நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னவெல்லாம் நடக்குமோ.. அமெரிக்காவில் பதிவான வெப்பநிலை.. உலகிலேயே இதுதான் மிக அதிகம்.. செம ஹீட்!

அமெரிக்காவில் இருக்கும் கலிபோர்னியாவின் டெத் வேலி பகுதியில் உலகிலேயே மிக அதிகமான வெப்பநிலை கடந்த ஞாயிற்றுக்கிழமை பதிவாகி உள்ளது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் இருக்கும் கலிபோர்னியாவின் டெத் வேலி (Death Valley) பகுதியில் உலகிலேயே மிக அதிகமான வெப்பநிலை கடந்த ஞாயிற்றுக்கிழமை பதிவாகி உள்ளது.

அமெரிக்காவில் இருக்கும் மிகவும் வறட்சியான பகுதிதான் டெத் வேலி பகுதியாகும். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்த பகுதி உள்ளது. கிட்டத்தட்ட பார்க்க பாலைவனம் போலவே இந்த பகுதி இருக்கும் .

எல்லா வருடமும் அமெரிக்காவின் இந்த பகுதியில் அதிக வெப்பநிலை பதிவாகி வருகிறது. கடல் பகுதியில் இருந்து 190 அடி உயரம் குறைவான இடத்தில் இந்த பகுதி அமைந்துள்ளது. மொஜாவ் பாலைவனத்திற்கு அருகே இந்த பகுதி அமைந்துள்ளது.

என்னாது.. அன்னபெல் பொம்மை தப்பிச்சுப் போயிருச்சா.. அலறும் அமெரிக்கா.. என்னதான் நடந்தது? என்னாது.. அன்னபெல் பொம்மை தப்பிச்சுப் போயிருச்சா.. அலறும் அமெரிக்கா.. என்னதான் நடந்தது?

எப்போதும் வழக்கம்

எப்போதும் வழக்கம்

இதனால் இங்கு எப்போதும் அதிக வெப்பநிலை பதிவாவது வழக்கம். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்கு 130 டிகிரி வெப்பநிலை பதிவானது. மதியம் மூன்று மணி அளவில் இந்த வெப்பநிலை பதிவானது. இந்த மாதம் பதிவான அதிகபட்ச வெப்பநிலை இதுதான். மிக துல்லியமாக இந்த வெப்பநிலை கணித்து இருக்கிறார்கள்.

உலகம் முழுக்க

உலகம் முழுக்க

இந்த வெப்பநிலைதான் உலகிலேயே பதிவான டாப் 3 வெப்பநிலைகளில் ஒன்றாகும். கணக்கு சரியாக இருந்தால் உலகிலேயே பதிவான டாப் 1 வெப்பநிலை இதுதான் என்கிறார்கள். இதுவரை இப்படி உலகில் எங்கும் வெப்பநிலை பதிவானது இல்லை என்று கூறுகிறார்கள். இதே இடத்தில் இதற்கு முன் 134 டிகிரி வெப்பநிலை பதிவாகி உள்ளது.

இதற்கு முன்

இதற்கு முன்

கடந்த 1913ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி இங்கு 134 டிகிரி வெப்பநிலை பதிவானது. ஆனால் அது சரியானது கிடையாது. அப்போது போதிய கருவிகள் இதை கண்டுபிடிக்க இல்லை. அதனால் அப்போது பதிவான வெப்பநிலை 130கும் குறைவாக இருக்கவே வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். 100 வருடங்களுக்கு பின் அதேபோல அதிகமான வெப்பநிலை தற்போது பதிவாகி உள்ளது.

வேண்டுகோள்

வேண்டுகோள்

இதனால் இந்த வெப்பநிலையை உலகின் மிக அதிகமான வெப்பநிலையாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதை துல்லியமாக கணித்து இருக்கிறோம். இதற்கு முன் எங்கும் இப்படி பதிவாகவில்லை. இதனால் உலக வானிலை மைய அமைப்பு இதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இது தொடர்பாக மேலும் ஆராய்ச்சி நடத்த உள்ளோம் என்று கூறியுள்ளார்.

வேறு எங்கு

வேறு எங்கு

இதற்கு முன் டெத் வேலி பகுதியில் 129 டிகிரி வெப்பநிலையில் கடந்த 2013 ஜூன் 30ம் தேதி பதிவாகி உள்ளது. அதேபோல் குவைத்தில் 2016ல் 129 டிகிரி வெப்பநிலை பதிவானது. பாகிஸ்தானில் 2017ல் 129 டிகிரி வெப்பநிலை பதிவானது. இதுவே இதுவரை அதிகமான வெப்பநிலை என்று சில வானிலை மைய ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
USA's dessert northern Mojave Desert in California records the highest weather in the earth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X