நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆ... ராசாவுக்கு இம்புட்டு செல்வாக்கா.. இந்தா பிடிங்க நீலகிரியை.. மீண்டும் தர திமுக திட்டம்!

நீலகிரி தொகுதியில் ஆ.ராசா களம் இறக்கப்படுவதாக கூறப்படுகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    மீண்டும் நீலகிரியில் போட்டியிட ஆ.ராசா முடிவு

    ஊட்டி: நீலகிரி தொகுதியில் ஆ.ராசாவின் செல்வாக்கு கண்டு வியந்த திமுக அந்த தொகுதியிலேயே அவரை நிறுத்தலாம் என யோசித்து வருகிறது.

    நீலகிரி மக்களவைத் தொகுதியில், திமுக சார்பில் ஆ.ராசா மீண்டும் போட்டியிடப்போவது ஏறக்குறைய உறுதியாகிவிட்ட நிலையில், அதிமுக, பாஜகவும் அதே தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றன.

    எப்பவுமே ஆ.ராசா பெரம்பலூர் தொகுதியில்தான் போட்டியிடுவார். ஆனால் அந்த தொகுதி பொது தொகுதியாக மாற்றப்பட்டதும், தனித் தொகுதியாக மாறிய நீலகிரியில் 2009-ம் ஆண்டு எம்பி தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். அதனால் 2014 தேர்தலிலும் ஆ.ராசா நீலகிரி தொகுதியிலேயே நிறுத்தப்பட்டார்.

    இறுதி வடிவம் பெற்றது திமுக மெகா கூட்டணி.. மொத்தம் 9 கட்சிகள்.. எந்த கட்சிக்கு எத்தனை சீட்? இறுதி வடிவம் பெற்றது திமுக மெகா கூட்டணி.. மொத்தம் 9 கட்சிகள்.. எந்த கட்சிக்கு எத்தனை சீட்?

    கோபாலகிருஷ்ணன்

    கோபாலகிருஷ்ணன்

    ஆனால் அப்போது திமுக மீதிருந்த அதிருப்தி காரணமாக அதிமுக வெற்றிகனியை பறித்தது. அறிமுகமே இல்லாத அதிமுக வேட்பாளர் சி.கோபாலகிருஷ்ணன் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் இவர் ஜெயிச்சதோடு சரி, தொகுதி பக்கம் வருவதே கிடையாது. எங்கள் எம்பியை காணவில்லை என்று நீலகிரி தொகுதி மக்கள் போஸ்டர் அடித்துகூட ஒட்டிவிட்டார்கள். இது பெரிய சர்ச்சையாகிவிட்டது. இதுவரை தொகுதிக்கும் எந்த நல்லதுமே இவர் செய்தது கிடையாது.

    அர்ஜூனன்

    அர்ஜூனன்

    மேலும், நீலகிரியில் அதிமுகவுக்குள் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. முன்னாள் மாவட்ட செயலாளர் புத்திசந்திரனுக்கும், இன்னாள் மாவட்ட செயலாளரும் ராஜ்யசபா எம்பியுமான அர்ஜுனனுக்கும் எப்போதுமே லடாய் இருந்து வருகிறது. இது அதிமுகவுக்கு பெரிய அடியாக உள்ளது. அது மட்டுமல்லாமல், அதிமுக-பாஜக கூட்டணியையும் இந்த தொகுதி மக்கள் பெரும்பாலும் விரும்பவில்லை. இதெல்லாம் சேர்ந்துதான் மக்களின் கவனம் ஆ.ராசா பக்கம் திரும்பி உள்ளது.

    மக்கள் குறைகள்

    மக்கள் குறைகள்

    நீலகிரியில் போட்டியிடுவதாக முடிவு செய்தோ என்னவோ, ஆ.ராசா தொகுதியில் 2 மாசத்துக்கு முன்பே களம் இறங்கி விட்டார். கூடவே கிராம சபை கூட்டங்களையும் நடத்தி வருவதுடன், மக்களின் குறைகளையும் கேட்டு வருவதால் செல்வாக்கு இப்போது கூடி வருகிறது.

    நீலகிரி தொகுதி

    நீலகிரி தொகுதி

    இதை தவிர ஏற்கனவே இதே தொகுதியில் வெற்றி பெற்றபோது நிறைய வளர்ச்சி திட்டங்களையும் ஆ.ராசா செய்து தந்திருப்பதால் அந்த நல்லெண்ணமும் தொடர்ந்து வருகிறது. எப்படி பார்த்தாலும் ராசாவுக்கு நீலகிரி ஒதுக்கப்பட நிறையவே வாய்ப்பு உள்ளது.

    கூட்டணி கட்சியா?

    கூட்டணி கட்சியா?

    ஆனால் அதிமுக என்ன செய்ய போகிறது என்று தெரியவில்லை. இருக்கும் கோஷ்டி பூசல் இப்போதைக்கு தீராது என்பதால், தனித்து போட்டியிட முன்வருமா அல்லது கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    English summary
    DMK A. Raja is said to be contesting in Nilgiris Consitution
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X