நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்திய - சீன மோதல்.. பின்வாங்கும் அமெரிக்கா.. அப்படியே அமைதியான டிரம்ப்.. என்ன நடந்தது? - பின்னணி!

Google Oneindia Tamil News

நியூயார்க்: லடாக் மோதலில் இதற்கு முன் குரல் கொடுத்து வந்த அமெரிக்கா திடீரென இதில் மௌனம் காக்க தொடங்கி உள்ளது. இந்திய - சீன மோதலில் திடீரென தலையிடாமல் அமெரிக்கா அமைதி காக்க தொடங்கி உள்ளது.

Recommended Video

    India-China பிரச்சினையில் America பின்வாங்குவதன் பின்னணி | Oneindia Tamil

    இந்தியா -சீனா இடையிலான லடாக் மோதல் உலக அளவில் கவனம் பெற தொடங்கி உள்ளது. தென் சீன கடல் எல்லை பிரச்சனை எப்படி உலக நாடுகளுக்கு இடையிலான மோதலாக மாறியுள்ளதோ, அதேபோல் இந்திய - சீன மோதலும் தற்போது சர்வதேச பிரச்சனையாக மாறியுள்ளது.

    இந்தியா சீனா இடையில் நடக்கும் மோதலை ரஷ்யா , அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா நாடுகள், தெற்காசிய நாடுகள், பாகிஸ்தான் என்று உலக நாடுகள் எல்லாம் தீவிரமாக உற்றுநோக்க தொடங்கி உள்ளது.

    லடாக் மோதல்.. ரஷ்யாவில் நடந்த இந்தியா - சீனா பேச்சுவார்த்தை.. 5 உடன்படிக்கைகள் கொண்ட புதிய ஒப்பந்தம்லடாக் மோதல்.. ரஷ்யாவில் நடந்த இந்தியா - சீனா பேச்சுவார்த்தை.. 5 உடன்படிக்கைகள் கொண்ட புதிய ஒப்பந்தம்

    அமெரிக்கா கவனம்

    அமெரிக்கா கவனம்

    லடாக்கில் கடந்த மே மாதம் லேசான உரசல் ஏற்பட்ட போதே, அமெரிக்கா அதில் தலையிட்டது. இந்தியா - சீனா பிரச்னையை தீர்த்து வைக்க தயார். இந்தியா - சீனா இடையே மத்தியசம் பேச தயார். இரண்டு நாடுகளும் ஒப்புக்கொண்டால் இந்த பிரச்னையை தீர்க்க தயார் என்று டிரம்ப் வெளிப்படையாக அறிவித்தார். மூன்று மேடைகளில் டிரம்ப் தனது ஆசையை இது தொடர்பாக வெளிப்படுத்தினார் .

    இந்தியா ஏற்கவில்லை

    இந்தியா ஏற்கவில்லை

    ஆனால் இந்த அமைதி பேச்சுவார்த்தையை இந்தியா ஏற்கவில்லை. இது இரண்டு நாட்டு பிரச்சனை. இதில் அமெரிக்கா தலையிடுவதை ஏற்க முடியாது என்று இந்தியா அறிவித்துவிட்டது. இன்னொரு பக்கம் சீனாவும் அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்கவில்லை . அமெரிக்காவின் மத்தியச கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சீனா வெளிப்படையாக அறிவித்துவிட்டது.

    ஆனால் தொடர்ந்தது

    ஆனால் தொடர்ந்தது

    ஆனாலும் இதில் தொடர்ந்து அமெரிக்கா தனது கருத்தை தெரிவித்தே வந்தது. முக்கியமாக லடாக்கில் சீனா அத்துமீறுகிறது. எல்லையில் இருக்கும் நாடுகளை சீனா அச்சுறுத்தி வருகிறது. சீனாவின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. எல்லையில் சீனாவிற்கு எதிராக அமெரிக்கா படைகளை குவிக்கும். தென் சீன கடல் எல்லை தொடங்கி லடாக் வரை எங்கும் சீனாவின் அத்துமீறலை அனுமதிக்க முடியாது என்று அமெரிக்காவின் அதிபர் டிரம்ப் தொடங்கி பாதுகாப்பு செயலாளர் மைக் பாம்பியோ வரை சீனாவிற்கு எதிராக தொடர்சியாக பேசி வந்தனர்.

    என்ன சொன்னார்

    என்ன சொன்னார்

    அதோடு இந்தியாவிற்கு ஆதரவாக படைகளை அனுப்ப தயார். எல்லைக்கு நாங்கள் படைகளை அனுப்ப தயார் என்று அதிபர் டிரம்ப் அறிவித்தார். நேட்டோவில் இருக்கும் படைகளை இந்தியாவிற்கு ஆதரவாக கொண்டு செல்ல தயார் என்று டிரம்ப் அறிவித்தார். இந்தியாவிற்கு வெளிப்படையாக தனது ஆதரவை அமெரிக்கா தெரிவித்தது. சீனாவிற்கு பெரிய பின்னடைவாக இது பார்க்கப்பட்டது.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் திடீரென தற்போது லடாக் பிரச்சனையில் அமெரிக்கா மௌனம் காக்க தொடங்கி உள்ளது. டிரம்ப் கருத்து எதுவும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறார். இதற்கு இரண்டு காரணம் சொல்லப்படுகிறது. ஒரு காரணம் அமெரிக்க தேர்தல். இன்னொரு காரணம் ரஷ்யா. அமெரிக்க தேர்தல் வரும் டிசம்பர் மாதம் நடக்க உள்ளது. இதற்காக அமெரிக்காவில் இரண்டு கட்சிகளும் தயாராகி வருகிறது.

    தேர்தல் எப்படி

    தேர்தல் எப்படி

    அமெரிக்கா தற்போது அதிபர் தேர்தலுக்காக தீவிரமாக தயாராகிக் கொண்டு இருக்கிறது. கொரோனா பிரச்சனை, உலக பொருளாதார சரிவு, சர்வதேச நாடுகளுக்கு இடையிலான மோதல் என்று பல விஷயங்களைக்கு இடையே இந்த தேர்தல் நடக்க உள்ளது.அமெரிக்காவில் குடியரசு கட்சி சார்பாக அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அதேபோல் இன்னொரு பக்கம் முன்னாள் துணை அதிபர் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.

    முடிவு வாய்ப்புள்ளது

    முடிவு வாய்ப்புள்ளது

    அதிபர் தேர்தல் முடியும் வரை பிறநாட்டு பிரச்சனையில் அமெரிக்கா தலையிட வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள். அதோடு அதிபர் டிரம்ப் தேர்தலில் வெற்றிபெறவும் வாய்ப்புள்ளது, தோல்வி அடையவும் வாய்ப்பு உள்ளது. இதனால் அதிபர் டிரம்பும் இந்திய - சீன பிரச்சனையில் பெரிய அளவில் தலையிடாமல் தவிர்த்து வருகிறார். இரண்டு நாட்டு பிரச்சனையை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் டிரம்ப் அமைதி காக்க தேர்தல்தான் காரணம் என்கிறார்கள்.

    ரஷ்யா எப்படி

    ரஷ்யா எப்படி

    அதே சமயம் இரண்டு நாட்டு பிரச்சனையில் ரஷ்யா தலையிட்டதால் அமெரிக்கா இதில் தலையிடாமல் பின்வாங்கி உள்ளது. அமெரிக்காவின் மத்தியச பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொள்ளாத இந்தியா - சீனா, ரஷ்யாவின் மத்தியசத்தை ஏற்றுக்கொண்டது. இதனால் அமெரிக்கா கோபத்தில் இருக்கிறது. இரண்டு நாடுகளும் ரஷ்யாவை ஏற்றுக்கொண்ட காரணத்தால், அமெரிக்கா இதில் அமைதி காக்க தொடங்கி உள்ளது.

    உள்ளே வந்த ரஷ்யா

    உள்ளே வந்த ரஷ்யா

    இந்திய - சீன பிரச்சனையில் ரஷ்யா உள்ளே வந்துவிட்டது. இரண்டு முறை ரஷ்யாவின் கண்காணிப்பில் இரண்டு நாட்டு பேச்சுவார்த்தை நடந்துவிட்டது. இந்தியா - சீனா இடையிலான தூதுவர் போல ரஷ்யா மாறிவிட்டது . இதனால் இந்த பிரச்சனையில் இனி அமெரிக்கா மூக்கை நுழைக்க வாய்ப்பு இல்லை. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் முடிந்த பின்பே, இரண்டு நாட்டு அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன என்று உறுதியாக தெரியும்.

    English summary
    Why the USA and President Trump started keeping itself mum in India and the Chinese fight?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X