நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மீண்டும் "ஹு"வில் சேர போகிறோம்.. சீனாவிற்கு வார்னிங் கொடுத்த பிடன்.. அதிரடி பாதையில் அமெரிக்கா?

Google Oneindia Tamil News

நியூயார்க்: உலக சுகாதார மையத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என்று அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றுள்ள ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வென்றுள்ள நிலையில், அமெரிக்காவின் அடுத்தடுத்த மூவ்களை உலக நாடுகள் உற்றுநோக்க தொடங்கி உள்ளது. முக்கியமாக சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் பிடனின் செயல்பாடுகளை கவனிக்க தொடங்கி உள்ளது.

அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற பின் பிடன் என்ன எல்லாம் செய்வார், சீனா, ரஷ்யா போன்ற நாடுகளை எப்படி நடத்துவார் என்ற கடுமையான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சாதி கலவரத்தை தூண்ட திட்டமிட்டார்.. சித்திக் கப்பான் வழக்கில்.. உ.பி அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதம்சாதி கலவரத்தை தூண்ட திட்டமிட்டார்.. சித்திக் கப்பான் வழக்கில்.. உ.பி அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதம்

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

இந்த நிலையில் அமெரிக்க அதிபராக பதவி ஏற்றபின் உலக சுகாதார மையத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என்று பிடன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலுக்கு உலக சுகாதார மையம்தான் காரணம் என்று டிரம்ப் குற்றஞ்சாட்டி இருந்தார். சீனாவிற்கு உலக சுகாதார மையம் ஆதரவாக செயல்படுகிறது என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.

நிதி

நிதி

இதனால் உலக சுகாதார மையத்திற்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதியை டிரம்ப் நிறுத்தினார். அதோடு உலக சுகாதார மையத்தின் உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் அமெரிக்கா விலகியது. இந்த நிலையில் அதிபராக பொறுப்பேற்ற பின் மீண்டும் அமெரிக்காவை உலக சுகாதார மையத்தில் உறுப்பினராக சேர்ப்பேன் என்று பிடன் கூறியுள்ளார்.

பேட்டி

பேட்டி

சீனாவை சாமளிக்க இதுதான் வழி என்று அவர் கூறியுள்ளார்.இது தொடர்பாக பேட்டி அளித்த பிடன், சீனா விதிகளை பின்பற்றி நடக்க வேண்டும். அதுதான் முக்கியம். சீனாவை தண்டிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. சீனாவை விதிகளை பின்பற்ற வைக்க வேண்டும்.

எப்படி

எப்படி

நாங்கள் உலக சுகாதார மையத்தில் இணைவோம். சீனாவை கண்காணிக்க வேண்டும் என்பதும் இந்த முடிவிற்கு ஒரு காரணம். சீனா விதிகளை பின்பற்றி நடக்கிறதா என்பதை கண்காணிக்க போகிறோம் என்று பிடன் கூறியுள்ளார். சர்வதேச அளவில் அமெரிக்கா மீண்டும் எழுச்சி பெறும் என்று பிடன் கூறி இருந்த நிலையில் தற்போது அமெரிக்கா மீண்டும் உலக சுகாதார மையத்தில் இணைய உள்ளது.

English summary
We will join in WHO on a day to watch out China say US President-elect Biden.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X