நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டூவீலரை கீழே தள்ளிவிட்ட காட்டு யானை.. தெறித்து ஓடிய இளைஞர்கள்.. உயிரை காப்பாற்றிய லாரி ஓட்டுநர்!

Google Oneindia Tamil News

Recommended Video

    பாதையில் வந்தவர்களுக்கு மிரட்டல் விடுத்த காட்டு யானை

    ஊட்டி: கோத்தகிரி - மேட்டுப்பாளையம் மாநில நெடுஞ்சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் சாலையில் ஒய்யாரமாக நடந்து சென்ற காட்டுயானை. இருசக்கர வாகனத்தை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலைகளில் அண்மை காலமாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    A wild elephant walking along the road on the Kotagiri Mettupalayam State Highway

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோத்தகிரி - மேட்டுப்பாளையம் மாநில நெடுஞ்சாலையில் ஒற்றை காட்டு யானை ஒன்று இரவு நேரங்களில் சாலையில் முகாமிட்டு போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வருகிறது. வனத்துறையும் அந்த யானையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று காலை குஞ்சப்பனை என்ற பகுதியில் அந்த ஒற்றை காட்டு யானை காட்டுப்பகுதியிலிருந்து வெளியே வந்தது. அப்போது சாலையை கடந்து வனப்பகுதிக்குள் செல்ல வழியில்லாததால், சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் ராஜ நடைபோட்டு சாலையில் நடந்து சென்றது.

    A wild elephant walking along the road on the Kotagiri Mettupalayam State Highway

    அப்போது எதிர்பாராத விதமாக மேட்டுப்பாளையத்திலிருந்து கோத்தகிரி நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் இருவர், யானையை கண்டதும் நிலை தடுமாறி சாலையில் விழுந்தனர். யானை இவர்களைத் தாக்கும் என்ற சூழ்நிலையில், இருசக்கர வாகனத்தின் பின்னே வந்த லாரி ஓட்டுனர் இருசக்கர வாகனம் அருகே லாரியை நிறுத்தி இளைஞர்களை காப்பாற்றினார்.

    சபரிமலை செல்லும் பிந்து அம்மினி, ரெஹானா பாத்திமாவுக்கு பாதுகாப்பு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு சபரிமலை செல்லும் பிந்து அம்மினி, ரெஹானா பாத்திமாவுக்கு பாதுகாப்பு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு

    சில நொடிகள் இருசக்கர வாகனத்தை தொட்டு பார்த்த யானை, யாருக்கும் எவ்வித இடையூறுமின்றி சிறிது தூரம் சாலையில் நடந்து சென்று, பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் மலைப்பாதையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    English summary
    A wild elephant walking along the road on the Kotagiri Mettupalayam State Highway.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X