நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உடம்பெல்லாம் மண்ணெண்ணெய் கொட்டி.. பாத்ரூமில் குளிக்க போன 18 வயசு பெண்.. காத்திருந்த கொடுமை

கல்லூரி மாணவி தீ விபத்தில் உடல் கருகி பலியானார்

Google Oneindia Tamil News

ஊட்டி: உடம்பெல்லாம் மண்ணெண்ணை கொட்டிவிட்டது.. அதனால் குளிக்க போனார் 18 வயசு ஷெர்சியா.. 'ஹீட்டர்' போட்டவுடனேயே குப்பென மொத்தமாக பற்றிக் கொண்டு எரிந்துவிட்டார்.. இந்த சோகத்தின் பிடியில் கோத்தகிரி சிக்கி உள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கோவில்மேட்டை சேர்ந்தவர் குணசேகரன்.. 65 வயதாகிறது.. தோட்ட தொழிலாளர்கள் நல வங்கியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.. இவர் மனைவி யுவராணி, டீச்சராக வேலை பார்த்து ரிடையர் ஆனவர். இவர்களின் ஒரே மகள் ரெனி ஷெர்சியா.. 18 வயசுதான் ஆகிறது.. கோவையில் ஒரு காலேஜில் பிஎஸ்சி 2-ம் வருஷம் படித்து வந்தார்.

 18 year old college student killed in fire near kottagiri

இப்போது லாக்டவுன் என்பதால், வீட்டுக்கு வந்திருக்கிறார்.. சம்பவத்தன்று வீட்டில் ஷெல்ப்பில் இருந்த மண்ணெண்ணெய் கேனை எடுக்க ஷெர்சியா முயன்றார்.. ஆனால், அந்த கேன் உயரமான இடத்தில் இருந்தது.. அதை எடுக்க முயன்றபோது, திடீரென மண்ணெண்ணெய் இவர் மீது கொட்டிவிட்டது.. தலையெல்லாம் எண்ணெய் ஆகிவிட்டது..

தனது வீட்டின் உயரமான இடத்தில் இருந்த மண்எண்ணெய் கேனை எடுக்க ரெனி ஷெர்சியா முயன்றதாகவும்அதனால், குளிக்கலாம் என்று பாத்ரூம் சென்றார்.. இரவு நேரம் குளிர் என்பதால், வெந்நீரில் குளிப்பதற்காக வாட்டர் ஹீட்டர் ஸ்விட்ச் ஆன் செய்ய முயன்றார்.. அப்போது எதிர்பாராத விதமாக சுவிட்சில் இருந்து தீப்பொறி வெடித்தது.. அந்த தீப்பொறி இவர் மீது விழுந்து குப்பென தீப்பிடித்தது.. ஏற்கனவே உடம்பெல்லாம் மண்ணெண்ணெய் கொட்டி இருந்ததால், தீ வேகமாக அவருடைய உடல் முழுவதும் பரவியது.

இதனால் வலிதாங்க முடியாமல் அலறி கதறி துடித்தார்.. அந்த சத்தம் கேட்டதும் பெற்றோர் ஓடிவந்தனர்.. அப்போதுதான் மகள் மொத்தமாகவே பற்றிக் கொண்டு எரிந்து கொண்டிருப்பதை கண்டு பதறினர்.. உடம்பில் பிடித்த தீயை அணைத்தனர்... ஆனால் உடல் அதற்குள் கருகி படுகாயம் அடைந்து, உயிருக்கு போராடினார் ஷெர்சியா.

பிறகு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கும், மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்... இருந்தாலும் ஆஸ்பத்திரி கொண்டுபோகும் போதே 90 சதவீதம் தீக்காயம் இருந்தது.. இந்நிலையில் அவர் உயிரை காப்பாற்ற டாக்டர்கள் போராடியும் முடியவில்லை.. ஷெர்சியா பரிதாபமாக இறந்தார்.

நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.10000 கடன் தரும் மத்திய அரசு... எளிதாக விண்ணப்பிக்க புதிய ஆப் அறிமுகம்நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.10000 கடன் தரும் மத்திய அரசு... எளிதாக விண்ணப்பிக்க புதிய ஆப் அறிமுகம்

இதுகுறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்... இந்த சம்பவம் கோத்தகிரியில் பெருத்த சோகத்தை தந்துள்ளது.. குணசேகரன்-யுவராணி தம்பதிக்கு ரொம்ப வருஷமாகவே குழந்தை இல்லாமல் இருந்திருக்கிறது.. அதனால் ஷெர்சியாவை தத்துதெடுத்து வளர்த்து வந்தனர்... பாசத்தை கொட்டி கொட்டி வளர்த்தும், ஆசை மகள் கண்முன்னாடியே கருகி இறந்த அதிர்ச்சியில் நிலைகுலைந்து போயுள்ளனர்.

English summary
18 year old college student killed in fire near kottagiri
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X