நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் டெல்டா வைரஸ்- ஜப்பானில் ஒரு வாரத்தில் 121% கொரோனா பாதிப்பு அதிகரிப்பு!

Google Oneindia Tamil News

நியூயார்க்: உலக நாடுகளில் டெல்டா வகை கொரோனா வைரஸ் அமெரிக்காவில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,11,721 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளாதவர்களே டெல்டா வகை வைரஸ் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றனராம்.

உலக நாடுகளில் கொரோனா 3-வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. அதிலும் டெல்டா வகை கொரோனா வைரஸ்தான் இப்போது அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,09,31,044. உலக நாடுகளில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 42,68,898. உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 18,08,90,174.

 புதிய தலைவலி..! அடுத்த அலையை ஏற்படுத்தப்போவது டெல்டா பிளஸ் கொரோனா? தென் கொரியாவுக்கும் பரவியது புதிய தலைவலி..! அடுத்த அலையை ஏற்படுத்தப்போவது டெல்டா பிளஸ் கொரோனா? தென் கொரியாவுக்கும் பரவியது

மிக மோசமான பாதிப்பு

மிக மோசமான பாதிப்பு

இதில் அமெரிக்காவில்தான் மிக அதிக பாதிப்பு உள்ளது. அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,11,721. அமெரிக்காவைப் பொறுத்தவரை டெல்டா வகை வைரஸ்தான் மிக மோசமாக தாக்கி வருகிறது. அதிலும் கொரோனா தடுப்பூசி போடாதவர்களே மிகவும் அதிகமான பாதிப்புகளுக்குள்ளாகின்றனர். அமெரிக்காவில் ஒரேநாளில் 654 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

ஒருவாரத்தில் 44% கூடுதல் பாதிப்பு

ஒருவாரத்தில் 44% கூடுதல் பாதிப்பு

அமெரிக்காவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் அதாவது ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 57,59,682. இதனால் அந்நாட்டில் மீண்டும் மருத்துவமனைகள் நிரம்பி வழியத் தொடங்கிவிட்டன. அரசியல் ரீதியாகவும் கொரோனா புதிய புயலை ஏற்படுத்தவும் தொடங்கிவிட்டது. அமெரிக்காவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 6,49,848 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த வாரங்களை ஒப்பிடுகையில் 44% அதிகம். அதேபோல் ஒருவாரத்தில் 2772 பேர் கொரோனாவால் மரணித்துள்ளனர்.

இந்தியாவில் அதிகரிக்கும் பாதிப்பு

இந்தியாவில் அதிகரிக்கும் பாதிப்பு

இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு சீராக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போதைய நிலையில் 42,817 ஆக பதிவாகி உள்ளது. இந்தியாவில் நேற்று மட்டும் 532 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,17,238. இந்தியாவில் கடந்த ஒரு வாரத்தில் 284,554 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இந்தியாவில் ஒரே வாரத்தில் 3,735 பேர் மரணித்துள்ளனர்.

Recommended Video

    WHO குழு Wuhan Lab-ஐ ஆய்வு செய்யும் முன்னால US-ன் Fort Detrick Lab-ல் ஆய்வு செய்ய வேண்டும் - China
    பிரேசிலில் உயிரிழப்புகள் உயர்வு

    பிரேசிலில் உயிரிழப்புகள் உயர்வு

    அமெரிக்கா, இந்தியாவைத் தொடர்ந்து பிரேசிலில் கொரோனா பாதிப்பு நீடிக்கிறது. இந் நாட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 40,460. பிரேசிலில் கொரோனா மரணங்கள் தொடர்ந்து அதிகரித்தே காணப்படுகிறது. பிரேசிலில் நேற்று மட்டும் 1,118 பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கின்றனர்.

    இந்தோனேசியாவில் தொடரும் உயிரிழப்புகள்

    இந்தோனேசியாவில் தொடரும் உயிரிழப்புகள்

    ஈரானில் 39,357 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஈரானில் 409 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இந்தோனேசியாவில் 35,867 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. ஆனால் உலக நாடுகளில் மிக அதிகபட்சமாக ஒரே நாளில் இந்தோனேசியாவில் 1,747 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கின்றனர். ரஷ்யாவில் 22,589 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 790. தென்னாப்பிரிக்காவில் கொரோனா பாதிப்பு 13,263 ஆக இருந்தாலும் உயிரிழப்புகள் 423 ஆக இருக்கிறது.

    ஜப்பானில் 121% பாதிப்பு அதிகரிப்பு

    ஜப்பானில் 121% பாதிப்பு அதிகரிப்பு

    ஈரானில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு 22% அதிகரித்திருக்கிறது. துருக்கியில் ஒரே வாரத்தில் 71% கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது. வங்கதேசத்தில் கொரோனா பாதிப்பு ஒரு வாரத்தில் 54% கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் ஜப்பானில் ஒரு வாரத்தில் மொத்த கொரோனா கேஸ்கள் எண்ணிக்கை 121% ஆக அதிகரித்திருக்கிறது. மொரோக்காவில் 108%, பாகிஸ்தானில் 77% அதிகம் என கொரோனா பாதிப்பு விவரங்கள் தெரிவிக்கின்றன.

    English summary
    US has reported 1,11,721 fresh Covid-19 cases and 656 deaths. According to the One Week Report, Japan reported 121% increase of Coronavirus Cases.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X