நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முக்கிய முடிவு எடுத்து இருக்கிறேன்.. சீனா குறித்து இன்று இரவு அறிவிக்க போகிறேன்.. டிரம்ப் பரபரப்பு!

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனா குறித்து முக்கியமான முடிவு ஒன்றை எடுத்து இருப்பதாகவும், அது குறித்து இன்று அறிவிப்பு வெளியிட போவதாகவும் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    மோடி நல்ல மூடில் இல்லை... டிரம்ப் அதிரடி பேட்டி

    அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் தற்போது உறவு சரியாக இல்லை. கடந்த இரண்டு வருடங்களாக நடந்த வர்த்தக போர், கடந்த வருட இறுதியில்தான் முடிந்தது. அப்போது சீனாவும்- அமெரிக்காவும் ஒன்றாக சேரும் என்று எல்லோரும் நினைத்தார்கள்.

    ஆனால் அதன்பின் வருட தொடக்கத்தில் வந்த கொரோனா பிரச்சனை காரணமாக இரண்டு நாட்டு உறவில் பெரிய விரிசல் ஏற்பட்டது. சீனாவும் அமெரிக்காவும் தற்போது மிக மோசமாக ஒருவருக்கு ஒருவர் மோதிக்கொண்டு இருக்கிறது.

    "சீன பிரச்சினை பற்றி பேச போன் போட்டேன், மோடி நல்ல மூடில் இல்லை.." ட்ரம்ப் அதிரடி பேட்டி.. என்னாச்சு?

    என்ன சொல்ல போகிறார்

    என்ன சொல்ல போகிறார்

    இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனா குறித்து முக்கியமான முடிவு ஒன்றை எடுத்து இருப்பதாகவும், அது குறித்து இன்று அறிவிப்பு வெளியிட போவதாகவும் தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இன்று சீனா குறித்து நான் பேச போகிறேன். முக்கியமான விஷயம் ஒன்றுக்காக செய்தியாளர் சந்திப்பை கூட்ட இருக்கிறேன். நான் எடுத்த முடிவு ஒன்றை குறித்த அறிவிப்பை வெளியிடுவேன்.

    விவாதம் செய்யலாம்

    விவாதம் செய்யலாம்

    என்னிடம் நீங்கள் நாளை அது குறித்து கேள்வி கேட்கலாம். நாம் அதை பற்றி விவாதம் செய்யலாம். கொரோனா பரவலை சீனா நினைத்து இருந்தால் தடுத்து இருக்கலாம். ஆனால் அப்படி செய்யவில்லை. தற்போது நிலைமை மோசமாக இருக்கிறது. இப்படி நடந்து இருக்க கூடாது. இதனால் சீனா குறித்து முக்கியமான முடிவு ஒன்றை எடுத்து உள்ளேன். வெள்ளிக்கிழமை அதை பற்றி அறிவிப்பேன், என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

    பல சண்டை

    பல சண்டை

    சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் பல விஷயங்களில் சண்டை இருக்கிறது. கொரோனா பரவல் தொடர்பான விஷயத்தில் பெரிய அளவில் சண்டை நிலவி வருகிறது. இன்னொரு பக்கம் தென் சீன கடல் எல்லையில் சீனாவின் அத்துமீறலை கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்கா அங்கு சண்டை போட்டு வருகிறது. இது போதாது என்று, தற்போது இந்தியா - சீனா பிரச்சனையிலும் அமெரிக்கா மூக்கை நுழைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஹாங்காங் காரணம்

    ஹாங்காங் காரணம்

    அதேபோல் இன்னொரு பக்கம் ஹாங்காங்கில் சீனா பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்து, ஹாங்காங் நாட்டின் சுயாட்சியை பறிக்கும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. இதை அமெரிக்கா கடுமையாக எதிர்த்து வருகிறது. இதனால் அது தொடர்பாகவும் டிரம்ப் கடுமையாக பேசி வருகிறார். ஹாங்காங் விஷயத்தை பயன்படுத்தி சீனாவிற்கு உள்நாட்டிற்கு உள்ளேயே செக் வைக்கலாம் என்று அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது.

    நான்கு பிரச்சனை

    நான்கு பிரச்சனை

    இதனால் சீனாவிற்கு எதிராக கொரோனா பிரச்சனை, தென் சீன கடல் அமெரிக்கா பிரச்சனை, ஹாங்காங் பிரச்சனை, இந்தியா பிரச்சனை என்று நான்கு விதமான பிரச்சனைகள் வந்துள்ளது. இந்த நான்கு விஷயத்தில் டிரம்ப் எதையாவது ஒன்று குறித்து முக்கியமான அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இவரின் இந்த அறிவிப்பு இரண்டு நாட்டு அரசியலில், உலக அரசியலில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

    English summary
    Will announce my certain decision on China today says, Donald Trump.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X