• search
நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஒரே நேரத்தில் 16 பேர்.. டேட்டிங்கிற்கே இப்படியா.. இந்தப் பொண்ண பார்த்தா நமக்கே லைட்டா தலை சுத்துதே!

|

நியூயார்க்: அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஒரே சமயத்தில் 16 ஆண்களை டேட்டிங்கிற்கு அழைத்து அதிர வைத்துள்ளார்.

உலகம் முழுவதும் தற்போது இளைஞர்களிடையே டேட்டிங் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. திருமணத்திற்கு முன்னதாக காதலித்து ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை கொஞ்சம் கொஞ்சமாய் உருமாறி, சமீபகாலமாய் காதலர்கள் ஆவதற்கும் சில புதிய வழிமுறைகளைக் கடைபிடிக்க ஆரம்பித்துள்ளனர். அதில் ஒன்று தான், ஒன்றாக ஊர் சுற்றி ஒருவரை ஒருவர் புரிந்தகொள்ள முயற்சிக்கும் டேட்டிங்.

''எங்களால் மீண்டும் சுவாசிக்க முடிகிறது''.. தீர்ப்பை வரவேற்கும் ஜார்ஜ் பிளாய்ட் குடும்பத்தினர்! ''எங்களால் மீண்டும் சுவாசிக்க முடிகிறது''.. தீர்ப்பை வரவேற்கும் ஜார்ஜ் பிளாய்ட் குடும்பத்தினர்!

இந்த முறையை முயற்சிக்க இளம் ஜோடிகள் எல்லாம் தவியாய் தவிக்கின்றனர். அப்படிப்பட்ட இளசுகளுக்காகவே டேட்டிங் செயலிகள் பல இணையத்திலும் குவிந்து கிடக்கின்றன.

டேட்டிங் ஆப்

டேட்டிங் ஆப்

அதில் ஒன்று தான் ஹிங்கே என்ற டேட்டிங் ஆப். அதன் மூலமாகத் தான் அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை சம்பந்தப்பட்ட இளைஞர் ஒருவர் சந்தித்துள்ளார். சிறிது நாட்கள் பழகியதும் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து போய்விட்டது. இதையடுத்து இருவரும் டேட்டிங் செல்ல முடிவு செய்து அதற்காக நாள் ஒன்றையும் குறித்தனர்.

கும்பலாக இளைஞர்கள்

கும்பலாக இளைஞர்கள்

திட்டமிட்ட அந்த நாளில் தனது மனதிற்குப் பிடித்த அந்தப் பெண்ணைச் சந்திப்பதற்காக அவர்கள் முடிவு செய்த இடத்திற்கு சென்றுள்ளார் அந்த இளைஞர். அங்கு ஏற்கனவே தன்னைப் போலவே பல இளைஞர்கள் இருக்கவே அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். நாம் டேட்டிங் தானே வந்தோம்.... இது ஏதோ பார்ட்டி போல் அல்லவா இருக்கிறது என மைண்ட் வாய்ஸ் வெயில் கேட்கும் அளவிற்கு குழம்பி போய் இருக்கிறார் அந்த இளைஞர்.

தேர்வு

தேர்வு

உடனடியாக சம்பந்தப்பட்ட அந்த பெண்ணிடம் என்ன ஏது என விசாரித்துள்ளார். அதற்கு அந்த பெண் கூறிய பதில் தான் அல்டிமேட். அதாவது, அங்கு கூடியிருந்த சுமார் 16 இளைஞர்களுடனும் ஒரே நேரத்தில் நட்பு பாராட்டியுள்ளார் அந்த இளம்பெண். அவர்கள் அனைவரையுமே அவருக்குப் பிடித்துப் போக, அவர்களில் யாரை டேட்டிங்கிற்கு அழைத்துச் செல்லலாம் என முடிவு செய்யத்தான் அன்று அவர்கள் அனைவரையும் ஒரே இடத்திற்கு அழைத்துள்ளார்.

ஓட்டம் பிடித்த இளைஞர்கள்

ஓட்டம் பிடித்த இளைஞர்கள்

"உங்கள் அனைவரில் யார் எனக்கு பொறுத்தமானவரோ அவரை தேர்ந்தெடுக்கலாம் என இருகிறேன்", எனக் கூறி அந்த இளைஞரை மட்டுமின்றி, அங்கு வந்திருந்த அனைத்து இளைஞர்களையும் அதிர வைத்திருக்கிறார் அப்பெண். இதை கேட்டு அங்கிருந்த மயக்கம் போட்டு விழாத குறை தான். பலர் பாதியிலேயே கோபித்துக்கொண்டு மூட்டை கட்டிவிட்டனர்.

நொந்து போன இளைஞர்

நொந்து போன இளைஞர்

தான் நொந்து நூடுல்சான இந்த சம்பவத்தை புகைப்படத்துடன் சமூகவலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் சம்பந்தப்பட்ட அந்த இளைஞர். அதில், "இத்தனை ஆண்டுகளில் முதல் முறையாக இப்போது தான் ஒரு பெண்ணுடன் டேட்டிங் செல்லலாம் என ஆசையாக சென்றேன். அதுவும் இப்படி ஆகிவிட்டதே", என ‘என் சோக கதையக் கேளு தாய்க்குலமே' என்ற ரேஞ்சுக்கு புலம்பியிருக்கிறார்.

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

கூடவே அங்கு நடந்த அனைத்தையும் வீடியோவாக எடுத்தும் சமூகவலைதளங்களில் பதிவேற்றிவிட்டார். இதைப் பார்த்த நெட்டிசன்கள், பாவப்பட்ட அந்த இளைஞருக்காக பரிதாபப்படுவதா அல்லது கலாய்ப்பதா என ரூம் போட்டு யோசித்து வருகின்றனர். சில நெட்டிசன்கள் அந்த பெண்ணை 'பைத்தியம்' என திட்டி தீர்த்துள்ளனர். ஒரு சிலர் அந்த பெண்ணுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

English summary
A man was left shocked after turning up to a date with a woman after knowing that she’d invited 16 other guys without telling him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X