நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹைட்ராக்ஸி குளோரோகுயினால் நோயாளிகள் இறப்பது அதிகரிப்பு.. அமெரிக்காவில் அதிர்ச்சி

Google Oneindia Tamil News

நியூயார்க்: கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து எதிர்பார்த்த பலனை தரவில்லை என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால் 65வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இந்த ஆய்வு நடத்தப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    ஹைட்ராக்ஸி குளோரோகுயின் தான் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை அதிகரிக்க காரணமாம்

    உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் தான் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை அமெரிக்காவில் கொரோனாவால் 47 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 8லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் 1500 முதல் 3000 பேர் வரை உயிரிழந்து வருகிறார்கள்.

    இந்நிலையில் கொரோனாவை தடுக்க ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து நன்றாக வேலை செய்வதாக அறிவித்த டிரம்ப் அந்த மருந்தை இந்தியாவிடம் இருந்து வாங்கி குவித்தார். அமெரிக்கா வாங்கியதால் இந்த மருந்தை 55க்கும் மேற்பட்ட நாடுகள் தங்கள் நாடுகளுக்கும் வாங்கி குவித்தன. இதனால் திடீரென ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துக்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

    மலேரியா மாத்திரை.. நாம கூட அனுப்பினோமே.. அதுதான் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை அதிகரிக்க காரணமாம் மலேரியா மாத்திரை.. நாம கூட அனுப்பினோமே.. அதுதான் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை அதிகரிக்க காரணமாம்

    அமெரிக்காவில் ஆய்வு

    அமெரிக்காவில் ஆய்வு

    இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சையில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து எப்படி செயல்படுகிறது என்பது குறித்து அமெரிக்காவின் தெற்கு கரோலினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மற்றும் அஸித்ரோமைசின் மருந்துகளை உட்கொண்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற 368 பேரை ஆய்வு செய்தனர்.

    செயற்கை சுவாசம்

    செயற்கை சுவாசம்

    இந்த ஆய்வில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் அல்லது செயற்கை சுவாச கருவி பொருத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் பொதுவான சிகிச்சை முறையில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தையோ, அல்லது அந்த மருந்துடன் அஸித்ரோமைசின் மருந்தையோ சேர்த்து சாப்பிடாத நோயாளிகளுக்கு மரண அபாயமோ வெண்டிலேட்டரில் வைக்க வேண்டிய அபாயமோ குறைவாகவே உள்ளது என்று ஆய்வில் தெரியவந்ததாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

    பெண்களுக்கு இல்லை

    பெண்களுக்கு இல்லை

    ஆனால் அதற்கு நேர்மாறாக அந்த மருந்துகளை கொரோனா நோயாளிகளுக்கு அளித்து சிகிச்சை அளிக்கும் போது உயிரிழக்கும் அபாயமும் அதிகமாக உள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது ஆனால் இந்த ஆய்வு என்பது 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்குத்தான் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வு பெண்களுக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பக்க விளைவு உண்டு

    பக்க விளைவு உண்டு

    எனினும் விரிவான ஆய்வுகள் மேற்கொண்டால் தான் கொரோனா நோய் தொற்று சிகிச்சையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து எப்படி பயன்படுகிறது என்பது தெரியவரும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். தற்போதைய நிலையில் ஏற்கனவே உடல் நிலை பாதித்தவர்கள் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் சாப்பிட்டால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் உலகம் முழுவதும் மருத்துவர்கள் எச்சரித்து வருகிறார்கள்.

    English summary
    Study finds no benefit, higher death rate in patients taking hydroxychloroquine for Covid-19
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X