நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆப்கான், ஈரான், சோமாலியா.. அமெரிக்க படைகளை வாபஸ் வாங்க டிரம்ப் பிளான்.. என்ன நடக்கிறது பென்டகனில்?

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்து இருக்கும் அதிபர் டிரம்ப், பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்க படைகளை வாபஸ் வாங்க திட்டமிட்டுள்ளார் என்று புகார் வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்துள்ள டிரம்ப், தனது தோல்வியை ஏற்க மறுத்து தொடர்ந்து பிரச்சனை செய்து வருகிறார். குடியரசு கட்சி வேட்பாளர் அதிபர் டிரம்ப் 232 இடங்களில் வென்று, தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார்.

ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன் 290 இடங்களில் வென்று, அடுத்த அதிபராக தேர்வாகி உள்ளார். ஆனாலும் டிரம்ப் இன்னும் தோல்வியை முழுமையாக ஏற்கவில்லை.

அமெரிக்க வெளியுறவு அமைச்சராகிறார் சூசன் ரைஸ்.. ஜோ பிடன் செம மூவ்.. பின்னணியில் ஓபாமா!அமெரிக்க வெளியுறவு அமைச்சராகிறார் சூசன் ரைஸ்.. ஜோ பிடன் செம மூவ்.. பின்னணியில் ஓபாமா!

வாபஸ்

வாபஸ்

இந்த நிலையில் அதிபர் டிரம்ப், பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்க படைகளை வாபஸ் வாங்க திட்டமிட்டுள்ளார் என்று புகார் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல் கட்டமாக ஆபகானிஸ்தானில் இருந்து கிறிஸ்மஸுக்குள் படைகளை வாபஸ் அதிபர் டிரம்ப் திட்டமிட்டு வருகிறார்.

மொத்தமாக

மொத்தமாக

மொத்தமாகவோ அல்லது பாதியாகவோ படைகளை வாபஸ் வாங்க டிரம்ப் திட்டமிட்டு வருகிறார். இன்னொரு பக்கம் ஈரானில் இருந்தும் இந்த வருட இறுதிக்குள் படைகளை வாபஸ் வாங்கி மீண்டும் அமெரிக்கா கொண்டு வர டிரம்ப் திட்டமிட்டு உள்ளார். அங்கு இருக்கும் 3000 படைகளில் 1000 பேரை டிரம்ப் வாபஸ் வாங்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

சோமாலியா

சோமாலியா

தற்போது சோமாலியாவில் இருக்கும் 700 வீரர்களையும் டிரம்ப் வாபஸ் வாங்க திட்டமிட்டு உள்ளார் என்றும் செய்திகள் வெளியாகி வருகிறது. அங்கு அல்கொய்தா அமைப்பிற்கு எதிராக உள்ளூர் பாதுகாப்பு படை போராடி வருகிறது. அங்கு நடக்கும் உள்நாட்டு யுத்தமும் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த நிலையில்தான் சோமாலியாவில் இருந்து படைகளை வாபஸ் வாங்கும் எண்ணத்தில் டிரம்ப் இருக்கிறார்.

எப்படி

எப்படி

இதற்கு முன்பே டிரம்ப் ஜெர்மனியில் இருந்து 12 ஆயிரம் படை வீரர்களை வாபஸ் வாங்கினார். நேட்டோ படைக்கு ஜெர்மனி போதிய செலவு செய்வது இல்லை என்று கூறி டிரம்ப் படைகளை வாபஸ் வாங்கினார். இந்த நிலையில்தான் தற்போது மற்ற நாடுகளில் இருந்தும் டிரம்ப் படைகளை வாபஸ் வாங்கும் எண்ணத்தில் இருக்கிறார்.

ஏன்

ஏன்

இது முழுக்க முழுக்க அரசியல் திட்டம் என்று பென்டகனின் முன்னாள் ஊழியர்கள் கூறுகிறார்கள். ஆட்சியை விட்டு செல்லும் முன்ன வேண்டும் என்றே அரசியல் ரீதியாக இப்படி செய்கிறார். பிடனுக்கு சிக்கல் ஏற்படுத்த வேண்டும் என்று இப்படி செய்கிறார். சோமாலியா, ஈரானில் இருந்து படைகளை வாபஸ் வாங்குவது எல்லாம் தவறான முடிவு என்று தெரிவித்துள்ளனர்.

மில்லர்

மில்லர்

பென்டகனின் புதிய பாதுகாப்பு செயலாளராக கிறிஸ்தபர் மில்லர் கொண்டு வரப்பட்ட பின் இந்த அதிரடி மாற்றங்கள் நடக்கிறது. டிரம்ப் எடுக்கும் தவறான முடிவு இது என்று பென்டகனின் முன்னாள் அதிகாரிகள் கூறியுள்ளனர். டிரம்ப் இன்னும் தோல்வியை ஏற்றுக்கொள்ளவில்லை.இந்த நிலையில் ராணுவ வீரர்களை அவர் மீண்டும் அமெரிக்கா அழைக்கிறார். இது சந்தேகம் அளிக்கிறது என்றும் சில முன்னாள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

English summary
Why US President Trump planning to pull back US troops from foreigns?.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X