நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பள்ளியில் புகுந்து துப்பாக்கி சூடு நடத்திய 2 இளைஞர்கள்.. ஒரு மாணவர் பலி.. அமெரிக்காவில் பரபரப்பு!

அமெரிக்காவில் டென்வர் பகுதியில் பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கி சூட்டில் 1 மாணவர் பலியானார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பள்ளியில் புகுந்து துப்பாக்கி சூடு நடத்திய 2 இளைஞர்கள்.. ஒரு மாணவர் பலி-வீடியோ

    நியூயார்க்: அமெரிக்காவில் டென்வர் பகுதியில் பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கி சூட்டில் 1 மாணவர் பலியானார். இந்த சம்பவம் அங்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    அமெரிக்காவில் கொலராடோ மாகாணத்தின் தலைநகர் டென்வர் பகுதியில் நிறைய பள்ளிகள் அடுத்தடுத்து இருக்கிறது. இங்கு இருக்கும் ஸ்டெம் பள்ளி மிக பிரபலமானது. இதில் 1300 பேர் படிக்கிறார்கள்.

    USA Denver School attack: 1 Student died, 15 students injured in the shooting

    இந்த நிலையில் இந்த பள்ளியில், அமெரிக்க நேரப்படி, மதியம் இரண்டு மணிக்கு இந்த துப்பாக்கி சூடு நடந்து உள்ளது. மாணவர்கள் பள்ளிக்குள் இருக்கும் போதே உள்ளே புகுந்த இரண்டு பேர் சரமாரியாக சுட்டு இருக்கிறார்கள்.

    நாளுக்கு நாள் நலிவடைந்து வரும் பேராசிரியர் அன்பழகன்.. தொடர் மருத்துவ கண்காணிப்புநாளுக்கு நாள் நலிவடைந்து வரும் பேராசிரியர் அன்பழகன்.. தொடர் மருத்துவ கண்காணிப்பு

    துப்பாக்கி சூடு நடத்திய இருவரும், பள்ளியின் வெவ்வேறு பகுதிகளுக்குள் நுழைந்து சரமாரியாக தாக்கி இருக்கிறார்கள். இந்த தாக்குதலில் ஒருவர் பலியானார். பலியான மாணவரின் வயது 15 என்று கூறப்பட்டுள்ளது.

    துப்பாக்கி சூட்டில் 15க்கும் அதிகமான மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டை நடத்திய இரண்டு பேரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இவர்களும் அதே பள்ளியை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

    இந்த தாக்குதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். காயம் அடைந்த அனைவரும் தற்போது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு இருக்கிறார்கள்.

    English summary
    USA Denver School attack: 1 Student died, 15 students injured in the deadly shooting.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X