நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆதாரத்தை வெளியிடுவோம்.. மிரட்டிய டிரம்ப்.. பதறியடித்து ஒப்புக்கொண்ட ஈரான்.. என்ன நடந்தது?

உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியது தொடர்பாக அமெரிக்காவிடம் சிக்கிய ஆதாரமே, ஈரான் கடைசியில் உண்மையை ஒப்புக்கொள்ள காரணம் என்கிறார்கள்.

Google Oneindia Tamil News

நியூயார்க்: உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியது தொடர்பாக அமெரிக்காவிடம் சிக்கிய ஆதாரமே, ஈரான் கடைசியில் உண்மையை ஒப்புக்கொள்ள காரணம் என்கிறார்கள்.

மூன்று நாட்களுக்கு முன் ஈரானில் இருந்து பறந்த உக்ரைன் நாட்டு பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது. இது விபத்து கிடையாது என்று ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது. இதில் 176 பேர் பலியானார்கள்.

ஈராக்கில் உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியது தங்களுடைய ஏவுகணை தாக்குதலால் ஏற்பட்டதுதான் என்று ஈரான் பகிரங்கமாக ஒப்புக்கொண்டு இருக்கிறது. தெரியாமல் சுட்டு வீழ்த்திவிட்டோம் என்று ஈரான் கூறியுள்ளது.

என்ன மறுப்பு

என்ன மறுப்பு

முதலில் ஈரான் இதை மறுத்து வந்தது. அது தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிகழ்ந்த விபத்து. எங்கள் மீது புகார் கூற வேண்டாம். எங்கள் மீது பழி போட வேண்டாம் என்று ஈரான் தொடர்ந்து கூறி வந்தது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

இந்த நிலையில் இது விபத்து கிடையாது. ஈரான் தாக்குதலால்தான் விமானம் விழுந்துள்ளது. இந்த ஏவுகணை தாக்குதல் தொடர்பாக எங்களிடம் ஆதாரம் இருக்கிறது. உக்ரைன் விமானம் ஏவுகணை மூலம்தான் தாக்கப்பட்டது. அது விபத்து கிடையாது. அது தொடர்பாக சில முக்கிய ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. அதை வெளியிடுவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார்.

என்ன ஆதாரம்

என்ன ஆதாரம்

நாங்கள் ஆதாரத்தை வெளியிட்டால் எல்லாம் மாறும் என்று டிரம்ப் கூறினார். ஆனால் அவர் என்ன ஆதாரம் என்று வெளிப்படையாக குறிப்பிடவில்லை. என்ன மாதிரியான ஆதாரங்களை அவர் வைத்து இருக்கிறார். எப்படி அவருக்கு அந்த ஆதாரம் கிடைத்தது. அவர் வெறும் பொய் சொல்கிறாரா என்றும் கேள்வி எழுந்தது.

உக்ரைன் வீடியோ

அதே சமயம் இன்னொரு பக்கம் ஈரான், உக்ரைன் விமானத்தை தாக்கி அழித்தது தொடர்பாக வீடியோ ஆதாரம் வெளியானது. அந்த வீடியோவில் விமானம் தானாக விழவில்லை. விமானம் கீழே விழுவதற்கு முன் சிறிய ஒளி கீற்று அதை போய் மோதியுள்ளது. ஈரான் செலுத்திய ஏவுகணைதான் இந்த ஒளி கீற்று. மொத்தமாக விமானத்தை அந்த ஏவுகணை தாக்காமல் உரசி சென்றுள்ளது. இதனால் அதன் எஞ்சின் தீ பிடித்து வெடித்து உள்ளது. இதன்பின் விமானம் கீழே விழுந்து சிதறி உள்ளது வீடியோ மூலம் உறுதியானது.

கனடா எப்படி

கனடா எப்படி

அதேபோல் தொழில்நுட்ப ரீதியாக தங்களிடம் சில ஆதாரம் இருக்கிறது என்று கனடா குறிப்பிட்டு இருந்தது. இந்த ஏவுகணை தாக்குதல் காரணமாக கனடா மக்கள் 63 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இதை கனடா தீவிரமாக விசாரிக்க உள்ளது.

இதுதான் காரணம்

இதுதான் காரணம்

இப்படி கனடா, அமெரிக்கா இரண்டும் சேர்ந்து வந்தது ஈரானை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அங்கு நிறைய ஆதாரங்கள் சேர்ந்ததுதான் ஈரானின் மன மாற்றத்திற்கு காரணம் என்கிறார்கள். முதலில் உக்ரைன் விமானம் விழுந்தது வெறும் விபத்து என்று கூறிய ஈரான் கடைசியில் பல்டி அடித்து உண்மையை ஒப்புக்கொள்ள இதுதான் காரணம் என்று கூறுகிறார்கள்.

English summary
Why Iran change its mind and accept that about the Ukranian plane attack? - Here is the reason.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X