நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதுமட்டும் நடந்தால் சீனா அவ்வளவுதான்.. எச்சரிக்கை டிரம்ப்.. கோபத்தில் அமெரிக்கா!

அமெரிக்கா - சீனா இடையே நிலவி வரும் வர்த்தகப் போர் உச்சம் பெற தொடங்கி உள்ளது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்கா - சீனா இடையே நிலவி வரும் வர்த்தகப் போர் உச்சம் பெற தொடங்கி உள்ளது. இதையடுத்து சீனா மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாளுக்கு நாள் அமெரிக்கா - சீனா என்ற உலகின் இரண்டு பெரிய வல்லரசுகளுக்கு இடையில் சண்டை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்தே உலக நாடுகளின் வரி விதிப்பு முறை குறித்து நிறைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்.

We will take strong action against China says USA president Trump

இதில் இந்தியா மீதும் சீனா மீதும் அவர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறது. அமெரிக்கா பிற நாடுகளின் பொருட்களுக்கு குறைவாக வரி விதிக்கிறது. ஆனால் அமெரிக்காவின் பொருட்களுக்கு பிற நாடுகள் அதிக வரி விதிக்கிறது என்று பலமுறை குறிப்பிட்டுள்ளார்.

கருணாநிதிக்கு 6 அடி நிலம் தரலையா? ரூ300 கோடி நிலம் தந்தோமே: ஸ்டாலினுக்கு எடப்பாடி பதிலடி கருணாநிதிக்கு 6 அடி நிலம் தரலையா? ரூ300 கோடி நிலம் தந்தோமே: ஸ்டாலினுக்கு எடப்பாடி பதிலடி

அமெரிக்க பொருட்களுக்கு சீனாவில் 25% வரி விதிக்கப்படுகிறது. சீனாவில் அமெரிக்க பொருட்களுக்குத்தான் அதிக அளவில் வரி விதிக்கப்படுகிறது. ஆனால் அமெரிக்காவில் சீன பொருட்களுக்கு 2.5% வரிதான் விதிக்கப்படுகிறது.

சீனா மீது இது தொடர்பாக அவர் அடிக்கடி குற்றஞ்சாட்டி வருகிறார். சீனாவில் அதிக அளவில் வரி விதிக்கப்படுகிறது, அதை குறைக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் சீனா வரியை குறைக்கவில்லை என்பதால் அமெரிக்கா சீன பொருட்கள் மீதான வரியை அதிகரித்தது.

இந்த நிலையில் நேற்று இது தொடர்பாக இரண்டு நாடுகளுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் இதுகுறித்து பேட்டி அளித்துள்ளார்.

அதில், சீனா அமெரிக்க பொருட்களுக்கு தொடர்ந்து வரி அதிகம் வாங்குகிறது. மீண்டும் எதிர்க்கட்சி அமெரிக்காவில் ஆட்சிக்கு வந்தால், அமெரிக்காவை ஏமாற்றிவிடலாம் என்று சீனா நினைக்கிறது. ஆனால் நாங்கள்தான் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்.

எங்களை சீனா ஏமாற்ற முடியாது. சீனா நமக்கு அதிக வரி விதித்தால் நாங்கள் அவர்களுக்கு அதிக வரி விதிப்போம். சீனா இப்போதே எங்களுடன் அமைதியாக பேச்சுவார்த்தை நடத்தினால் சமரசம் குறித்து யோசிக்கலாம்.

இல்லையென்றால், நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வரும் போது சீனா மீது மிக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலை உருவாகும். அது மட்டும் நடந்தால் சீனா பெரிய அளவில் பாதிக்கும், என்று டிரம்ப் கோபமாக குறிப்பிட்டுள்ளார்.

English summary
We will take strong action against China says USA president Donald Trump.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X