நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எப் 16 விமானத்தை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தியது ஏன்.. பாக்.குக்கு யுஸ் நோட்டீஸ்

Google Oneindia Tamil News

Recommended Video

    எப் ௧௬ பயன்படுத்திய விவகாரம்... பாகிஸ்தானிற்கு அமெரிக்காநோட்டீஸ்

    நியூயார்க்: இந்தியாவுக்கு எதிராக எஃப் 16 ரக போர் விமானங்களை பயன்படுத்தியதற்கு விளக்கம் கேட்டு பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    புல்வாமாவில் துணை இராணுவப் படையினர் கொல்லப்பட்டதை தொடர்ந்து கடந்த மாதம் 26 ஆம் தேதி பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று இந்தியா பதிலடி தாக்குதல் நடத்தியது.

    Why use F-16 fighter aircraft against india: US Notice to Pakistan

    இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க நினைத்த பாகிஸ்தான், எஃப் 16 ரக போர் விமானங்கள் மூலம் இந்திய எல்லைக்குள் ஊடுருவ பயன்படுத்தியதாக இந்தியா குற்றம் சாட்டியது.

    முற்றும் மோதல்.. அமெரிக்க பொருட்கள் மீது கூடுதல் வரிவிதிக்க இந்தியா முடிவு.. டிரம்பிற்கு பதிலடி! முற்றும் மோதல்.. அமெரிக்க பொருட்கள் மீது கூடுதல் வரிவிதிக்க இந்தியா முடிவு.. டிரம்பிற்கு பதிலடி!

    ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாகவும் அதற்கான ஆதாரங்களை அமெரிக்காவிடம் இந்தியா கொடுத்துள்ளது. எஃப் 16 ரக போர் விமானங்கள் அமெரிக்காவின் தயாரிப்புகளாகும். அந்த வகையில், இறுதி பயனாளிகள் ஒப்பந்தத்தின்படி எஃப் 16 ரக போர் விமானங்களை, தீவிரவாத ஒழிப்புக்காக உள்நாட்டுக்குள் தான் பயன்படுத்த வேண்டும்.

    பதில் தாக்குதல், ஊடுருவலை தடுத்தல் போன்றவற்றிற்கு பயன்படுத்த வேண்டும் என்றால் அமெரிக்காவின் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால் இந்த ஒப்பந்தங்களை பாகிஸ்தான் மீறி விட்டது என்பது அமெரிக்காவின் குற்றச்சாட்டாகும். அதை பயன்படுத்தவில்லை என பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது.

    இதனிடையே பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்படும் விசா கால அளவை ஐந்து ஆண்டுகளில் இருந்து மூன்று மாதங்களாக அமெரிக்கா குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    US Notice to Pakistan: Why used F-16 fighter aircraft against India?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X