40 கோடி ரூபாயா?! அடேங்கப்பா.. காரில் காதலுடன் போன பெண்ணுக்கு அடித்த லக்.. ஆனா அங்கதான் ஒரு சிக்கல்!
நியூயார்க்: அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் தனது காதலனுடன் காரில் உல்லாசமாக இருந்த நிலையில், அவருக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பாக 40 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஏன் இந்த இழப்பீடு வழங்கப்பட்டது.. அப்படி காரில் என்ன நடந்தது? வாருங்கள் பார்க்கலாம்!
அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தை சேர்ந்தவர் அந்த பெண். இவரின் பெயர் மாற்றப்பட்டு, அவர் தொடுத்த வழக்கில் வெறும் எம்ஓ என்று மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த எம்ஓ தனது காதலனுடன் சமீபத்தில் காரில் ரைட் சென்றுள்ளார்.
தமிழ்நாட்டில் விரைவில் உயரும் ஆட்டோ கட்டணம்? புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா.. ஷாக் ஆகாதீங்க
காரில் பல்வேறு இடங்களுக்கு சென்றவர்கள், பார்க் ஒன்றில் நிறுத்தி காரில் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.

பாலியல் உறவு
பின்னர் காரிலேயே அவர்கள் பாலியல் உறவிலும் ஈடுபட்டு உள்ளனர். இதன்பின் வீட்டுக்கு வந்த எம்ஓவிற்கு உடலில் சில பிரச்சனைகள் தோன்றி உள்ளன. தொடர்ந்து காய்ச்சல், வாந்தி, பேதி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து அவர் மருத்துவ சோதனை மேற்கொண்டார். சோதனையின் முடிவில் அவருக்கு எஸ்டிடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவர் திடுக்கிட்டுள்ளார்.

எஸ்டிடி பிரச்சனை
எஸ்டிடி என்றால்.. பாலியல் உறவில் பரவும் நோய்கள் ஆகும். அந்த பெண்ணுக்கு human papillomavirus, HPV எனப்படும் கொடிய எஸ்டிடி நோய் பரவி உள்ளது. இந்த நிலையில்தான் அவர் தனது காதலனிடம் இதை பற்றி விசாரித்து உள்ளார். அவரின் காதலன் தனக்கு அந்த பிரச்சனை இருக்கிறது என்று தெரிந்தேதான் பாலியல் உறவில் ஈடுபட்டு உள்ளார். வேண்டுமென்றே தனது காதலிக்கு அவர் நோயை பரப்பி உள்ளார்.

நோய் பரப்பினார்
இந்த நிலையில் தனது காதலனுக்கு எதிராக அவர் வழக்கு தொடுத்தார். 5 மில்லியன் டாலர் இழப்பீடு கேட்டு அவர் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் வைக்கப்பட்ட வாதத்தில், காரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. காரில் சென்று காயம் ஏற்பட்டால் மட்டும் அது விபத்து கிடையாது. காரில் என்ன நடந்து, அதனால் உங்களுக்கு என்ன பிரச்சனை ஏற்பட்டாலும் விபத்துதான் என்று அந்த பெண்ணின் தரப்பு வாதம் வைத்தது.

இழப்பீடு
அதாவது காரில் அவருக்கு எஸ்டிடி நோய் பரப்ப்பப்பட்டதும் விபத்துதான். அதனால் அவருக்கு நோய் ஏற்பட்டதை விபத்தாக கருதி இன்சூரன்ஸ் கொடுக்க வேண்டும் என்று வாதம் வைத்துள்ளார். உங்கள் காரில்தான் எங்கள் கிளையண்ட்டிற்கு நோய் பரவியது. அதனால் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று வாதம் வைத்துள்ளார். இதை கோர்ட் ஏற்றுக்கொண்டுள்ளது.

இன்சூரன்ஸ்
இதையடுத்து 3 நீதிபதிகள் அமர்வு அந்த பெண்ணுக்கு இந்திய மதிப்பில் 40 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. காரில் ஏற்பட்ட விபத்து என்பதால், இன்சூரன்ஸ் நிறுவனம் இந்த தொகையை கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. GEICO என்ற இன்சூரன்ஸ் நிறுவனம் இந்த பணத்தை கொடுக்க வேண்டும். இந்த வாரம் இந்த தொகை அந்த பெண்ணுக்கு செட்டில்மென்ட் ஆகும். அந்த பெண்ணுக்கு 40 கோடி ரூபாய் கிடைக்கும் என்றாலும் அவர் இனி அந்த எஸ்டிடி நோயுடன் வாழ வேண்டும் என்பதே அவருக்கு இருக்கும் பெரிய சிக்கலாகும்!