வருகிறது Franken வேரியண்ட்! ஒரே நேரத்தில் மக்களை தாக்கும் இரட்டை கொரோனா.. நிபுணர்கள் எச்சரிக்கை!
நியூயார்க்: மக்களுக்கு வரும் நாட்களில் Franken வேரியண்ட் எனப்படும் இரட்டை கொரோனா ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக பாஸ்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த லியனார்டோ மார்ட்டீன்ஸ் தலைமையிலான மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழு தெரிவித்துள்ளது.
உலகம் முழுக்க ஓமிக்ரான் கொரோனா வேகமாக பரவி வருகிறது. டெல்டாவை பின்னுக்கு தள்ளி உலகம் முழுக்க ஆதிக்கம் மிக்க வைரஸாக ஓமிக்ரான் உருவெடுத்துள்ளது. ஓமிக்ரான் கேஸ்கள் வேகமாக உயர்ந்து வருவதால் பல புதிய வகை கொரோனா இதனால் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உங்களால் எங்களுக்கு வேலை கிடக்கலை.. ஆத்திரத்தில் வடமாநில இளைஞரை கத்தியால் வெட்டிய 4 பேர் கைது
கொரோனா பரவ பரவ அது புதிய வகை கொரோனாவை உருவாக்கும் வாய்ப்புகள் உள்ளன. இந்த நிலையில்தான் இரட்டை கொரோனா பாதிப்பு குறித்து பாஸ்டன் குழு ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா
பாஸ்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த லியனார்டோ மார்ட்டீன்ஸ் தலைமையிலான மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழு விடுத்த எச்சரிக்கையில், கொரோனாவிற்கு உருமாற்றம் அடைய நிறைய வாய்ப்புகள் உள்ளன. மனிதர்களிடம் பரவிதான் உருமாற்றம் அடைய வேண்டும் என்று இல்லை. இப்போது ஓமிக்ரான் கேஸ்கள் பல விலங்குகளிடம் பரவி இருக்கலாம். அங்கு கொரோனா பல்கி பெருகும் வாய்ப்புகள் உள்ளன. விலங்குகளிடம் கொரோனா மிக எளிதாக பரவும் தன்மை கொண்டது.

ஓமிக்ரான்
உங்கள் வீட்டு வளர்ப்பு நாய்கள், பூனைகள் ஆகியவற்றில் கூட கொரோனா பரவும் அபாயம் உள்ளது. இப்படி பரவும் கொரோனா புதிய வகையாக உருமாற்றம் அடையும் வாய்ப்புகள் உள்ளன. இது மீண்டும் மனிதர்களிடம் உருமாற்றம் அடைந்து பரவும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் கொரோனா பரவல் பற்றி எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். இன்னொரு வகையான கொரோனா உருமாற்றம்தான் Franken variants ஆகும். அதாவது ஹைபிரிட் வகை கொரோனா வைரஸ்களை இப்படி அழைப்போம்.

ஓமிக்ரான் கொரோனா
அதாவது இரண்டு வகையான கொரோனா ஒரே நபருக்கு ஒரே நேரத்தில் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. இதை Franken வேரியண்ட் என்று அழைப்பார்கள். உதாரணமாக ஒரே நேரத்தில் ஓமிக்ரான், டெல்டா வகை கொரோனா ஒருவருக்கு ஏற்பட்டால் அதை Franken வேரியண்ட் என்று அழைப்பார்கள். வரும் நாட்களில் இது போன்ற இரட்டை வேரியண்ட் கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

Franken வேரியண்ட்
புதிதாக நிறைய கொரோனா உருமாறி ஏற்கனவே பரவி வரலாம். இதில் எந்த வகையான கொரோனா வேகம் எடுக்கும் என்று சொல்ல முடியாது. எந்த வகையான கொரோனா பரவ போகிறது என்று சொல்ல முடியாது. உதாரணமாக ஓமிக்ரானை விட IHU வகை கொரோனா அதிக உருமாற்றம் கொண்டது. ஆனால் IHU அதிக அளவில் பரவவில்லை. ஓமிக்ரான்தான் அதிக அளவில் மக்கள் இடையே பரவியது.

உருமாற்றம் முக்கியம்
கொரோனா வகைகளை கணிப்பது மிக மிக கடினம். IHU வகையில் 46 உருமாற்றங்கள் ஏற்பட்டும் கூட அது பெரிய அளவில் மக்கள் இடையே பரவவில்லை. 32 உருமாற்றங்கள் கொண்ட ஓமிக்ரான் அதிகமாக பரவியது. எனவே மக்கள் கொரோனாவை குறைத்து மதிப்பிட கூடாது.. இதுதான் அதிகம் பரவும், அது அதிகம் பரவாது என்று முன் முடிவு செய்ய கூடாது. புதிய கொரோனா வகைகள் உருவாகாமல் இருக்க முடிந்த அளவு மக்கள் கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும், என்று பாஸ்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த லியனார்டோ மார்ட்டீன்ஸ் தலைமையிலான மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழு தெரிவித்துள்ளது.