நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குறிவைக்கப்பட்ட அரசியல்வாதிகள்.. இந்தியா உட்பட 20 நாடுகளில் வாட்ஸ் ஆப் ஹேக்கிங்.. இஸ்ரேல் ஆட்டம்!

இஸ்ரேல் நிறுவனம் மூலம் நடத்தப்பட்ட வாட்ஸ் ஆப் ஹேக்கிங் மூலம் பத்திரிக்கையாளர்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகளும் உலகம் முழுக்க குறி வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

நியூயார்க்: இஸ்ரேல் நிறுவனம் மூலம் நடத்தப்பட்ட வாட்ஸ் ஆப் ஹேக்கிங் மூலம் பத்திரிக்கையாளர்கள் மட்டுமின்றி பல அரசியல்வாதிகளும் உலகம் முழுக்க குறி வைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று இன்று புதிய தகவல் வெளியாகி உள்ளது.

உலகம் முழுக்க வாட்ஸ் ஆப் ஹேக்கிங் பிரச்சனை தற்போது பெரிய வைரலாகி உள்ளது. இது தொடர்பாக தற்போது புதிய விவரங்களும், தகவல்களும் வெளியாகி வருகிறது. இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஓ குரூப் என்று நிறுவனம்தான் இந்த ஹேக்கிங்கை செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக தற்போது வாட்ஸ் ஆப் நிறுவனம், என்எஸ்ஓ நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுத்து உள்ளது. உலக அளவில் இதை வைத்து மிகப்பெரிய முறைகேடு நடந்து இருப்பதாக கூறுகிறார்கள்.

முதல்வரை தொடர்ந்து துணை முதல்வரும் வெளிநாடு பயணம்.. அமெரிக்கா செல்கிறார் ஓ.பி.எஸ்!முதல்வரை தொடர்ந்து துணை முதல்வரும் வெளிநாடு பயணம்.. அமெரிக்கா செல்கிறார் ஓ.பி.எஸ்!

என்ன செய்திகள்

என்ன செய்திகள்

இந்தியாவில் முக்கிய பத்திரிக்கையாளர்கள், செய்தியாளர்கள், களப்பணியாளர்கள் ஆகியோரின் வாட்ஸ் ஆப் ஹேக் செய்யப்பட்டு இருக்கிறது. இவர்களிடம் இருந்து முக்கியமான தகவல்கள் திருடப்பட்டு இருக்கிறது. இஸ்ரேல் இதில் நேரடியாக தலையிட்டு இருக்க வாய்ப்புள்ளது என்றும் நேற்று செய்திகள் வந்தது.

இப்போது என்ன

இப்போது என்ன

ஆனால் என்எஸ்ஓ குரூப் செய்தியாளர்களை மட்டும் குறி வைக்கவில்லை. உலகம் முழுக்க இருக்கும் முக்கியமான அரசியல்வாதிகளையும் குறி வைத்துள்ளது. அதோடு ராணுவம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் வேலை பார்க்கும் பெரிய அரசு அதிகாரிகளையும் குறி வைத்து இந்த வைரஸ் தாக்குதல் நடந்துள்ளது.

அரசியல் பிரச்சனை

அரசியல் பிரச்சனை

முக்கியமாக அரசியலை மையமாக வைத்துதான் இந்த ஹேக்கிங் நடந்து இருக்கிறது. இது உலக நாடுகளுக்கு இடையிலான உறவில் பிரச்சனை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. முக்கிய அரசியல்வாதிகள் யாருடைய தகவல்கள் இதனால் திருடப்பட்டு இருக்கிறதோ என்று கேள்விகள், சர்ச்சைகள் இதனால் எழுந்து இருக்கிறது.

எப்படி நடக்கும்

எப்படி நடக்கும்

இந்த ஹேக்கிங் எப்படி நடக்கிறது என்றால், என்எஸ்ஓ குரூப் ஒரு குறிப்பிட்ட நபருக்கு வாட்ஸ் ஆப் மூலம் லிங்க் ஒன்றை அனுப்பும். பொதுவாக இந்த லிங்க் ஏதாவது வீடியோ அல்லது முக்கிய செய்தியாக இருக்கும். இந்த லிங்கை கிளிக் செய்தால், அவர்கள் போனில் பேகாசஸ் (Pegasus) என்ற வைரஸ் இன்ஸ்டால் ஆகிவிடும். இதுதான் மொபைலில் தகவலை திருடும்.

திருடும்

திருடும்

இந்த பேகாசஸ் உடனடியாக அந்த போனில் இருக்கும் பாஸ்வேர்ட், புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் என்எஸ்ஓ நிறுவனத்திற்கு அனுப்பிவிடும். முக்கியமாக பல நாடுகளில் போராட்டக்காரர்கள், களப்பணியாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

பிரச்சாரம்

பிரச்சாரம்

தேர்தல் நடக்கும் சமயத்தில் இதுபோன்ற தகவல் திருட்டு அதிகம் நடந்துள்ளது. சில நாடுகளில் முக்கிய நபர்களுக்கு எதிராக வீடியோ வெளியாவதற்கு பின்பும் இந்த காரணம்தான் இருக்கிறது. அவர்களின் வாட்ஸ் ஆப் ஹேக் செய்யப்பட்டு அதன் மூலம் அவர்களின் அந்தரங்க தகவல்கள் வெளியாகி உள்ளது என்கிறார்கள்.

எத்தனை நாடுகள்

எத்தனை நாடுகள்

மொத்தம் 5 கண்டங்களில் உள்ள 20 நாடுகளில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. பெரும்பாலும் அமெரிக்காவுடன் நட்பாக இருக்கும் நாடுகள்தான் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. அதன்படி அமெரிக்கா, அரசு அமீரகம், பஹ்ரைன், இந்தியா, பாகிஸ்தான், மெக்சிகோ ஆகிய நாடுகள் அதிக பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது.

English summary
NSO group's Whats App hacking targeted politicians and higher officials in 20 countries.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X