நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யாதும் ஊரே யாவரும் கேளீர்.. ஐ.நா.சபையில் உலகத்துக்கே அருமையான கருத்தை தமிழில் பேசிய மோடி

Google Oneindia Tamil News

Recommended Video

    ஐ.நா. சபைபில் பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு

    நியூயார்க்: மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று உலகின் பழமையான மொழியான தமிழில் கனியன் பூங்குன்றனார் எழுதியிருப்பதாக பிரதமர் மோடி ஐக்கிய நாடுகள் சபையில் பேசினார்.

    பிரதமர் மோடி இன்று ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் "இந்தியாவில் மிகப்பெரிய அளவில் சுகாதாரத்திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்தியா முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்தில் 5 ஆண்டுகளில் 11 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டம் போல் உலகம் முழுவதும் தூய்மை திட்டத்தை கொண்டு வரவேண்டும் என்றார்.

     உலகம் தீவிரவாதத்திற்கு எதிராக ஓரணியில் நிற்க வேண்டும். ஐ.நா. சபைபில் பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு உலகம் தீவிரவாதத்திற்கு எதிராக ஓரணியில் நிற்க வேண்டும். ஐ.நா. சபைபில் பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு

    சுகாதார திட்டம்

    சுகாதார திட்டம்

    இதேபோல் இந்தியாவில் 37 கோடி ஏழைகளுக்கு வங்கி கணக்கு தொடங்கப்பட்டது, மற்றும் 50 கோடி மக்களுக்கு சுகாதார திட்டம் தொடங்கப்பட்டுள்ளது குறித்தும் பிரதமர் மோடி பேசினார்.

    ஊழல் இல்லை

    ஊழல் இல்லை

    அப்படியே பயோமெட்ரிக் அடையாள திட்டமான ஆதார் திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்படுவது குறித்தும் அதன் மூலம் ஊழல் இல்லாமல் மக்களுக்கு திட்டங்கள் சேர்க்கப்படுவதையும் விவரித்தார்.

    நீர் பாதுகாப்பு

    நீர் பாதுகாப்பு

    மேலும் பிளாஸ்டிக் தடை குறித்தும் புதிய வீடுகள் கட்டும் திட்டம் குறித்தும் விரிவாக பேசினார். நீர் பாதுகாப்பை இந்தியா வலியுறுத்தி வருவதாகவும், சாலைகள் அமைக்கும் திட்டம் குறித்தும் பேசினார்.

    யாதும் ஊரே யாவரும் கேளீர்

    யாதும் ஊரே யாவரும் கேளீர்

    குறிப்பாக மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று உலகின் பழமையான மொழியான தமிழில் கனியன் பூங்குன்றனார் எழுதியிருப்பதாக பிரதமர் மோடி ஐக்கிய நாடுகள் சபையில் பேசினார். இதன் அர்த்தத்தையும் தெளிவாக விளக்கி சொன்ன மோடி, நாம் அனைவருக்கும் எல்லா இடங்களும் எல்லாருக்கும் சொந்தம், எல்லைகளுக்கு அப்பாற்பட்ட இந்த உணர்வு இந்தியாவுக்கு தனித்துவமானது என்றார்.

    English summary
    “Ya-dum, Oo-ray, Yaav-rum Ke-lir” pm modi tamil speech in un, he said kariyan pungundranaars great lines
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X