நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

21 ஆயிரம் கோடி நிதி உதவி.. அள்ளிக்கொடுத்த வாரன் பப்ஃபெட்.. அதுவும் பில் கேட்ஸுக்கு.. ஏன் தெரியுமா?

Google Oneindia Tamil News

நியூயார்க்: உலகின் பெரிய பணக்காரர்களில் ஒருவர் மற்றும் பங்கு சந்தை புலி என்று அழைக்கப்பட கூடிய வாரன் பப்ஃபெட் மொத்தம் 21 ஆயிரம் கோடி ரூபாயை தானமாக கொடுத்து இருக்கிறார். அதிலும் இவர் இந்த நிதியை யாருக்கு கொடுத்து இருக்கிறார் என்பது தெரிந்தால் ஆடிப்போய் விடுவீர்கள்.

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான வாரன் பப்ஃபெட் கடந்த 2006ல் இருந்து தனது சொத்துக்களில் இருந்து அவ்வப்போது நிதி உதவி அளித்து வருகிறார். உலகின் முன்னணி நிதி உதவி செய்யும் கோடீஸ்வரராக இவர் இருக்கிறார்.

பொதுவாக இவர் தனது பெர்சைர் ஹாத்வே நிறுவனத்தின் பங்குகளை இலவசமாக பிறருக்கு அளித்து அதன் மூலம் நிதி உதவிகளை அளித்து வருகிறார். இதுவரை கடந்த 2006ம் ஆண்டில் இருந்து 37 பில்லியனுக்கும் அதிகமாக இவர் உதவிகளை செய்து இருக்கிறார்.

ஜார்ஜ் ஃப்ளாய்ட்-க்கு நீதி கோரி போராட்டம்- முதியவரை கீழே தள்ளிவிட்ட நியூயார்க் போலீஸ்- வீடியோ வைரல் ஜார்ஜ் ஃப்ளாய்ட்-க்கு நீதி கோரி போராட்டம்- முதியவரை கீழே தள்ளிவிட்ட நியூயார்க் போலீஸ்- வீடியோ வைரல்

எவ்வளவு கொடுத்தார்

எவ்வளவு கொடுத்தார்

இந்த நிலையில் வாரன் பப்ஃபெட் மொத்தம் 21 ஆயிரம் கோடி ரூபாயை தானமாக கொடுத்து இருக்கிறார். தனது பெர்சைர் ஹாத்வே நிறுவனத்தின் பங்குகளில் இருந்து இவர் நிதி உதவியை அளித்து இருக்கிறார். அவர் தற்போது பெரிய அளவில் பொருளாதார சரிவை சந்தித்து உள்ளார். பணக்காரர்கள் பட்டியலிலும் கூட அவர் பின்னுக்கு சென்று இருக்கிறார்.

ஆனாலும் உதவி

ஆனாலும் உதவி

ஆனாலும் கூட அவர் இந்த உதவிகளை செய்து உள்ளார். இவர் இந்த நிதியை யாருக்கு கொடுத்து இருக்கிறார் என்பது தெரிந்தால் ஆடிப்போய் விடுவீர்கள். உலகின் இன்னொரு டாப் கோடீஸ்வரரான பில் கேட்ஸ் மற்றும் அவரின் மனைவி மெலிண்டா கேட்ஸ் ஆகியோரின் நிதி உதவி மையத்திற்கு இவர் நிதி உதவியை வழங்கி இருக்கிறார். இது உலகம் முழுக்க பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

கொரோனா நிதி

கொரோனா நிதி

இந்த நிதியில் பெரும் அளவு நிதி கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கு பயன்படுத்தப்பட உள்ளது. தற்போது பில் கேட்ஸ் தனது பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் மூலம் கொரோனா தடுப்பு மருந்துக்கான ஆராய்ச்சி நடந்து வருகிறது. இதற்கு நிதி உதவி அளிக்கும் வகையில், கொரோனா தடுப்பு ஆராய்ச்சியை தீவிரப்படுத்தும் வகையிலும் இந்த நிதி உதவியை அளித்து இருக்கிறார்.

வேறு நிறுவனம்

வேறு நிறுவனம்

இது மட்டுமின்றி அவர் இன்னும் 4 நிறுவனங்களுக்கு இந்த நிதி உதவியை அளித்து இருக்கிறார். இதில் அவரின் குழந்தைகளின் தொண்டு நிறுவனமும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிதி குழந்தைகளின் கல்விக்காக பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு நாட்களுக்கு முன் வாரன் பெரிய அளவில் நிதி இழப்பை சந்தித்தார். அதற்கு இடையிலும் அவர் நிதி உதவி செய்து இருக்கிறார்.

English summary
Billionaire Warren Buffett helps 21 Thousand crore rupees help for Bill Gates foundation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X