நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அந்த இடத்தில் உற்றுப் பார்த்த மக்கள்.. ரவுண்டு கட்டி கலக்கிய பெண்.. இப்படியும் ஒரு விழிப்புணர்வு

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க பெண் ஒருவர் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வித்தியாசமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.

கேன்சர் எனும் நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் அது உயிர் கொல்லி அல்ல. கேன்சர் எனப்படும் புற்றுநோய் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால்தான் ஏராளமானோர் கேன்சரால் இறக்க நேரிடுகின்றனர்.

பொதுவாக ஆண்களை அதிகம் பாதிப்பது நுரையீரல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் போன்றவையாகும். சிகரெட் பிடிப்பதால் நுரையீரலில் புற்றுநோயும், குடிப்பதாலும் அதிகம் கொழுப்பு சேர்வதாலும் கல்லீரலில் புற்றுநோயும் ஏற்படும் என்கின்றனர்.

கணவர் அடித்து கொலை.. பலாத்காரம் செய்யப்பட்ட மனைவி.. கணவர் உடலுடன் 170 கி.மீ அலைந்த பரிதாபம்!கணவர் அடித்து கொலை.. பலாத்காரம் செய்யப்பட்ட மனைவி.. கணவர் உடலுடன் 170 கி.மீ அலைந்த பரிதாபம்!

புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு

புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு

ஆனால் பெண்களை பொருத்தமட்டில் 30 அல்லது 40 வயதை கடந்து விட்ட பெண்கள் மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு அதிகம் தேவைப்படுகிறது. இவை அந்தரங்கமான இடங்கள் என்பதால் மருத்துவர்களிடம் கூட மறைக்கும் நிலையில் பெண்கள் உள்ளனர்.

வீடியோ

வீடியோ

இதனால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனால் பெண்களுக்கு இந்த நோய் குறித்த விழிப்புணர்வு அதிக அவசியமாகிறது. இதற்காக நியூயார்க்கை சேர்ந்த க்ரிஸ் ஸிலிங் என்ற பெண் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ஹோட்டல்கள்

ஹோட்டல்கள்

அதில் அவர் சாதாரணமாக ஒரு ஆடையை அணிந்து செல்கிறார். அது ஆபாசமாக இல்லை. மார்பு பகுதியில் உள்ள உள்ளாடையில் அந்த பெண் ஹிட்டன் கேமராவை வைத்துக் கொண்டு மார்க்கெட், ஷாப்பிங் மால், ஹோட்டல்கள் ஆகிய அனைத்து இடங்களுக்கும் செல்கிறார்.

முகம்

முகம்

அப்போது அவரது மார்பகங்களை காணும் நபர்களை அந்த ஹிட்டன் கேமரா படம் பிடித்து விடுகிறது. அவ்வாறு ஆண்கள், பெண்கள் என எத்தனை பேர் அவரது மார்பகங்களை பார்க்கின்றனரோ அத்தனை பேரின் முகத்தையும் கேமரா படம்பிடிக்கிறது.

விழிப்புணர்வு

அவரது மார்பகங்களை காணும் நபர்கள் பிங்க் நிறத்தில் வட்டமிட்டு காட்டப்படுகிறார்கள். கடைசியில் அந்த வீடியோவில் அந்த பெண், பெண்களே உங்கள் மார்பகங்களை கவனியுங்கள்.உங்கள் மார்பகங்களை நீங்களே காணாமல் விடுவது சரியல்ல. இனியாவது விழித்துக் கொண்டு மார்பக புற்றுநோயை தவிருங்கள் என கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலாகியுள்ளது. அந்த வீடியோ 1.5 நிமிடங்கள் ஓடக்கூடியதாகும்.

English summary
Woman fits camera in her inner for creating breast cancer awareness. The length of the video is 1.5 minutes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X