நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நயாகரா நீர்வீழ்ச்சி அப்படியே உறைந்து போச்சு.. அமெரிக்காவில் அவ்ளோ குளிர்.. ஜில்லிட வைக்கும் படங்கள்

Google Oneindia Tamil News

நியூயார்க்: கடும் குளிர் காரணமாக நயாகரா நீர்வீழ்ச்சியின் ஒருபகுதி உறைந்து போய்விட்டது, சுற்றுலா பயணிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

உலக வெப்பமயமாதல் காரணமாக பருவம் தவறி கால நிலைகள் மாறி வருகின்றன. தமிழகத்தில் கூட பிப்ரவரி மாதம், எப்போதும் இல்லாத அளவுக்கு மழை வெளுத்து வாங்கியது.

Winter freezes ice crust over Niagara Falls

இதேபோலத்தான், அமெரிக்காவில் வரலாறு காணாத குளிர் நிலவி வருகிறது. டெக்சாஸ் மாகாணத்தில் கடும் குளிர் காரணமாக மின் விசிறிகளில் கூட ஐஸ்கட்டி தொங்கிக் கொண்டிருக்கக் கூடிய புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி திகில் ஏற்படுத்தின.

இந்த நிலையில் தான் உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி என்று புகழப்படும் நயாகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதி உறைந்து போய்விட்டது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு இடையே உள்ள பகுதி நயாகரா நீர்வீழ்ச்சி ஆகும். இங்கு கடும் குளிர் காரணமாக விழுகின்ற தண்ணீர் உறைந்து விட்டது. ஒரு சில பகுதிகளில் மட்டும் அது தண்ணீராக விழுகிறது.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

English summary
Part of Niagara Falls has frozen due to the extreme cold, much to the amazement of tourists.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X