நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காஷ்மீர்.. சிஏஏ போராட்டம்.. இரண்டையும் கவனித்துக் கொண்டு இருக்கிறோம்.. அமெரிக்கா அதிரடி கருத்து!

ஜம்மு காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் 6 மாதங்களாக வீட்டு சிறையில் இருப்பதையும், நாட்டில் நடக்கும் சிஏஏ போராட்டங்களையும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவின் ம

Google Oneindia Tamil News

நியூயார்க்: ஜம்மு காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் 6 மாதங்களாக வீட்டு சிறையில் இருப்பதையும், நாட்டில் நடக்கும் சிஏஏ போராட்டங்களையும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவின் முதன்மை துணை உதவி செயலாளர், ஆலிஸ் வெல்ஸ் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீக்கியது. அப்போது தொடங்கிய பிரச்சனை இன்னும் முடியவில்லை.ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை தொடர்ந்து அங்கு மிகவும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இன்னும் காஷ்மீர் ராணுவ கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.

காஷ்மீர் பிரச்சனையை தொடர்ந்து சிஏஏ பிரச்சனை நாடு முழுக்க எழுந்துள்ளது. இந்தியாவில் நடக்கும் சிஏஏ போராட்டங்களை உலக நாடுகள் உன்னிப்பாக கவனிக்க தொடங்கி உள்ளது.

குரூப் 4 முறைகேடு.. மேலும் ஒரு இடைத்தரகரை கைது செய்தது சிபிசிஐடி போலீஸ்குரூப் 4 முறைகேடு.. மேலும் ஒரு இடைத்தரகரை கைது செய்தது சிபிசிஐடி போலீஸ்

என்ன கருத்து

என்ன கருத்து

இந்த நிலையில் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவின் முதன்மை துணை உதவி செயலாளர், ஆலிஸ் வெல்ஸ் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், காஷ்மீரில் சில சிறிய சிறிய மாற்றங்கள் நடந்து வருகிறது. அங்கு குறைந்த பட்சம் இணையம் சில அலுவலகங்களில் மட்டும் வழங்கப்பட்டு இருக்கிறது. வெளிநாட்டு தூதர்கள், அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட அனுமதி பெற்றுள்ளனர். இதை உலக செய்தி நிறுவனங்களும் செய்திகளாக வெளியிட்டது.

நல்ல முன்னேற்றம்

நல்ல முன்னேற்றம்

இது நல்ல முன்னேற்றம். எங்கள் நாட்டு அதிகாரிகள் அங்கு செல்லவும் அனுமதிக்கப்பட வேண்டும். அடிக்கடி அங்கு வெளிநாட்டு அதிகாரிகள் சென்று ஆய்வு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். அதேபோல் அங்கு கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டு இருக்கும் அரசியல்வாதிகளை வெளியே விட வேண்டும். அவர்கள் பல நாட்களாக வீட்டு காவலில் இருக்கிறார்கள்.

காவலில் இருக்க கூடாது

காவலில் இருக்க கூடாது

அவர்கள் இனியும் வீட்டு காவலில் இருக்க கூடாது. அவர்களை வெளியே விடுவதோடு, அவர்கள் மக்களிடம் பேசவும் அனுமதிக்கப்பட வேண்டும். அதேபோல் இந்தியாவில் கொண்டு வரப்பட்டு இருக்கும் சிஏஏ சட்டம் நேர்மையானது இல்லை. அது பாகுபாடு பார்க்கும் சட்டம் ஆகும். இஸ்லாம் மதத்தை மட்டும் விட்டுவிட்டு இப்படி சட்டம் கொண்டு வருவது மிகவும் தவறானது. அது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.

அமெரிக்கா கவனித்து வருகிறது

அமெரிக்கா கவனித்து வருகிறது

இந்தியாவில் நடக்கும் போராட்டங்களை அமெரிக்கா கவனித்து வருகிறது. சிஏஏ சட்டம் தொடர்பாக நடந்து வரும் மாற்றங்களை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். மக்கள் இதற்கு எதிராக தெருவில் இறங்கி போராடுவது எங்களுக்கு தெரியும். மீடியாக்களில் வரும் செய்திகளை பார்க்கிறோம். அரசியல் தலைவர்கள் பேசும் கருத்துக்களை பார்க்கிறோம், என்று ஆலிஸ் வெல்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

English summary
We are watching CAA protest in India and Lockdown in Kashmir closely says The USA.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X