நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா வேக்சின் "பேட்டன்டை" இந்தியாவிடம் தர முடியாது.. பில்கேட்ஸ் பரபரப்பு.. ஏன் இப்படி பேசினார்?

Google Oneindia Tamil News

நியூயார்க்: இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு கொரோனா வேக்சினுக்கான பேட்டன்டையோ அதன் தொழில்நுட்பத்தையோ கொடுக்க முடியாது என்று பில்கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

Recommended Video

    No சொன்ன Bill Gates | Corona Vaccine Formula-வை இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம் | Oneindia Tamil

    உலகம் முழுக்க கொரோனா பரவி வரும் நிலையில், கொரோனாவிற்கு எதிரான வேக்சின் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சியில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் முக்கிய பங்கு வகித்து வருகிறார். தனது பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் தொண்டு நிறுவனம் மூலம் உலகம் முழுக்க பல நாடுகளுக்கு கொரோனா வேக்சின் சென்றடைய இவர் காரணமாக இருந்தார்.

    கொரோனா வேக்சின் உற்பத்திக்காக கிட்டத்தட்ட 300 மில்லியன் டாலர் வரை இவரின் தொண்டு நிறுவனம் முதலீடு செய்துள்ளது. கொரோனா வேக்சின் ஆராய்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் ஜெர்மனி நிறுவனமான க்யூர் வேக் நிறுவனத்தில் கிட்டத்தட்ட 40 மில்லியன் டாலரை பில்கேட்ஸ் முதலீடு செய்துள்ளார்.

    நாடு முழுவதும் கொத்து கொத்தாக பரவும் கொரோனா ஒரே நாளில் 4.12 லட்சம் பேர் பாதிப்பு - 4000 பேர் மரணம்நாடு முழுவதும் கொத்து கொத்தாக பரவும் கொரோனா ஒரே நாளில் 4.12 லட்சம் பேர் பாதிப்பு - 4000 பேர் மரணம்

    எப்படி

    எப்படி

    அதோடு ஆக்ஸ்போர்ட் - ஆஸ்டர்செனகா நிறுவனத்தின் வேக்சின் ஆராய்ச்சிக்கும், உலக சுகாதார மையத்தின் பல்வேறு வேக்சின் ஆராய்ச்சிக்கும் பில்கேட்ஸின் முதலீடும் முக்கிய பங்கு வகித்தது. ஆனால் இந்த வேக்சின் பார்முலா மற்றும் பேட்டன்ட் மற்ற நாடுகளுக்கு செல்வதை பில்கேட்ஸ் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. முக்கியமாக ஆக்ஸ்போர்ட் வேக்சினை ஓபன் மார்கெட்டிற்கு கொண்டு செல்ல ஆஸ்டர்செனகா நிறுவனம் விரும்பிய போது அதை பில்கேட்ஸ் தடுத்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

    விரும்பவில்லை

    விரும்பவில்லை

    இப்படிப்பட்ட நிலையில்தான் இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு வேக்சின் தொழில்நுட்பத்தை கொடுப்பதை விரும்ப மாட்டேன் என்று பில்கேட்ஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக பில்கேட்ஸ் அளித்துள்ள பேட்டியில், இந்தியா போன்ற நாடுகளுக்கு பேட்டன்டை கொடுப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. அவர்களிடம் இதற்கான தொழில்நுட்பம் இல்லை.

    இல்லை

    இல்லை

    இந்தியா போன்ற நாடுகளிடம் இதற்கான கட்டமைப்பு, திறன் வசதிகள் இல்லை. அவர்களிடம் இந்த பேட்டன்டை கொடுப்பது வேக்சினின் பாதுகாப்பை குலைக்கும். எங்களிடம் இதற்கான கட்டமைப்பு உள்ளது. ஜான்சனன் & ஜான்சன் போன்ற நிறுவனத்தின் வேக்சினை இந்தியாவில் உற்பத்தி செய்வது கடினம். இதற்கான கட்டமைப்பை அங்கு ஏற்படுத்துவது கடினம்.

    கடினம்

    கடினம்

    இந்தியா மட்டுமின்றி மற்ற வளரும் நாடுகளில் இதற்கான அமைப்புகளை ஏற்படுத்திக்கொண்டு இருக்க முடியாது. , என்று பில்கேட்ஸ் கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சு கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. முக்கியமாக வேக்சின் கட்டுப்பாட்டையும், வேக்சின் உலக மார்க்கெட்டையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள பில்கேட்ஸ் விரும்புவதாக புகார்கள் வைக்கப்பட்டுள்ளது.

    பில்கேட்ஸ் வேக்சின்

    பில்கேட்ஸ் வேக்சின்

    வேக்சின் சந்தையை இப்படி பில்கேட்ஸ் கட்டுப்படுத்த நினைப்பதை, வேக்சின் ரேசிசம் என்று உலக செய்தி நிறுவனங்கள் பல விமர்சனம் செய்துள்ளன. ஒரு கொள்ளை நோய் வரும் போது இது போன்ற மருந்துகளை உடனே மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். பணம் மற்றும் லாபத்திற்கு இப்படி இக்கட்டான சூழ்நிலையில் வேக்சின் தொழில்நுட்பத்தை தர மறுப்பது என்பது மிக மோசமான செயல் என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றது.

    இந்தியா

    இந்தியா

    பில்கேட்ஸ் இப்படி இந்தியாவை இகழும் வகையில் பேசி உள்ள நிலையில், ஆக்ஸ்போர்ட் வேக்சின் இந்தியாவில்தான் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. சீரம் நிறுவனம் மூலம் இந்தியாவில் வேக்சின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் பேட்டன்ட் இந்தியாவிடம் இல்லை என்றாலும், உற்பத்தி சீரம் நிறுவனம் மூலம் இந்தியாவில் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    English summary
    We can't share the Coronavirus vaccine patent with Countries like India says Bill Gates on open vaccine market.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X