நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கேரட் கழுவும் மிஷினில் சிக்கிய நந்தினி.. உடல் வேறு.. தலை வேறாக பரிதாப மரணம்.. அதிர்ச்சியில் நீலகிரி!

Google Oneindia Tamil News

ஊட்டி: நந்தினியின் தலைமுடி கேரட் கழுவும் மிஷினில் சிக்கி கொண்டது.. இதனால் கொஞ்ச நேரத்திலேயே உடல் தனியாகவும் தலை தனியாகவும் சிதறி விழ, நந்தினி துடி துடித்தபடியே உயிரிழந்தார். ஊட்டியில் நடந்த இந்த சம்பவம் மொத்த நீலகிரி மாவட்ட மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது!!

நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலை காய்கறி விவசாயம்தான் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. அந்த வகையில் மிக முக்கிய காய்கறி கேரட்.. நீலகிரி மக்களுக்கு பிரதானமே இந்த சிவப்பு தங்கம் எனப்படும் கேரட்தான்!!

எப்போதுமே கேரட்டை அறுவடை செய்து அதனை தண்ணீரில் சுத்தம் செய்து, அதற்கு பிறகு விற்பனை நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு செல்வார்கள்.. பல காலமாகவே இப்படித்தான் நடந்து வந்தது.. ஆனால் இவர்களின் செலவினை குறைக்கவும்,வேலைப்பளுவை எளிதாக்கவும் தோட்டக்கலை சார்பாக சில வருடங்களுக்கு முன்பு மிஷின்கள் கொண்டு வரப்பட்டன.. இது விவசாயிகளுக்கு பெரிதும் உதவி வருகிறது.

பாலாடா

பாலாடா

அப்படித்தான், இன்று ஊட்டி அருகே உள்ள கேத்தி பாலடா பகுதியில் மிஷின் மூலம் கேரட்டை சுத்தப்படுத்தும் பணி நடந்து வந்தது.. இதில் எதுமை கண்டி பகுதியில் வசித்து வரும் நந்தினி என்பவர் இன்று வேலை செய்து வந்துள்ளார்... கேரட்டுகளை மதுரைக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்ததால், அவைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

தலைமுடி

தலைமுடி

எதிர்பாராதவிதமாக கேரட் கழுவும் மிஷினில் நந்தினியின் தலைமுடி சிக்கி கொண்டது.. மொத்த முடியும் இயந்திரத்திற்குள் சிக்கி கொள்ளவும் கதறி துடித்தார் நந்தினி.. ஆனால் கொஞ்ச நேரத்திலேயே நந்தினியின் தலை துண்டானது.. துடிக்க துடிக்க சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்... நந்தினிக்கு வயது 18!

போஸ்ட் மார்ட்டம்

போஸ்ட் மார்ட்டம்

இதை பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நந்தினி உடலை மீட்டு அரசு ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.. வழக்கு பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். உரிய பாதுகாப்பு இல்லாமல் கேரட் சுத்தம் செய்யும் பணியை செய்ததுதான் இந்த விபத்துக்கு காரணம் என்று முதல்கட்டமாக சொல்லப்படுகிறது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

10-ம் வகுப்பு வரை படித்துள்ளார்.. இவரது தந்தை - சுப்பிரமணி, தாயார் பெயர் சுமித்ரா.. இவர்களின் சொந்த ஊர் சேலம்.. பிழைப்பு தேடி 20 வருடங்களுக்கு முன்பு நீலகிரிக்கு வந்து குடியேறி உள்ளனர்.. கேரட் கழுவும் தொழிலைதான் இவர்கள் செய்து வந்திருக்கிறார்கள்.. அந்த வகையில் நந்தினியும் இதே தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இப்படி ஒரு விபத்து ஊட்டியில் இதற்கு முன்பு நடந்ததும் இல்லை.. இதனால் மலை மாவட்ட மக்கள் நந்தினி மரணத்தால் அதிர்ந்து போயுள்ளனர்.

English summary
18 year old young woman trapped in carrot cleaning machine dies near ooty
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X