நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமெரிக்க காட்டுத் தீ.. வாழ்க்கையே இதை நம்பித்தான் இருக்கிறது.. ஒபாமா உருக்கம்..டிரம்பிற்கு நெருக்கடி

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ள நிலையில், வருகின்ற அதிபர் தேர்தலை நம்பித்தான் மக்களின் வாழ்க்கையே இருக்கிறது என்று முன்னாள் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இருக்கும் கலிபோர்னியா, ஒரிகான் மற்றும் வாஷிங்டன் ஆகிய மாகாணங்களில் இந்த காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. அங்கு 90க்கும் அதிகமான இடங்களில் தனி தனியாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக 20 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு நாசம் அடைந்து இருக்கலாம் என்று கூறுகிறார்கள். பல்லாயிரம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். மூன்று மாதங்களில் ஏற்பட்டு இருக்கும் இந்த பேரிடர் மிக மோசமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

கொட்டிய சாம்பல்.. அடுத்தடுத்து சிவப்பாக மாறிய நகரங்கள்.. அமெரிக்காவை உலுக்கிய சம்பவம்..என்ன நடந்தது?கொட்டிய சாம்பல்.. அடுத்தடுத்து சிவப்பாக மாறிய நகரங்கள்.. அமெரிக்காவை உலுக்கிய சம்பவம்..என்ன நடந்தது?

ஒபாமா டிவிட்

ஒபாமா டிவிட்

அமெரிக்காவில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ள நிலையில், வருகின்ற அதிபர் தேர்தலை நம்பித்தான் மக்களின் வாழ்க்கையே இருக்கிறது என்று முன்னாள் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். ஒபாமா தனது டிவிட்டில், மேற்கு கடற்கரை பகுதியில் ஏற்பட்டு இருக்கும் இந்த தீ காலநிலை மாற்றம் நமது வாழ்க்கையை எப்படி பாதிக்கும் என்பதற்கான உதாரணம் ஆகும். வரும் தேர்தலில் நாம் அளிக்கும் வாக்கு மூலம் மட்டுமே நமது உலகத்தை காக்க முடியும். உங்கள் வாழ்க்கையே இதை நம்பித்தான் இருக்கிறது என்பதை நினைவில் வைத்து வாக்களியுங்கள், என்று ஒபாமா கூறியுள்ளார்.

காலநிலை

காலநிலை

அமெரிக்காவில் இந்த தீ ஏற்பட காரணம் காலநிலை மாறுபாடு ஆகும். கடந்த மாதம் முழுக்க இந்த மூன்று மாகாணங்களில் வெப்பநிலை அதிகம் இருந்தது. அங்கு நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. கடும் வறட்சி மற்றும் வெப்பநிலைதான் காட்டு தீயை உருவாக்கி உள்ளது. இதனால் காட்டில் வெப்பநிலை அதிகரித்து, அதனால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்று சுற்றுசூழல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

டிரம்ப் என்ன சொன்னார்

டிரம்ப் என்ன சொன்னார்

இந்த நிலையில் இந்த காட்டுத் தீக்கு எதிராக டிரம்ப் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார் உள்ளது. டிரம்ப் இதை பற்றி குரல் கொடுக்கவில்லை. கடந்த 4 வருடமாக கலிபோர்னியாவில் காட்டுத் தீ அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆனால் டிரம்ப் இதற்காக எதுவும் செய்யவில்லை. 4 வருடங்களில் அவர் உறுதியாக காலநிலை மாற்றத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்து இருந்தால் இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டு இருக்காது என்கிறார்கள்.

முடிவு என்ன

முடிவு என்ன

டிரம்ப் எடுத்த தவறான முடிவுகள்தான் இந்த காட்டு தீ வருடா வருடம் அமெரிக்காவில் பரவ காரணம் என்று புகார்கள் வைக்கப்பட்டு வருகிறது. அதிலும் இந்த முறை வாஷிங்டன் வரை தீ பரவி உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில் இந்த காட்டுத் தீ அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. மூன்று மாகாணங்களின் தேர்தல் முடிவுகளில் இந்த காட்டுத் தீ பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

English summary
Vote like your life depends on it says Obama on WildFire in the USA states.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X