நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஊட்டியில் ஒரே ஜன கூட்டம்.. ரோடெல்லாம் பிசி.. கூடவே சூப்பராக மழை.. இயல்பு நிலை வந்துருச்சோ!

ஊட்டியில் தளர்வுக்கு பிறகு இயல்பு நிலை திரும்பி கொண்டுள்ளது

Google Oneindia Tamil News

ஊட்டி: ஊட்டி ரோடெல்லாம் பிஸியோ பிஸி.. தளர்வுக்கு பிறகு ஊட்டியில் வாகனங்கள் ஏராளமாக தென்பட்டு டிராபிக் ஜாம் அளவுக்கு போய்விட்டது.. இயல்பு நிலைக்கு ஊட்டி வந்து கொண்டிருப்பதை கண்டு மக்கள் இன்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.. இன்னொரு பக்கம் சில்லென்று மழை கொட்டி வருவதால் இது கூடுதல் சந்தோஷத்தை ஏற்படுத்தி வருகிறது.

ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டு உள்ளதால், ஊட்டி, குன்னூர், கூடலூரில் மக்கள் நடமாட்டம் அதிகமாகி உள்ளது.. குறிப்பாக இங்குள்ள மார்க்கெட்டுகளில் நெருக்கம் அதிகமாகவே உள்ளது.. இதனால் சுழற்சி முறையில் சமூக இடைவெளி விட்டு கடைகள் திறக்கப்பட்டு உள்ளது.

 4.0 lockdown: traffic jam in ooty roads after lockdown relaxation

இதில் ஊட்டியில் கிட்டதட்ட அனைத்து தனிக்கடைகளுமே திறக்கப்பட்டு உள்ளன.. இதனால் பொதுமக்கள் கார், டூவீலர்களை எடுத்து கொண்டு கடைகளுக்கு வந்து செல்கின்றனர். இதனால் வாகனங்கள் வரத்து அதிகமாகி டிராபிக் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

எல்லோருமே உள்ளூர் மக்கள்தான்.. இவ்வளவு காலம் கடைகளுக்கு வராமல் இருந்தவர்கள் இப்போது திரண்டு வந்து கொண்டுள்ளனர்.. பொதுவாக சீசனில்தான் இப்படி கூட்டமும், டிராபிக் ஜாமும் இருக்கும்.. ஆனால் உள்ளூர் மக்களால் நெரிசல் ஏற்படுவது இப்போதுதான்.. எதிரே வரும் வண்டிகளுக்குகூட வழிமுடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. சில இடங்களில் வண்டிகளை திருப்பி விடும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

1970-ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை.. ஒடிஸாவை புரட்டி போட்ட புயல்கள்!.. ஓர் அலசல்1970-ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை.. ஒடிஸாவை புரட்டி போட்ட புயல்கள்!.. ஓர் அலசல்

எனினும் டிராபிக் போலீசார் இதை கண்காணித்த ஒழுங்குபடுத்தி வருகிறார்கள். இதனிடையே நீலகிரி மாவட்டத்தில் தினமும் மழை அடிச்சு ஊற்றி கொண்டுள்ளது.. மாலை நேரங்களில் குளிர் காற்றும் சேர்ந்து வீசுவதால் இரட்டிப்பு சந்தோஷத்தில் மாவட்ட மக்கள் குளிர்ந்துள்ளனர்.

Recommended Video

    Amphan Cyclone | Chennai gets surprise rain | Tamilnadu Weatherman Happy News

    English summary
    4.0 lockdown: traffic jam in ooty roads after lockdown relaxation
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X