நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்னுடைய ஹோட்டல் வேண்டாம்.. கோபத்தில் கொந்தளித்த் டிரம்ப்.. அமெரிக்க அதிபருக்கு பெரும் சறுக்கல்!

அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ஹோட்டலில் நடக்க இருந்த ஜி7 மாநாட்டை ரத்து செய்து உள்ளார்.

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ஹோட்டலில் நடக்க இருந்த ஜி7 மாநாட்டை ரத்து செய்து உள்ளார். இதற்கு பதிலாக வேறு இடத்தி ஜி7 மாநாடு நடக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், தன்னுடைய தொழிலிலும் சரி, அரசியலிலும் சரி எப்போதும் தோல்வியை ஒப்புக்கொண்டதே கிடையாது. தோல்வி அடைந்தால் கூட, வேறு வகையில் காய்களை நகர்த்தி வெற்றி பெற்று விடுவார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் கூட, இப்படித்தான் தோல்விக்கு மிக அருகில் சென்று கடைசியில் வென்றார். ஆனால் கடந்த சில நாட்களாக டிரம்ப் தொடர்ந்து பல்வேறு தோல்விகளை சந்தித்து வருகிறார்.

தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. மெடிக்கல் காலேஜ் வருது.. ராமதாஸ் மகிழ்ச்சிதமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. மெடிக்கல் காலேஜ் வருது.. ராமதாஸ் மகிழ்ச்சி

தகுதி நீக்கம்

தகுதி நீக்கம்

டிரம்பிற்கு எதிராக கடந்த மாதம்தான் தகுதி நீக்க புகார் கொண்டு வரப்பட்டது. அதேபோல் கடந்த மாதம்தான் டிரம்ப் - தாலிபான் நடத்த இருந்த பேச்சுவார்த்தையும் ரத்து செய்யப்பட்டது. சரியாக சென்று கொண்டு இருந்த தாலிபான் உடனான அமைதி பேச்சுவார்த்தை பெரிய பாதிப்பை சந்தித்தது.

இப்போது எப்படி

இப்போது எப்படி

இந்த நிலையில்தான் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ஹோட்டலில் நடக்க இருந்த ஜி7 மாநாட்டை ரத்து செய்து உள்ளார். இதற்கு பதிலாக வேறு இடத்தில் ஜி7 மாநாடு நடக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். டிரம்ப் தனக்கு சொந்தமான நேஷனல் டோரல் ஹோட்டலில் இந்த சந்திப்பை நடத்த திட்டமிட்டார்.

என்ன திட்டம்

என்ன திட்டம்

மயாமி விமான நிலையம் அருகே பறந்து விரிந்து இந்த ஹோட்டல் கட்டப்பட்டுள்ளது. இதில் ஜி7 மாநாட்டை நடத்தலாம் என்று டிரம்ப் முடிவு செய்தார். இந்த ஹோட்டல் பிரம்மாண்டமாக இருக்கும், இங்கு கூட்டத்தை நடத்தினால் சிறப்பாக இருக்கும் என்று கூட டிரம்ப் சந்தோசமாக டிவிட் செய்து இருந்தார்.

கடும் எதிர்ப்பு

கடும் எதிர்ப்பு

ஆனால் இதற்கு அமெரிக்காவில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜி 7 மாநாடு என்பது அரசு கட்டிடம் ஒன்றில்தான் நடக்க வேண்டும். நேஷனல் டோரல் ஹோட்டலில் நடக்க கூடாது. நேஷனல் டோரல் ஹோட்டலுக்கு விளம்பரம் வேண்டும் என்று டிரம்ப் இப்படி செய்கிறார். நேஷனல் டோரல் ஹோட்டல் பெரிய இழப்பில் செல்கிறது. அதனால்தான் அவர் இப்படி செய்கிறார் என்று பலர் விமர்சனம் வைத்தனர்.

மாற்றினார்

இந்த நிலையில்தான் டிரம்ப் தனது ஹோட்டலில் நடக்க இருந்த ஜி7 மாநாட்டை ரத்து செய்து உள்ளார். அவர் செய்துள்ள டிவிட்டில், மீடியா மற்றும் ஜனநாயக கட்சி ஆகியோரின் கடுமையான விரோத கருத்துக்களால், ஜி 7 மாநாடு நடக்கும் இடத்தை மாற்றுகிறோம். நேஷனல் டோரல் ஹோட்டலில் ஜி 7 மாநாடு நடக்காது. கேம்ப் டேவிட் போன்ற ஏதாவது இடத்தில் மாநாடு நடக்கும்.. நன்றி!, என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

முதல் தோல்வி

முதல் தோல்வி

இது டிரம்பிற்கு விழுந்த பெரிய அடி என்று கூறுகிறார்கள். இதை டிரம்பும் தனது டிவிட் மூலம் ஒப்புக்கொண்டுள்ளார். மீண்டும் அமெரிக்க அதிபர் தேர்தலில் நிற்க டிரம்ப் முயல்கிறார். இந்த நிலையில்தான் அவர் சிக்கல் மேல் சிக்கலை சந்தித்து வருகிறார். அதில் இந்த ஜி 7 மாநாடும் முக்கியமானது என்கிறார்கள்.

English summary
We will no longer consider National Doral for G7 meet says Trump after controversy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X