நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜார்ஜின் கொடூர கொலை.. வெள்ளை மாளிகை செல்லும் சாலையின் பெயரையே மாற்றிய மேயர்.. டிரம்ப் அதிர்ச்சி!

Google Oneindia Tamil News

நியூயார்க்: வாஷிங்டன் பகுதியில் வெள்ளை மாளிகைக்கு செல்லும் சாலைக்கும் அம்மாகாண மேயர் "Black Lives Matter Plaza" என்று பெயர் வைத்து இருக்கிறார். கருப்பின் மக்களின் உயிர் முக்கியம் என்று பொருள்படும் வகையில் இந்த பெயர் வைத்து இருக்கிறார்

அமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்டது உலகையே உலுக்கி உள்ளது. மொத்தமாக அந்த நாட்டை இந்த சம்பவம் புரட்டிப் போட்டு உள்ளது. அமெரிக்காவில் கடந்த 24ம் தேதி ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பின இளைஞர் போலீசாரால் கொல்லப்பட்டார்.

அவரை போலீசார் கைது செய்து அழைத்து செல்லும் போது கழுத்தை நெரித்தலில் சம்பவ இடத்திலேயே ஜார்ஜ் பலியானார் . இதற்கு எதிராக கடுமையான போராட்டங்கள் நடக்கிறது. இதனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிலைகுலைந்து போய் உள்ளார்.

முடியவே முடியாது.. புரட்சி செய்யும் ஆர்மி ஜெனரல்.. டிரம்பை கடுமையாக எதிர்க்கும் அமெரிக்க ராணுவம்! முடியவே முடியாது.. புரட்சி செய்யும் ஆர்மி ஜெனரல்.. டிரம்பை கடுமையாக எதிர்க்கும் அமெரிக்க ராணுவம்!

கடும் எதிர்ப்பு

கடும் எதிர்ப்பு

இந்த நிலையில் அங்கு இன்னும் போராட்டங்கள் நிற்காமல் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த போராட்டம் காரணமாக அதிபர் டிரம்ப் அங்கு கடுமையான எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார். வாஷிங்டன் பகுதியில் வெள்ளை மாளிகைக்கு செல்லும் சாலைக்கும் அம்மாகாண மேயர் "Black Lives Matter Plaza" என்று பெயர் வைத்து இருக்கிறார். கருப்பின் மக்களின் உயிர் முக்கியம் என்று பொருள்படும் வகையில் இந்த பெயர் வைத்து இருக்கிறார்

வாஷிங்டன் மேயர் பெயர்

இது தொடர்பாக வாஷிங்டன் மேயர் முறியள் பௌசர் அளித்த பேட்டியில், கருப்பின மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துப்படும் வன்முறைகளை எதிர்க்க முடியாது. இதை எதிர்க்கும் விதமாக இந்த வெள்ளை மாளிகை சாலைக்கு இப்படி பெயர் வைத்து இருக்கிறேன். இந்த போராட்டங்களை டிரம்ப் சரியாக எதிர்கொள்ளவில்லை. அவர் தேசிய பாதுகாப்பு படையை களமிறக்கியதை ஏற்க முடியாது.

என்ன பேட்டி

என்ன பேட்டி

உடனடியாக டிரம்ப் தேசிய பாதுகாப்பு படைகளை திரும்ப பெற வேண்டும். நாங்கள் அமைதியை விரும்பும் மக்கள். எங்களுக்கு எதிராக ராணுவத்தையே களமிறக்க டிரம்ப் நினைக்கிறார். அமெரிக்க மண்ணில் அமெரிக்க மக்களுக்கு எதிராக ராணுவத்தை களமிறக்க நினைக்கிறார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. ராணுவத்தை களமிறக்குவதாக டிரம்ப் போட்ட திட்டம் தோல்வி அடைந்துவிட்டது, என்று மேயர் குறிப்பிட்டு இருக்கிறார்.

Recommended Video

    George Floyd-பிரேத பரிசோதனை அறிக்கை கூறுவது என்ன?
    ராணுவம் எதிர்ப்பு

    ராணுவம் எதிர்ப்பு

    அமெரிக்காவில் அதிபர் டிரம்பிற்கு எதிராக வரிசையாக முக்கிய அதிகாரிகள் எதிர்ப்பு குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர். அமெரிக்காவில் ராணுவத்தை இறக்கும் டிரம்பின் முடிவை பென்டகன் தலைவர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் கடுமையாக எதிர்த்தார். அதேபோல் டிரம்பின் இந்த முடிவை அமெரிக்க ராணுவத்தின் ஜெனரல் மார்க் மில்லியும் எதிர்த்து உள்ளார்.

    English summary
    Washington mayor Muriel changes the white house road name to Black Lives matter, opposing Trump.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X