இது மட்டும் நடந்தால்.. ஓசோன் படலமே அழிந்துவிடும்.. நொடியில் வெப்பநிலை உயரும்.. நாசா கடும் எச்சரிக்கை
நியூயார்க்: எங்க பாஸ் வீட்டை விட்டு வெளியவே போக முடியல.. சுட்டு எரிக்குது.. என்று கவலைப்படுகிறீர்களா? உங்களுக்கு ஒரு கெட்ட செய்தி இருக்கிறது. நம் பூமியின் வெப்பம் பல மடங்கு அதிகரிக்க போவதாக நாசா எச்சரித்து உள்ளது. மனித குலத்திற்கே பாதிப்பு ஏற்படுத்தும் அளவிற்கு மிக அதிக அளவில் வெப்பம் உயர வாய்ப்புள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
உலகம் முழுக்க வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இனிமேல் நாம் வாழப்போவதே பேரிடர்களுக்கு இடையில்தான் என்று ஐநாவும் தெரிவித்துவிட்டது.
இந்தியாவில் கோடை காலத்தில் கடுமையான வெப்பநிலை நிலவி வருகிறது. .9 மாநிலங்களில் கடந்த 122 வருடங்களில் இல்லாத அளவிற்கு கடந்த ஏப்ரல் மாதம் வெப்பநிலை பதிவாகி உள்ளது. இந்தியா முழுக்க சராசரியாக 35.05 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.

எப்படி?
ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், லடாக், ஹரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இந்த ஏப்ரல் மாதத்தில் பதிவான வெப்பநிலைதான் கடந்த 122 வருடங்களில் பதிவான மிக அதிக வெப்பநிலை ஆகும். இந்த நிலையில் எரிமலை வெடிப்புகள் காரணமாக மொத்தமாக ஓசோன் படலமே காணாமல் போக வாய்ப்பு உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

எரிமலை வெடிப்பு
எரிமலை வெடிப்புகள் வரும் காலத்தில் மொத்தமாக ஓசோன் படலத்தை அழித்து விடும் வாய்ப்புகள் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நாசா வெளியிட்டுள்ள எச்சரிக்கையை தொடர்ச்சியாக அடுத்தடுத்து ஏற்படும் எரிமலை வெடிப்புகளை Flood Basal Eruption எரிமலை வெடிப்புகள் என்பார்கள். அதாவது பூமியில் இருக்கும் எரிமலைகள் திடீரென பல வருடங்களுக்கு அடுத்தடுத்து குறிப்பிட்ட இடைவெளியில் வெடிக்கலாம்.

பல ஆண்டுகள்
அல்லது பல நூறு ஆண்டுகள் இடைவெளியில் வெடிக்கலாம். இதை Flood Basal Eruption என்பார்கள். இதற்கு முன் பூமியில் அப்படி எரிமலைகள் வரிசையாக பல ஆண்டுகள் இடைவெளியில் வெடித்து இருக்கிறது. அப்போதெல்லாம் பல்வேறு உயிரினங்கள் மொத்தமாக அழிந்து இருக்கின்றன. உதாரணமாக 15 மில்லியன் மற்றும் 17 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பசிபிக் பகுதியில் எரிமலை தொடர்ந்து 2 மில்லியன் ஆண்டுகள் எரிமலை விட்டு விட்டு வெடித்து உள்ளது.

உயிரினங்கள் அழிந்தன
இதில் அப்போது இருந்த பல உயிரினங்கள் அழிந்தன. அதேபோல் இப்போதும் பூமியில் நடந்து வருவதாக நாசா தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஓசோன் பட்டாளமே மொத்தமாக அழிந்து போக வாய்ப்பு உள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது. அதன்படி எரிமலை வெடிப்புகள் சல்பர் ஆக்சைட்வானத்திற்கு செல்லும். இது ஏரோசால்களை உருவாக்கும். இந்த ஏரோசால் அகச்சிவப்பு ரேடியஷன் கதிர்களை பூமியில் விடும். இதனால் வெப்பநிலை பூமியில் அதிகரிக்கும்.

தண்ணீர் ஆவியாகும்
இதன் காரணமாக 10 ஆயிரம் சதவிகிதம் தண்ணீர் கூடுதலாக ஆவி ஆகும். இந்த ஆவி மேலே செல்லும் போது எல்லாம் சேர்ந்து ஓசோன் படலத்தை மொத்தமாக அழிக்கும் என்று நாசா கூறியுள்ளது. மொத்தமாக ஓசோன் படலமே காணாமல் போக வாய்ப்பு உள்ளதாக நாசா எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. ஒரு காலத்தில் மார்ஸ். வீனஸ் போன்ற கிரகங்களில் இது போன்று தண்ணீர் இருந்துள்ளது. அப்போது அங்கு ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளால், ஏரோசால் உருவாகி, இதனால் வெப்பநிலை அதிகமானது.

தண்ணீர்
அது தண்ணீரை ஆவியாக்கி பின்னர் அதுவே அங்கு ஓசோன் படலம் காணாமல் போகவும் காரணமாக அமைந்ததாக நாசா தெரிவித்துள்ளது. அதே நிலைமை நம் பூமிக்கும் வரலாம் என்று நாசா தெரிவித்துள்ளது. எரிமலை வெடிப்பை நாம் தடுக்க முடியாது. பூமியின் வெப்பநிலையை கட்டுப்படுத்த வேண்டும். இதன் மூலம் நீர் ஆவியாவதை குறைக்க முடியும். இதனால் ஓசோன் படலத்தையும் காக்க முடியும் என்று நாசா அறிவுறுத்தி உள்ளது.