நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா 3-வது அலை உக்கிரம்... அமெரிக்காவில் ஒருநாள் பாதிப்பு விஸ்வரூபம்- ஒரே நாளில் 1,911 பேர் மரணம்

Google Oneindia Tamil News

நியூயார்க்: கொரோனா 3-வது அலை உலக நாடுகளில் உக்கிரமாக பரவி வருகிறது. அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 1,18,880 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் அமெரிக்காவில் 1,911 பேர் ஒரேநாளில் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

உலக நாடுகளில் கொரோனா பரவல் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. உலக நாடுகளில் ஒருநாள் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,98,188; ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 8,383.

கதறி ஓடும் கொரோனா.. தொற்று குறைந்து வருகிறதாம்.. உலக சுகாதார அமைப்பு புது தகவல்கதறி ஓடும் கொரோனா.. தொற்று குறைந்து வருகிறதாம்.. உலக சுகாதார அமைப்பு புது தகவல்

23.13 கோடி பேர் பாதிப்பு

23.13 கோடி பேர் பாதிப்பு

உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,13,41,291; உலகம் முழுவதும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 47,41,387; உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 20,79,87,089.

அமெரிக்காவில் விஸ்வரூபம்

அமெரிக்காவில் விஸ்வரூபம்

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல தடுப்பூசிகளை உலக நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. ஆனாலும் கொரோனா 3-வது அலை தற்போது வீரியமாக பரவி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து 1 லட்சத்தைத் தாண்டியதாக இருந்து வருகிறது. அமெரிக்காவில் இன்று காலை நிலவரப்படி 1,18,880 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும் ஒரே நாளில் 1,911 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் சுமார் 2,000 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,35,23,908. அமெரிக்காவில் கொரோனாவுக்கு இதுவரை 7,02,915 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் மொத்த எண்ணிக்கை 3,30,21,618

2-வது இடத்தில் இங்கிலாந்து

2-வது இடத்தில் இங்கிலாந்து

அமெரிக்காவுக்கு அடுத்ததாக இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இங்கிலாந்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 36,710 ஆக பதிவாகி இருக்கிறது. மேலும் இங்கிலாந்தில் ஒரே நாளில் 182 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்துக்கு அடுத்ததாக இந்தியாவில் 31,458 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இந்தியாவில் வியாழனன்று மட்டும் 319 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்கவும் தொடங்கி உள்ளது. இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,35,93,492. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 4,46,399 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 3,28,40,724.

இந்தியாவில் அதிகரிக்கும் பாதிப்பு

இந்தியாவில் அதிகரிக்கும் பாதிப்பு

துருக்கியில் ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை 27,844; பிரேசிலில் 24,611; ரஷ்யாவில் 21,438 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா மரணங்களில் அமெரிக்காவுக்கு அடுத்ததாக ரஷ்யா 2-வது இடத்தில் உள்ளது. ரஷ்யாவில் ஒரே நாளில் 820 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோவில் 811 பேரும் பிரேசிலில் 607 பேரும் ஈரானில் 317 பேரும் நேற்று கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

English summary
US has reoprted 1,18,880 new covid cases and 1,911 Covid deaths in single day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X