நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஐநாவில் ஆவேசமாக பேசிய இம்ரான் கான்.. உடனே இந்திய அதிகாரி விதிஷா மைத்ரா கொடுத்த சூப்பர் பதிலடி

Google Oneindia Tamil News

Recommended Video

    இம்ரான் கான் பேச்சுக்கு பதிலடி கொடுத்த இந்திய அதிகாரி விதிஷா மைத்ரா-வீடியோ

    நியூயார்க்: கொடுத்த வாக்குறுதியின்படி , ஐநா பார்வையாளர்களை அழைத்து தனது மண்ணில் தீவிரவாதிகள் இல்லை என்பதை சரிபார்க்க பாகிஸ்தான் இம்ரான் கான் அழைப்பு விடுக்க வேண்டும் என இந்தியாவின் வெளியுறவுத்துறை முதன்மை செயலாளர் விதிஷா மைத்ரா கூறினார்.

    ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பேசிய இம்ரான் கான், காஷ்மீரில் விலங்குகளைப் போல் தடுப்புக் காவலில் 80லட்சம் மக்கள் வைக்கப்பட்டுள்ளார்கள்.

    அங்கு மனிதத்தன்மையற்ற வகையில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும். அரசியல் கைதிகளை சிறை வைக்கப்பட்டுள்ள தலைவா்களை விடுவிக்க வேண்டும். காஷ்மீா் மக்களுக்கு சுயநிர்ணய உரிமையை சா்வதேச சமுதாயம் அளிக்க வேண்டும் என்றார்

    ஜம்மு காஷ்மீர் பிரச்சனை.. போர் மூண்டால்.. ஐநா சபையில் இந்தியாவை கடுமையாக எச்சரித்த இம்ரான்கான்ஜம்மு காஷ்மீர் பிரச்சனை.. போர் மூண்டால்.. ஐநா சபையில் இந்தியாவை கடுமையாக எச்சரித்த இம்ரான்கான்

    இம்ரான் கான் பேச்சு

    இம்ரான் கான் பேச்சு

    ஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை இந்தியா தளா்த்தினால் அங்கு நிலைமை இன்னமும் மோசமாகும். அப்போதும், பாகிஸ்தான் தான் காரணம் என இந்தியா எங்களைத்தான் குற்றம்சாட்டும்.

    தாராளமாக வந்து பாருங்க

    தாராளமாக வந்து பாருங்க

    இந்தியாவும், பாகிஸ்தானும் அணுசக்தி நாடுகள். இரு நாடுகளுக்கு இடையே போர் மூண்டால் விளைவுகள் பயங்கர மோசமாக இருக்கும். பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்களை அழித்துவிட்டேன். வேண்டுமானால் ஐநா சபை குழுவினர் சோதித்து பாருங்கள் என்றார்

    தீவிரவாதிகளுக்கு பென்சன்

    இதையடுத்து இம்ரான் கான் பேசியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவின் வெளியுறவுத்துறை முதன்மை செயலாளர் விதிஷா மைத்ரா பேசினார். அப்போது அவர் கூறுகையில், ஐநா சபையில் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்ட நபருக்கு பென்சன் அளிக்கும் ஒரே நாடு.. பாகிஸ்தான் தான் என்பதை ஒப்புக்கொள்வீர்களா? அணு ஆயுத போர் வெடிக்கும் என்று இம்ரான் கான் மிரட்டுவது சிறந்த நிர்வாகிக்கான அழகு இல்லை.

    ஐநா பார்வையாளர்கள் வருவாங்க

    ஐநா பார்வையாளர்கள் வருவாங்க

    ஐநாவில் இப்போது கொடுத்த வாக்குறுதியை உறுதிப்படுத்தும் வகையில், ஐநா பார்வையாளர்களை அழைத்து தனது மண்ணில் தீவிரவாதிகள் இல்லை என்பதை சரிபார்க்க இம்ரான்கான் அழைக்க வேண்டும்.

    தீவிரவாதிகளுக்கு பென்சன்

    தீவிரவாதிகளுக்கு பென்சன்

    ஐநா பட்டியலிட்டுள்ள தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் நிதி உதவி அளித்து வருகிறது. ஐநாவால் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்ட 130 பேர் தங்கள் மண்ணில் இல்லை என்பதை பாகிஸ்தானால் மறுக்க முடியுமா? தீவிரவாத அமைப்புகளின் புகலிடமாக பாகிஸ்தான் உள்ளது." இவ்வாறு கூறினார்.

    English summary
    Vidisha Maitra, First Secretary MEA exercises India's right of reply to Pakistan PM Imran Khan's speech says, "Can Pakistan PM confirm the fact it is home to 130 UN designated terrorists and 25 terrorist entities listed by the UN, as of today?"
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X