நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பா?

Google Oneindia Tamil News

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டதாக தகவல்கள் கசிந்தது எனினும் மாவட்ட நிர்வாகம் இன்று உறுதி செய்யவில்லை.

டெல்லி சென்றுவிட்டு ஊட்டிக்கு திரும்பிய 4 பேருக்கு முதன் முதலாக கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். ஒட்டுமொத்தமாக நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 9பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் கோவை ஈஎஸ்ஐ மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வந்த நிலையில் குணம் அடைந்து வீடு திரும்பினர்.

9 new cases reported in Nilgiri district today

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 25 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை இதன் காரணமாக பச்சை மண்டலத்திற்கு முன்னேற்றம் அடைந்த நீலகிரி விரைவில் முறைப்படி பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட இருந்தது.

இதன் ஒரு பகுதியாக இன்று முதல் அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. நீலகிரி மக்களும் பெரும் நிம்மதி அடைந்து இருந்தனர்.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டதாக தகவல்கள் கசிந்தது. ஆனால் இதனை மாவட்ட நிர்வாகம் இன்று உறுதி செய்யவில்லை.

English summary
Until yesterday there was no impact but 9 new cases reported in Nilgiri district today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X