நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடியின் விமானம் பறக்க அனுமதி மறுத்தது ஏன்.. பாகிஸ்தானிடம் கேள்வி எழுப்பிய ஐநா!

Google Oneindia Tamil News

Recommended Video

    மோடியின் விமானம் பறக்க அனுமதி மறுத்தது ஏன்.. பாகிஸ்தானிடம் ஐநா கேள்வி-வீடியோ

    நியூயார்க்: பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க அனுமதி மறுக்கப்பட்டது ஏன் என ஐநா கேள்வி எழுப்பியுள்ளது.

    கடந்த பிப்ரவரி மாதம் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகிவிட்டனர். இதையடுத்து பாகிஸ்தானில் இந்தியா வான் வெளி தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்கள் மீது குண்டுவீசி அழித்தன.

    அன்றைய நாள் முதல் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நீடித்து வருகிறது. இதையடுத்து பாகிஸ்தான் தங்கள் நாட்டு வான்வெளியில் விமானங்கள் பறக்க தடை விதித்தது.

    சிவசேனாவுடன் பஞ்சாயத்து நீடிக்கும் நிலையில் முதல்வராக பதவியேற்கிறார் பட்னாவிஸ்சிவசேனாவுடன் பஞ்சாயத்து நீடிக்கும் நிலையில் முதல்வராக பதவியேற்கிறார் பட்னாவிஸ்

    யூனியன பிரதேசங்கள்

    யூனியன பிரதேசங்கள்

    எனினும் கடந்த ஜூலை 16-ஆம் தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தடையை முழுவதுமாக நீக்கியது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்துவிட்டு அதை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தன.

    மோடியின் விமானம்

    மோடியின் விமானம்

    இதனால் பதற்றம் மேலும் அதிகரித்துவிட்டது. இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை பிரதமர் மோடி அரசு முறை பயணமாக சவுதி அரேபியாவுக்கு சென்றார். அப்போதும் மோடியின் விமானம் பறக்க பாகிஸ்தான் தடை விதித்தது.

    பாகிஸ்தானிடம் விளக்கம்

    பாகிஸ்தானிடம் விளக்கம்

    இதையடுத்து ஐநாவின் சர்வதேச விமான போக்குவரத்து
    அமைப்பில் (International Civil Aviation Organisation (ICAO)) இந்தியா முறையிட்டது. இதையடுத்து மோடியின் விமானம் பறக்க அனுமதி மறுத்தது ஏன் என பாகிஸ்தானிடம் விளக்கம் கேட்டுள்ளது.

    ஒத்துழைப்பு

    ஒத்துழைப்பு

    இது போல் ஐநா விளக்கம் கேட்டதால் இனி இந்திய தலைவர்களின் சிறப்பு விமானங்கள் பறக்க பாகிஸ்தான் அனுமதி அளிக்குமா என்பது தெரியவில்லை. ஐசிஏஓவின் நோக்கமே விமான போக்குவரத்து உள்ள 193 உறுப்பு நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவது ஆகும்.

    English summary
    India had taken up the matter to UN about Pakistan's denial of permission for Narendra Modi's flight. UN body asks Pakistan about why it did so?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X