நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அழகு நிலா ஓகே.. ஓநாய் நிலா தெரியுமா.. இன்று வானில் பார்க்கலாமாம்.. நாசா வெளியிட்ட ஆச்சர்யத் தகவல்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: எத்தனையோ நிலவை பற்றி கேள்விப்பட்டிருப்போம்.. 'ஓநாய் நிலவு' பற்றி கேட்டதுண்டா? அப்படி ஒரு நிலவை நமக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது நாசா.

'வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா'.. 'நிலாவே வா செல்லாதே வா'... 'வெண்மதி வெண்மதியே நில்லு'.. 'வா வெண்ணிலா உன்னை தானே வானம் தேடுதே'... இப்படி நிலவின் அழகை வர்ணித்து பாடாத கவியே கிடையாது. நிலா, சந்திரன், மதி.. இப்படி நிலவை குறிக்க தமிழில் தான் எத்தனை சொற்கள் இருக்கின்றன.

அதுவும் முழு நிலவு நாளில் வானில் பிரகாசிக்கும் பந்து போன்ற நிலவின் அழகை பார்த்தால் காக்கா கூட கவிதை பாடத் தொடங்கும்.

 எல்லாம் நிலா மயம்

எல்லாம் நிலா மயம்

நிலாச் சோறு தொடங்கி வெண்ணிலா ஐஸ் க்ரீம் வரை இங்கு பலவும் நிலா மயம் தான். அதுவும் 'நிலாவுக்குள் ஒரு பாட்டி உட்கார்ந்து வடை சுட்டுக்கொண்டிருப்பதாக' தாத்தா சொன்ன கதையை நம்பி சோறு சாப்பிட்ட 90ஸ் கிட்ஸ்கள் எல்லாம் வேற லெவெல் ப்ரோ.

ஆச்சர்யம்

ஆச்சர்யம்

இப்படி நாம் நிலவை வைத்து பல கதை பேசிக்கொண்டிருக்கும் சூழலில் 'ஓநாய் நிலவு' இது தான் என ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது நாசா. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் அதிகாரப்பூர்வ சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் இரு பனிமலைகளுக்கு இடையில் பந்து போல் வானில் பிரகாசமாக மின்னுகிறான் சந்திரன்.

ஓநாய் நிலவு பாஸ்

ஓநாய் நிலவு பாஸ்

இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது எனும் உங்கள் மைண்ட் வாய்ஸ் வெளிய கேட்குது ப்ரோ.. இந்த புகைப்படத்துக்கு நாசா கொடுத்திருக்கும் கேப்ஷன் தான் ஹைலைட். இந்த முழு நிலவுக்கு பெயர் ஓநாய் நிலவாம்.

பெயர்க்காரணம்

பெயர்க்காரணம்

பெரும்பாலும் நிலவின் அழகை வர்ணித்து தான் சொல்வார்கள். ஆனால் வித்தியாசமாக அது என்ன ஓநாய் நிலவு என்கிறீர்களா? அதற்கும் அவர்களே விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். அதாவது டிசம்பர் மாத இறுதியில் பனிபடர்ந்த இரவு பொழுதில் வானில் தெரியும் முழு நிலவை 'ஓநாய் நிலவு' என அமெரிக்காவின் வடக்கு மற்றும் வட கிழக்கு பகுதிகளில் வாழ்ந்து வரும் அல்கொன்கின் பழங்குடியினர் அழைப்பார்களாம்.

ஐஸ் மூன்

ஐஸ் மூன்

அதாவது டிசம்பர் மாத இறுதியில் பனிபடர்ந்த இரவு பொழுதில் வனப்பகுதியி பசியுடன் சுற்றித்திரியும் ஓநாய்கள் விநோதமாய் ஊளையிடுமாம். அதை வைத்தே இந்த முழு நிலவுக்கு ஓநாய் நிலவு என பெயர் வைத்திருக்கிறார்கள். மேலும் இந்த நிலவை 'ஐஸ் மூன்' என்றும் அமெரிக்கர்கள் அழைக்கிறாகள்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்

புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்தக் குளிர் காலத்தில் வரும் பெளர்ணமி என்பதால் இந்த பெயராம். இதைப் படித்ததும் சிறு வயதில் மொட்டை மாடியில் குடும்பத்துடன் உட்கார்ந்து நிலாச் சோறு சாப்பிட்ட ஞாபகம் வருகிறதா? ஒன்றும் கவலை வேண்டாம்.. நாளை வரை நீங்கள் இந்த ஓநாய் நிலவை பார்க்கலாம். எனவே இரவு குடும்பத்துடன் நிலா சோறு சாப்பிட்டுக்கொண்டே புத்தாண்டை வரவேற்க தயாராகுங்க. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

English summary
The American space agency NASA shared a picture of full moon and named it 'Wolf moon'. This picture published on their official Instagram page on December 30 gone viral.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X