• search
நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஆன்லைனில் முளைத்த காதல்.. பாவம், ஒரு மாணவியை என்னவெல்லாம் செய்ய வைத்திருக்கிறது பாருங்கள்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: ஆன்லைன் மூலம் முளைத்த காதல் ஒரு இளம்பெண்ணை என்னவெல்லாம் செய்ய வைத்திருக்கிறது என்ற கதை தான் இப்போது இணையத்தில் பேசு பொருளாகி இருக்கிறது.

இந்த உலகில் இன்னமும் புரியாத புதிராக விளங்கும் பல விஷயங்களில் மிக முக்கியமானது காதல். ஒரு பெண்ணுக்கோ, ஆணுக்கோ காதல் வந்துவிட்டால், அது அவர்களை எந்த எல்லைக்கும் போக வைக்கும். அதனால் தான் இன்னமும் பல சினிமாக்கள் காதலை மையப்படுத்தியே வந்து கொண்டிருக்கின்றன.

சமயங்களில் நிஜ காதல்கதைகள் சினிமாவையும் மிஞ்சி விடும். இப்போதும் அப்படிப்பட்ட ஒரு விநோத காதலை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜூலியா என்ற பெண்ணின் காதல் கதைதான் அது.

உருக வைக்கும் சோகத்தை பாருங்க.. இந்தியாவில் இறந்த கணவர்.. உடல் தகனத்தை ஆன்லைன் மூலம் பார்த்த மனைவி! உருக வைக்கும் சோகத்தை பாருங்க.. இந்தியாவில் இறந்த கணவர்.. உடல் தகனத்தை ஆன்லைன் மூலம் பார்த்த மனைவி!

ஜூலியாவின் காதல்

ஜூலியாவின் காதல்

டிக்டாக் வீடியோவில் ஜூலியா தனது காதல் கதையை விவரித்துள்ளார். அதில் அவர், "நான் அப்போது மேல்நிலை பள்ளியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தேன். ஆன்லைன் மூலம் ஒரு பையன் எனக்கு அறிமுகமானான். முதல் முறை சாட்டிங் செய்த போதிருந்தே அவன் மீது எனக்கு ஈர்ப்பு வந்துவிட்டது.

இனிமையான நாட்கள்

இனிமையான நாட்கள்

நாங்கள் இருவரும் மணிக்கணக்கில் பேச ஆரம்பித்தோம். சுமார் 3 மாதங்களுக்கு மேல் இருவரும் ஆன்லைனில் டேட்டிங் செய்தோம். அவன் மீது நான் காதலில் விழுந்தேன். அந்த நாட்கள் அத்தனை இனிமையாக கழிந்தன.

மாயமான காதலன்

மாயமான காதலன்

திடீரென ஒரு நாள் அந்த பையனிடம் இருந்து எந்த செய்தியும் வரவில்லை. அவனிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தியாவது வந்துவிடாதா என நான் ஏங்கினேன். அவனை பற்றி அவனது நண்பர்கள் பலரிடம் விசாரித்தேன். அவர்களுக்கும் அவன் எங்கு போனான் என தெரியவில்லை.

சிறையில் காதலன்

சிறையில் காதலன்

இந்த சூழலில் தான் அவன் சிறையில் இருப்பது எனக்கு தெரியவந்தது. எப்படியாவது சிறைக்கு சென்று அவனை பார்த்துவிட வேண்டும் என நினைத்தேன். அதற்காக எனது பள்ளியில் உள்ள மாணவர்களுக்கான சட்டக்குழுவில் இணைந்தேன். தொடர்ந்து அந்த குழுவில் அதிக கவனத்துடன் இயங்கினேன். இதன் மூலம் சிறைசாலைக்கு நேரில் செல்லும் வாய்ப்பு எனக்கு வந்தது.

ஜூலியாவின் சிறைப்பயணம்

ஜூலியாவின் சிறைப்பயணம்

ஒரு நாள் சட்டக்குழுவுடன் சேர்ந்து நான் சிறைக்கு சென்றேன். ஆனால் அங்கு நான் எதிர்பார்க்காத ஒன்று நிகழ்ந்துவிட்டது", எனக் கூறி ஜூலியா நிறுத்த, "அதன் பிறகு என்ன ஆனது... உங்கள் காதலனை பார்த்தீர்களா...", என துள்ளாத மனமும் துள்ளும் விஜய்யிடம் பிளாஷ்பேக் கேட்பது போல ஜூலியாவின் பாலோயர்கள் அவரிடம் பேராவலுடன் கேட்டனர்.

 கடைசியில் என்ன ஆனது?

கடைசியில் என்ன ஆனது?

ஒரு சிறிய இடைவெளிக்கு பின் ஜூலியா, "நான் பெண் என்பதால் என்னை ஆண்கள் இருக்கும் சிறைக்கு அனுமதிக்கவில்லை. மாறாக என்னை பெண்கள் அடைக்கப்பட்டிருக்கும் சிறைக்கு அனுப்பிவிட்டனர். நான் எவ்வளவோ முயன்றும் என்னால் என் காதலனை பார்க்க முடியவில்லை.

ஜூலியாவின் மெசேஜ்

ஜூலியாவின் மெசேஜ்

அதன் பிறகு தான் எனக்கு புரிந்தது சிறைக்கு சென்ற ஒருவனை காதலித்தது எத்தனை பெரிய தவறு என்பது. எனவே என்னை போல் யாரும் முட்டாள் தனமாக இது போன்ற காரியங்களை செய்ய வேண்டாம்" என மெசேஜ் சொல்லி ஜூலியா தனது கதையை முடித்து விட்டார். சுபமான முடிவு கிடைக்கும் என ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்த அவரது பாலோயர்கள் இதனால் ஏமாற்றமடைந்தனர்.

விரைவில் திரைப்படம்

விரைவில் திரைப்படம்

ஆனாலும் ஜூலியாவின் இந்தக் காதல் கதை வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. பள்ளிப் பருவத்தில் ஏற்பட்ட ஆன்லைன் காதலால், இளம்பெண் ஒருவர் காதலனைத் தேடி சிறை வரை சென்று வந்தது இணையவாசிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. வளர் இளம்பெண்கள் உள்ள வீடுகளில் இருப்போர் இன்னமும் ஜாக்கிரைதையாக இருக்க வேண்டும் என்பதற்கு ஜூலியின் இந்த கதை ஒரு பாடம்.

English summary
A woman who had been ghosted by her online date discovered that he's in prison and decided to join a school trip to visit him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X