நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்கா அருகில் உள்ள தீவில் நித்யானந்தா... கைது செய்ய போலீஸ் தீவிரம்

Google Oneindia Tamil News

Recommended Video

    நித்தியானந்தா செய்யும் சேட்டைகள்... சிறைக்குள் அடைவது எப்போது?

    நியூயார்க்: இந்திய போலீசாரால் தேடப்படும் குற்றவாளியான நித்யானந்தா அமெரிக்கா அருகே உள்ள தீவில் இருப்பதாக கூறப்படுகிறது. அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    அண்மைக்காலமாக சமூக வலை தளம் முழுவதும் விவாத பொருளாக மாறியிருக்கிறார் சாமியார் நித்யானந்தா. இவர் மீது பெங்களூருவில் பாலியல் வழக்குகளும், குஜராத்தின் அஹமதாபாத்தில் குழந்தைகளை கடத்தியதாகவும் வழக்குகளும் உள்ளது.

    இந்நிலையில் போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில், இந்தியாவைவிட்டு நித்யானந்தா தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது. ஈக்வடார் நாட்டில் தனி தீவில் கைலாயம் என்ற பெயரில் தனிநாட்டினை அமைத்துள்ளதாகவும் அந்த நாடு இந்துக்களுக்கான நாடு என்றும் அறிவித்தார்.

    ஈக்வடார் மறுப்பு

    ஈக்வடார் மறுப்பு

    மேலும் தங்கள் நாட்டுக்கு வர 12லட்சம் பேர் விண்ணப்பித்து இருப்பதாகவும் நித்யானந்தா தெரிவித்துள்ளார். ஆனால் தனிநாடு தகவலை ஈக்வடார் அரசு மறுத்துள்ளது. அவர் தங்கள் நாட்டில் இல்லை என்று கூறயுள்ளது.

    அகதி விண்ணப்பம்

    அகதி விண்ணப்பம்

    நித்யானந்தா கடந்த ஆண்டு ஜுலை 5ம் தேதி முதல்முறையாக ஈக்வடார் நாட்டுக்கு சுற்றுலா விசாவில் வந்ததாகவும் துறைமுக நகரான குயாக்சூல் அருகே தஙகியிருந்தார் என்றும் தெரிவித்தது. மேலும் அகதியாக ஏற்றுக்கொள்ளுமாறு தங்களிடம் நித்யானந்தா விண்ணப்பித்ததாகவும் அவரது மனுவை பரிசீலிக்கும் வரை தங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டதாகவும் அந்நாட்டு அரசு கூறியது.

    வெளியேற்றப்பட்டார்

    வெளியேற்றப்பட்டார்

    மேலும் இதன்படி நித்யானந்தா ஆகஸ்ட் 2019 வரை ஈக்வடார் நாட்டில் இருந்ததாகவும் ஆனால் திடீரென அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த காரணத்தால் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாகவும் ஈக்வடார் அரசு தெரிவித்துள்ளது.

    ஹைதி தீவு

    ஹைதி தீவு

    விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் போத அவர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தில் அடுத்து செல்ல இடம் கரீபியன் கடல் அருகே உள்ள ஹைதி என்ற தீவு என குறிப்பிட்டு இருந்ததாகவம் ஈக்வடார் அரசு கூறியுள்ளது.

    பனமா கால்வாய்

    பனமா கால்வாய்

    இதனிடையே நித்யானந்தா யூடியூப்பில் வீடியோ மூலம் தினமும் பேசும் கணிணியின் ஐபி முகவரியை போலீசார் ஆய்வு செய்தனர். அந்த முகவரி பனாமா கால்வாய்க்கும், அமெரிக்காவின் கலிபோர்னியானா மாகாணத்திற்கும் இடையில் உள்ள ஏதோ ஒரு தீவாக இருக்கலாம் என்பதை கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து நித்யானந்தாவை கைது செய்ய குஜராத் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    English summary
    Nithyananda may stayed on island near usa between panama canal
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X