நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹாலோவீன் ஸ்பெஷல்.. நாசா வெளியிட்ட ‘ஜேக் - ஓ-லாந்தர்’ சூரியன் போட்டோ.. பொருத்தமா இருக்கே!

நாசா வெளியிட்ட சூரியனின் புகைப்படம் சமூகவலைதளங்களை ஆக்கிரமித்து வருகிறது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: ஹாலோவீன் திருவிழாவில் இடம்பெறும் ஜேக்-ஓ-லாந்தர் பூசனிக்காய் விளக்கு போன்ற தோற்றத்தில் காட்சியளிக்கும் சூரியனின் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஹாலோவீன் திருவிழா என்பது பேய்களின் திருவிழாவாக கொண்டாடப்படும் ஒரு விடுமுறைக் கொண்டாட்டம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31ம் தேதி இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. விடுமுறை கொண்டாட்டமாக திகழும் இந்த நாளில் ஆரஞ்சு மற்றும் கருப்பு நிறத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

பேய் போல் மேக்கப் செய்து கொண்டு மற்றவர்களை பயமுறுத்தி விளையாடுவது, பலவிதமான மாறுவேடங்கள் அணிவது, மாறுவேட விருந்துகளில் கலந்து கொள்வது, சொக்கப்பனை கொளுத்துவது, பயமுறுத்தும் கதைகளைப் படிப்பது, பயமுறுத்தும் படங்களைப் பார்ப்பது ஆகியவை இந்த கொண்டாட்ட நாளில் இடம்பெறும் முக்கிய நிகழ்வுகள் ஆகும்.

 ஹாலோவீன் திருவிழா

ஹாலோவீன் திருவிழா

முதலில் ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே கொண்டாடப்பட்டு வந்த இந்த ஹாலோவீன் திருவிழா, தற்போது உலகம் முழுவதும் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவில் முக்கியமாக இடம்பெறுவது ஜேக்-ஓ-லாந்தர் எனப்படும் பூசணிக்காய் விளக்கு.

ஜேக் ஓ லாந்தர்

ஜேக் ஓ லாந்தர்

அதாவது பூசணிக்காயை பல்வேறு உருவங்களில் செதுக்கி, அதன் உள்ளே மெழுகுவர்த்தியையோ அல்லது அகல் விளக்கையோ பொருத்தி உருவகப்படுத்துவதே ஜேக்-ஓ-லாந்தர் எனப்படுகிறது. இதை ஜேக்கின் விளக்கு என்றும் அழைக்கின்றனர்.

மீண்டும் கேளிக்கைகள்

மீண்டும் கேளிக்கைகள்

கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக உலகம் மீண்டு வரக்கூடிய இந்த சூழலில் கொண்டாட்டங்களும், கேளிக்கைகளும் மீண்டும் தலைதூக்க அரம்பித்துள்ளன. இதில் ஹாலோவீன் திருவிழாவும் முக்கிய பங்கு வகித்து வருகிறது.

கொண்டாட்டங்கள் தொடக்கம்

கொண்டாட்டங்கள் தொடக்கம்

ஹாலோவீனுக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் மக்கள் இப்போதே கொண்டாட்டங்களை தொடங்கிவிட்டனர். சமூகவலைதளங்களில் பலவிதமான ஹாலோவீன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மக்கள் பகிர்ந்துவருகிறார்கள். அதில் நாசாவும் இணைந்துள்ளது.

சூரியனின் போட்டோ

சூரியனின் போட்டோ

ஹாலோவீன் திருவிழாவையொட்டி சூரியனின் புகைப்படம் ஒன்றை நாசா தனது சமூகவலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த புகைப்படத்தில் வட்டவடிவில் தீப்பிழப்பாக காட்சியளிக்கும் கதிரவனை பார்ப்பதற்கு, ஜேக்-ஓ-லாந்தர் பூசணிக்காய் போலவே இருக்கிறது.

பழைய புகைப்படம்

பழைய புகைப்படம்

இது இப்போது எடுக்கப்பட்ட சமீபத்திய சூரியனின் புகைப்படம் அல்ல. கடந்த 2014ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் தான். ஆனாலும் ஹாலோவீன் திருவிழாவுடன் மிகவும் பொருந்திப் போகிறது இந்த புகைப்படம்.

English summary
A image of the sun shared by NASA shows the active regions of the star resembling a huge flaming jack-o’-lantern.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X