நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிலவிற்கு மனிதர்களை பார்சல் செய்ய போகும் அமேசான்.. ஜெப் பெஸோஸின் அமேசிங் திட்டம்!

நிலாவிற்கு மனிதர்களை நிரந்தரமாக அனுப்ப அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெஸோஸ் முடிவு எடுத்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    நிலாவிற்கு மனிதர்களை அனுப்ப அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸ் முடிவு- வீடியோ

    நியூயார்க்: நிலாவிற்கு மனிதர்களை நிரந்தரமாக அனுப்ப அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெஸோஸ் முடிவு எடுத்துள்ளார்.

    அமெரிக்காவிற்கும் நிலாவிற்கும் இடையில் இருக்கும் உறவு நீண்டது. உலகில் அமெரிக்காதான் நிலவில் முதலில் கால் வைத்து, கொடி நட்டது. 1969 ஜூலை 20ல் மனிதன் நிலவில் இறங்கியதில் இருந்து இந்த உறவு மிகவும் நெருக்கமாக உள்ளது. ஆனால் பல பல அரசியல் காரணங்களால், 1972ல் நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை நிறுத்தியது நாசா.

    இந்த நிலையில் 2024ல் நிலவிற்கு மீண்டும் மனிதர்களை அனுப்ப நாசா திட்டமிட்டு இருக்கிறது. இதற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

    என்னது பொங்கல் பரிசா மாம்பழம் கொடுத்தீங்களா.? திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் மக்கள் திகைப்புஎன்னது பொங்கல் பரிசா மாம்பழம் கொடுத்தீங்களா.? திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் மக்கள் திகைப்பு

    யார் அனுப்ப திட்டம்

    யார் அனுப்ப திட்டம்

    அமெரிக்காவில் மூன்று டாப் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளது. நாசா, எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸின் ப்ளூ ஆர்ஜின் நிறுவனம். இதில் நாசாவும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் நிலாவிற்கு செல்ல திட்டங்களை தொடங்கிவிட்டது. தற்போது ப்ளூ ஆர்ஜின் நிறுவனமும் அந்த பணியில் இறங்கி உள்ளது.

    என்ன அறிவித்தார்

    என்ன அறிவித்தார்

    இதற்கான அறிவிப்பை நேற்று அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸ் வெளியிட்டார். அதன்படி நிலவிற்கு அந்நிறுவனம் 2024ல் இரண்டு ராக்கெட்டுகளை அனுப்ப உள்ளது. முதல் ராக்கெட்டில் அந்நிறுவனம் நிறைய சோதனை கருவிகளை அனுப்பும். பின் அடுத்த ராக்கெட்டில் மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது.

    என்ன செய்யும்

    என்ன செய்யும்

    அதன்படி, முதலில் ப்ளூ மூன் என்ற ராக்கெட் மூலம் நிலவிற்கு சிறிய வீடு அளவில் இருக்கும் சோதனை கருவியை அனுப்பும். இதில் நான்கு ரோவர்கள் இருக்கும். இது அங்கு 6 மாத ஆராய்ச்சியை நடத்தும். இந்த 6 மாத ஆராய்ச்சி முடிந்த பின் அதே வருடம் மனிதர்களை, அதே ப்ளூ மூன் ராக்கெட் மூலம் அனுப்ப உள்ளதாக பெஸோஸ் தெரிவித்து இருக்கிறார்.

    ஏன் தெரியும்

    ஏன் தெரியும்

    ஆனால் இந்த முறை மனிதர்கள் அங்கு செல்வது வெறுமனே அங்கு கால் பதிப்பதற்காக அல்ல. அவர்கள் அங்கு தங்குவதற்காக செல்கிறார்கள். ஆம், முதலில் செல்லும் ப்ளூ மூனின் சோதனை கருவிகள், அங்கு மனிதர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வைக்கும். இதற்கான பணிகள் தற்போது தொடங்கி உள்ளது. 2024ல் ராக்கெட் நிலாவிற்கு டேக் ஆப் செய்யும் என்று ஜெப் பெஸோஸ் கூறியுள்ளார்.

    English summary
    We will send a spaceship with men and women to the Moon, this time permanent says Amazon's Jeff Bezos.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X