நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சவுதி சல்மான் கிடையாதாம்.. அமேசான் பெஸோஸின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்டது யார்? பகீர் டிவிஸ்ட்

அமேசான் அதிபர் ஜெப் பெஸோஸின் அந்தரங்க புகைப்படங்களை சவுதி அரேபியா வெளியிடவில்லை, இதை அவரின் காதலிதான் வெளியிட்டார் என்று தற்போது புதிய புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Saudi Salmon hacked Amazon Jeff Bezos's phone | அமேசான் நிறுவனரின் போனை ஹேக் செய்த சவூதி ?

    நியூயார்க்: அமேசான் அதிபர் ஜெப் பெஸோஸின் அந்தரங்க புகைப்படங்களை சவுதி அரேபியா வெளியிடவில்லை, இதை அவரின் காதலிதான் வெளியிட்டார் என்று தற்போது புதிய புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்களும் வெளியாகி உள்ளது.

    அமேசான் அதிபர் ஜெப் பெஸோஸ் போனை வாட்ஸ் ஆப் மூலம் சவுதியின் முடி இளவரசர் முகமது பின் சல்மான் ஹேக் செய்தது அம்பலம் ஆகியுள்ளது. அமேசான் அதிபர் ஜெப் பெஸோஸ் போன் ஹேக் செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அமேசான் அதிபர் ஜெப் பெஸோஸுக்கு சொந்தமான வாஷிங்க்டன் போஸ்டில் வெளியான கட்டுரைகளுக்கு பழி வாங்கும் விதமாக இந்த ஹேக்கிங் நடந்துள்ளது. ஆனால் இந்த ஹேக்கிங் விஷயத்தை சவுதி அரசு முற்றாக மறுத்து இருக்கிறது.

     கழுத்தில் இறங்கிய கத்தி.. கனடாவில் தாக்குதலுக்குள்ளான தமிழ்ப் பெண்.. ஷாக்கில் குன்னூர்! கழுத்தில் இறங்கிய கத்தி.. கனடாவில் தாக்குதலுக்குள்ளான தமிழ்ப் பெண்.. ஷாக்கில் குன்னூர்!

    காரணம்

    காரணம்

    ஜெப் பெஸோஸுக்கும் அவரின் மனைவிக்கும் விவாகரத்து ஏற்பட இந்த ஹேக்கிங்தான் காரணம் என்று கூறப்படுகிறது. ஜெப் பெஸோஸ் அவரின் காதலி லாரன் சான்செஸ் உடன் எடுத்த அந்தரங்க புகைப்படங்கள் வெளியானது. இந்த அந்தரங்க புகைப்படங்களை ஹேக்கிங் மூலம் சவுதி வெளியிட்டதால்தான், ஜெப் பெஸோஸின் மனைவி மெக்கென்சி, ஜெப் பெஸோஸை விவாகரத்து செய்தார். ஆனால் இதற்கு காரணம் ஹேக்கிங் கிடையாது என்று செய்திகள் வெளியாகி வருகிறது.

    அவர் இல்லை

    அவர் இல்லை

    ஆம் சவுதி சல்மான் மூலம் இந்த புகைப்படங்கள் வெளியாகவில்லை. ஜெப் பெஸோஸின் காதலி லாரன் சான்செஸ்தான் இந்த புகைப்படத்தை வெளியிட்டார். லாரன் சான்செஸ், இந்த அந்தரங்க புகைப்படங்களை தனது சகோதரருக்கு அனுப்பி உள்ளார். அவரின் சகோதரர் பணத்திற்கு ஆசைப்பட்டு, இந்த படங்களை, வேறு ஒரு செய்தி நிறுவனத்திற்கு அனுப்பி உள்ளார். இதன் மூலம்தான் அந்த புகைப்படம் வெளியானது என்கிறார்கள்.

    என்ன புகார்

    என்ன புகார்

    இதை இன்று வால் ஸ்டிரீட் செய்தி நிறுவனம் ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளது. தற்போது ஜெப் பெஸோஸ் மற்றும் லாரன் சான்செஸ் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் திட்டத்தில் இருக்கிறார்கள். இதற்கு மத்தியில்தான், லாரன் சான்செஸ்தான் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டது என்று செய்தி வெளியாகி உள்ளது. இது லாரன் சான்செஸ் மற்றும் ஜெப் பெஸோஸ் இடையே பெரிய பிரச்சனையை உண்டாக்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது.

    மிக மோசம்

    மிக மோசம்

    இந்த ஹேக்கிங் புகாரை சவுதி மறுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் சவுதியின் முடி இளவரசர் முகமது பின் சல்மானும் இதை மறுத்துள்ளளார். இது தொடர்பாக முகமது பின் சல்மான் நேரடியாக அமேசான் அதிபர் ஜெப் பெஸோசுக்கு வாட்ஸ் ஆப் செய்துள்ளார். நாங்கள் இதை செய்யவில்லை. கொஞ்சம் கூட அடிப்படை ஆதாரமற்ற புகார் இது. அமேசான் அதிபரை நாங்கள் ஏன் எதிர்க்க வேண்டும். எங்கள் மீது தேவையில்லாமல் சிலர் புகார் வைக்கிறார்கள். சவுதிக்கு எதிராக பின்னப்படும் சதி வலை இது. இதை நாங்கள் முறையாக எதிர்கொள்வோம் என்று சவுதி தெரிவித்துள்ளது.

    English summary
    Who released Amazon Jeff's photos in social media: Shocking twist.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X