அட அந்த பொண்ணா.. வேண்டாம்! மிரள வைத்த புடினின் 38 வயது காதலி.. வாலை சுருட்டிக்கொண்ட அமெரிக்கா!
நியூயார்க்: ரஷ்ய அதிபர் புடின் மீதும், ரஷ்யா மீதும் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்த அமெரிக்கா புடினின் காதலியை பார்த்து நடுங்கி நிற்கிறதாம்.. அப்படி என்ன நடந்தது?
உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்தே ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா மற்றும் மேற்கு உலக நாடுகள் விதித்து வருகின்றன. முக்கியமாக ரஷ்யாவின் பல்வேறு வங்கிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த தீபராஜன்.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்... ரூ.5 லட்சம் நிவாரணம்
அதேபோல் ரஷ்யாவின் நிறுவனங்கள் பொருளாதார தடையை எதிர்கொண்டு உள்ளது.

ரஷ்யா தடை
இது போக ரஷ்யாவை சர்வதேச பண பரிவர்த்தனை அமைப்பான swift மெசேஜிங் தளத்தில் இருந்தும் உலக நாடுகள் வெளியேற்றி உள்ளது. இதனால் ரஷ்யாவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு ரஷ்யாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெய், கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள், தானியங்கள் விற்பனை ஆகியவையும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ரஷ்யாவின் பணக்காரர்களான அலிகார்க்ஸ் மீதும் கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

என்ன தடை?
ரஷ்ய அதிபர் புடின் மீதும் பொருளாதார தடைகள் பல நாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் புடினின் 38 வயது காதலி அலினா கபேவா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று பல்வேறு ஊடகங்கள் தெரிவித்தன. அமெரிக்காவும், மேற்கு உலக நாடுகளும் அலினா மீது பொருளாதார தடை விதிக்க முயன்று வருவதாக செய்திகள் வந்தன. புடின் அலினாவை காதலிப்பதை கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்தார்,

எத்தனை பேர்
ஏற்கனவே அந்த பெண்ணுக்கு 3 குழந்தைகள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. பல லட்சம் கோடிகளுக்கு அதிபதி இந்த அலினா என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் அவர் மீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா முடிவு செய்ததாக செய்திகள் வந்தன. புடின் மீது தனிப்பட்ட வகையில் ஏற்கனவே பிடன் அரசு அமெரிக்காவில் தடை விதித்து உள்ளது. இதை போலவே அலினா மீது தடை விதிக்க அமெரிக்கா முயன்று வருவதாக கூறப்பட்டது.

என்ன நடந்தது?
ஆனால் கடைசியில் அலினா மீது பொருளாதார தடை விதிக்க வேண்டாம் என்ற முடிவை அமெரிக்கா மற்றும் மேற்கு உலக நாடுகள் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் பெண் என்பதாலும்.. அவரை தனிப்பட்ட வகையில் தடைக்குள் கொண்டு வந்தால் இது பர்சனல் மோதல் போல ஆகிவிடும் என்பதாலும் அந்த பெண்ணை சீண்ட வேண்டாம் என்ற முடிவை மேற்கு உலக நாடுகள் எடுத்துள்ளதாக The Wall Street Journal ஊடகம் தெரிவித்துள்ளது.

நெருக்கம்
புடினுக்கு தனிப்பட்ட வகையில் அந்த பெண் மிகவும் நெருக்கமானவர். அந்த பெண்ணை சீண்டினால் புடின் தனிப்பட்ட வகையில் கோபம் அடைவார். இது அமெரிக்கா - ரஷ்யா இடையிலான நேரடி மோதலுக்கு வழி வகுக்கும் என்பதால் அமெரிக்கா வாலை சுருட்டிக்கொள்ள முடிவு செய்துள்ளதாம். இருந்தாலும் அலினாவை கண்காணிப்பில் வைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாம்.