நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சாலை தடுப்பில் மோதி பறந்த கார்.. 6 நாள் மரத்தின் மேல் "ஹால்ட்".. பத்திரமாக இறங்கி வந்த பெண்!!

அமெரிக்காவில் நடந்த வித்தியாசமான கார் விபத்தில் இருந்து பெண் ஒருவர் சாமர்த்தியமாக தப்பித்து இருக்கிறார்.

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் நடந்த வித்தியாசமான கார் விபத்தில் இருந்து பெண் ஒருவர் சாமர்த்தியமாக தப்பித்து இருக்கிறார்.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள விக்கென்பெர்க் சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 53 வயது பெண் ஒருவர் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியபடி இருந்துள்ளார்.

இவரின் அடையாளம் வெளியிடப்படவில்லை. தற்போது இவர் நல்ல உடல்நிலையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

[டிஸ்கவுண்ட் கொடுக்காததால் ஆத்திரம்.. இருவர் சுட்டுக்கொலை.. பட்டப்பகலில் மாலில் நடந்த கொடூர கொலை!]

மரத்தில் மோதியது

மரத்தில் மோதியது

அந்த பெண் ஓட்டிய கார் வேகமாக சென்று சாலை தடுப்பின் மீது மோதியுள்ளது. இதையடுத்து அந்த கார் பறந்து சென்று சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மாட்டியுள்ளது. பூமியில் இருந்து சில அடி உயரத்தில் தொங்கியபடி அந்த கார் இருந்துள்ளது.

உள்ளேயே இருந்தார்

உள்ளேயே இருந்தார்

இந்த நிலையில் காரை ஓட்டிய அந்த பெண், காருக்குள்ளேயே இருந்துள்ளார். அவருக்கு சாப்பாடு இல்லாமல், வெளியே எழுந்து வர முடியாமல், உடலில் ஏற்பட்ட காயங்களுடன் உள்ளேயே இருந்துள்ளார். நெடுஞ்சாலை என்பதால் அந்த காரையும் யாரும் கவனிக்கவில்லை. இப்படியே 6 நாட்களை அவர் கழித்து இருக்கிறார்.

சிலர் காப்பாற்றினார்கள்

சிலர் காப்பாற்றினார்கள்

இந்த நிலையில் அங்கு டிரெக்கிங் சென்ற சுற்றுலா பயணிகள் இந்த காரை பார்த்துள்ளனர். விளையாட்டாக உள்ளே சென்று பார்க்க ஆசைப்பட்டு கார் உள்ளே சென்று இருக்கிறார்கள். அப்போதுதான் அந்த பெண் உள்ளே உயிருக்கு போராடியபடி இருந்தது தெரியவந்துள்ளது.

மருத்துவமனை

மருத்துவமனை

இதையடுத்து அந்த பெண் மீட்கப்பட்டார். அவர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். தற்போது இவர் நல்ல உடல்நிலையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

English summary
US Woman's Car went off the road, ramed in Tree, she came out after 6 days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X