்தால், அதை அதிபர் டிரம்ப் ஏற்றுக்கொள்ளாமல் ஏதாவது பிரச்சனை செய்ய வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இதற்கான அறிகுறியை இப்போதே டிரம்ப் வெளிப்படுத்தி வருகிறது. அதன்படி இந்த அதிபர் தேர்தலில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது என்று டிரம்ப் கூறியுள்ளார். தேர்தலுக்கு எதிராக அவர் இப்போதே பேசி வருகிறார்.

    சொன்னது என்ன

    சொன்னது என்ன

    அதிபர் டிரம்ப் இது குறித்து தெரிவிக்கையில், 2020 அதிபர் தேர்தலில் முறைகேடு நடக்க போகிறது. எல்லோரும் கொரோனா அச்சம் காரணமாக தபால் வாக்குகளை செலுத்துவார்கள்.பல லட்சம் தபால் வாக்குகள் வெளிநாட்டில் அச்சடிக்கப்பட்டு அமெரிக்கா வரும். இதனால் தேர்தலில் முறைகேடு ஏற்படும். அமெரிக்க வரலாற்றில் இல்லாத அளவிற்கு பெரிய முறைகேடாக இது இருக்க போகிறது.

    உடனே நிறுத்த வேண்டும்

    உடனே நிறுத்த வேண்டும்

    உலகில் மிக மோசமான முறைகேடு நடந்த ஒரே தேர்தலாக அமெரிக்க அதிபர் தேர்தல் 2020 இருக்க போகிறது. நாம் உலகப்போர் 1 நடந்து போது வாக்களித்தோம். உலகப்போர் 2 நடந்த போதும் வாக்களித்தோம். அப்போதெல்லாம் தேர்தல் நடந்தது. ஆனால் இப்போது கொரோனாவை காரணம் காட்டி தபால் வாக்குகளை பதிய வைக்கிறார்கள். மிகப்பெரிய முறைகேட்டுக்கான திட்டம் இது, என்று டிரம்ப் கூறியுள்ளார்.

    என்ன சந்தேகம்

    என்ன சந்தேகம்

    இதனால் அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வி அடைத்தால் தேர்தல் முடிவுகளை ரத்து செய்ய முயற்சி செய்வாரா, தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ளாமல் பிரச்சனை செய்ய முயற்சி செய்வாரா என்று கேள்வி எழுந்துள்ளது .டிரம்ப் தேர்தலில் தோல்வி அடைந்தால், அவர் என்ன செய்வார், வெள்ளை மாளிகைக்கு உள்ளேயே இருப்பாரா என்று கேள்வி எழுந்து உள்ளது. அதாவது ஆட்சியை விட்டுக்கொடுக்காமல்,மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறுவாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

    முறைகேடு புகார்

    முறைகேடு புகார்

    தேர்தலில் முறைகேடு நடக்க போகிறது என்று டிரம்ப் இப்போதே கூறிவிட்டார். இதனால் எதிர்காலத்தில் தேர்தல் முடிவுகளை ரத்து செய்ய டிரம்ப் இப்போதே திட்டம் போடுகிறாரா என்று சந்தேகங்கள் எழுந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி இது தொடர்பாக அச்சம் தெரிவித்து இருக்கிறது. இது தொடர்பாக அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நேர்மையாக நடக்கும் என்று நினைக்கிறேன்.

    சவால் விட வாய்ப்புள்ளது

    சவால் விட வாய்ப்புள்ளது

    இதில் டிரம்ப் ஏதாவது முறைகேடு செய்ய வாய்ப்பு உள்ளது. தேர்தல் தோல்விக்கு பின் அவர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியே செல்ல மாட்டேன் என்று சவால் விட வாய்ப்புள்ளது. அதிபர் டிரம்ப் ஏதாவது முறைகேடு செய்ய நினைத்தால் உடனே ராணுவம் வெள்ளை மாளிகை உள்ளே செல்லும். உடனே அவரை வெள்ளை மாளிகையில் இருந்து அப்புறப்படுத்தும், என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

    என்ன சர்வாதிகாரம்

    என்ன சர்வாதிகாரம்

    இதனால் அமெரிக்காவில் உண்மையில் தேர்தல் முடிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, புதிய அதிபர் பதவி ஏற்பாரா அல்லது அதிபர் டிரம்ப் ஆட்சியைவிட்டு செல்லாமல் சர்வாதிகார ஆட்சிக்கு வழி வகுப்பாரா என்றும் சந்தேகம் எழுந்து இருக்கிறது. இன்னும் சிலர் ஆப்ரஹாம் லிங்கன் காலத்தில் இரண்டு அதிபர்கள், இரண்டு வெள்ளை மாளிகைகள் என்று இருந்த நிலைமை மீண்டும் வர கூட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

    English summary
    US Presidential elections: Trump may not approve the result if it goes against him in november 2020.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X