"தவளை ஆர்மி"..வீட்டு கொல்லைப்புறத்தில் கூட்டமாக நின்ற 14 லட்சம் தவளைகள்! சின்ன தவறால் வந்த விபரீதம்
நியூயார்க்: ஒரே இடத்தில் 14 லட்சம் தவளைகள் கூட்டமாக ஆர்மி போல நிற்கும் வீடியோ ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
மனிதன் நிலவு, செவ்வாய் கிரகம் தொடங்கி விண்வெளியில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டாலும்.. இன்னும் பூமியில் நமக்கே தெரியாத பல அதிசயங்கள் உள்ளன. அதிலும் பூமியில் நமக்கே தெரியாத பல விலங்குகள், பறவைகள், உயிரினங்கள் உள்ளன.
இந்த நிலையில்தான் நெட்டிசன் பகிர்ந்த வீடியோ ஒன்று இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.

தவளை
@thinfrog என்ற ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. நியூயார்க்கை சேர்ந்த அவர் தனது வீட்டு பின்புறத்தில் இந்த வீடியோவை எடுத்துள்ளார். அந்த வீடியோவில் அவரின் வீட்டு கொல்லைப்புறம் முழுக்க முழுக்க தவளைகளாக இருந்துள்ளது. குட்டி குட்டியாக தரையை மொத்தமாக மறைத்து தவளைகள் இருந்துள்ளன. அவர் கேமராவை திருப்பும் பக்கம் எல்லாம் தவளைகள்தான் இருந்துள்ளன.

வீடியோ
இந்த வீடியோவை பகிர்ந்த அவர்.. இதோ தவளைகளின் ஆர்மி என்று குறிப்பிட்டு உள்ளார். மொத்தம் 14 லட்சம் தவளைகள் அங்கு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் வியந்து போய் உள்ளனர். என்னது இவ்வளவு தவளைகளா பார்க்கவே ஆச்சர்யமாகவும், அதே சமயம் அருவெறுப்பாகவும் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளனர். இன்னும் சிலர் உங்களுக்கு எப்படி இதில் 14 லட்சம் தவளைகள் இருப்பது தெரியும் என்றும் கேட்டுள்ளனர்.

நெட்டிசன்
இதற்கு பதில் அளித்த அந்த நெட்டிசன், நான்தான் இந்த தவளைகளை வளர்க்கிறேன். வீட்டிற்கு பின் பக்கம் இருக்கும் குளத்தில் தவளைகளை வளர்க்கிறேன். இதில் 14 லட்சம் + முட்டைகளை போட்டு இருந்தோம். அவை வளர்ந்து இப்போது குட்டிகளாக மாறி உள்ளன. இப்போது என் வீட்டு பின் பக்கத்தை மொத்தமாக இந்த தவளைகள் ஆக்கிரமித்துள்ளன.

வளர்த்தார்
சரியாக 95 நாட்களுக்கு முன் இந்த முட்டைகளை போட்டோம். அவை தற்போது வளர்ந்து உள்ளன. என் வீட்டு பின் பக்கம் இனி நான் நடக்கவே முடியாது. நான் முதலில் தவளைகளை அதிகம் வளர்க்கலாம் என்று நம்பி முட்டைகள் போட்டேன். ஆனால் இவ்வளவு தவளைகள் இருப்பதை பார்க்கும் போது தவறான முடிவு எடுத்துவிட்டேனோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

தவறு
நான் இதை ஒரு சோதனை முயற்சியாக செய்து பார்த்தேன். ஆனால் இப்போது விளைவுகள் மோசமாகி உள்ளது. என் பக்கத்துக்கு வீடுகளில் தவளை புகுந்துவிட்டதால் பிரச்சனையாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த செயலை அப்பகுதி மக்கள் பலர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். இது சுற்றுசுழல் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றும் சூழலியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.