நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற” - டைமிங்கில் ஒலித்த எம்.ஜி.ஆர் பாட்டு.. வெட்கப்பட்ட ஸ்டாலின்!

Google Oneindia Tamil News

நீலகிரி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 124-ஆவது உலக புகழ்பெற்ற உதகை மலர் கண்காட்சியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

மலர் கண்காட்சியை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், மலர் அரங்கம், கண்ணாடி இல்லம், அரசு மற்றும் தனியார் துறைகளின் அரங்குகள், கலை நிகழ்ச்சிகள், இத்தாலியன் பூங்கா ஆகியவற்றைப் பார்வையிட்டார்.

சென்னையில் ஓடஓட விரட்டி பைனான்சியர் கொலை.. பட்டப்பகலில் 6 பேர் வெறிச்செயல்.. பதறவைக்கும் சம்பவம்சென்னையில் ஓடஓட விரட்டி பைனான்சியர் கொலை.. பட்டப்பகலில் 6 பேர் வெறிச்செயல்.. பதறவைக்கும் சம்பவம்

ஸ்டாலின் வரும்போது வெலிங்டன் ராணுவத்தின் பேண்ட் வாத்தியக் குழுவினர், "நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற.." பாடலை டைமிங்காக வாசித்ததால் ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் உள்ளிட்டோர் மகிழ்ச்சியடைந்தனர்.

மலர்க் கண்காட்சி

மலர்க் கண்காட்சி

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 124-வது உதகை மலர் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் 124 -வது மலர்க் கண்காட்சி இன்று தொடங்கியது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார். முன்னதாக , திறப்பு விழாவுக்கு வந்த முதல்வரை அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் , கா.ராமச்சந்திரன் , மாவட்ட ஆட்சியர் அம்ரித் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். நீலகிரி எம்.பி. ஆ.ராசா, உதகை எம்.எம்.ஏ கணேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 ஒரு லட்சம் பூக்கள்

ஒரு லட்சம் பூக்கள்

ஊட்டி தாவரவியல் பூங்கா வளாகத்தில் ஒரு லட்சம் கார்னேசன் மலர்களால் அமைக்கப்பட்டு இருந்த தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நூற்றாண்டு கட்டிடத்தின் மாதிரியை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். தொடர்ந்து, நுழைவாயில் அருகே 20,000 கார்னேசன் மலர்களால் அமைக்கப்பட்டு இருந்த '124 மலர் கண்காட்சி' என்ற பெயர் பலகையை முதல்வர் பார்வையிட்டார்.

மலர் அலங்காரம்

மலர் அலங்காரம்

பூங்கா வளாகத்தில் உள்ள கண்ணாடி மாளிகை 4,500 பூந்தொட்டிகளால் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பூங்காவில் மலர்களால் அமைக்கப்பட்டு இருந்த கட்டமைப்புகளை முதல்வர் ஆர்வத்துடன் பார்வையிட்டார். பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை முதல்வர் பார்வையிட்டார்.

பேண்ட் வாத்திய வரவேற்பு

பேண்ட் வாத்திய வரவேற்பு

பின்னர், தோடர், ஓடிசி கலை நிகழ்ச்சிகளை பார்வையாளர்களுடன் அமர்ந்து கண்டு ரசித்தார். பூங்காவின் பிரசித்தி பெற்ற இத்தாலியன் பூங்காவுக்கு அவரும், துர்கா ஸ்டாலினும் சென்றனர். அங்குள்ள பேண்ட் ஸ்டாண்டில், வெலிங்டன் ராணுவத்தின் பேண்ட் இசைக்குழு பிரத்யேகமாக இசையை இசைத்தனர். அவர்களின் பேண்ட் வாத்திய இசையை அங்குள்ள காட்சி கோபுரத்தில் முதல்வர் கண்டு ரசித்தார்.

நீங்க நல்லா இருக்கோணும்

நீங்க நல்லா இருக்கோணும்

முதல்வர் ஸ்டாலின் தங்களை நோக்கி வந்ததும், வெலிங்டன் ராணுவத்தின் பேண்ட் வாத்தியக் குழுவினர், "நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற.. இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற.." பாடலின் இசையை டைமிங்காக வாசித்தனர். இதனை முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் உள்ளிட்டோர் வெகுவாக ரசித்தனர்.

எம்.ஜி.ஆரின் இதயக்கனி திரைப்படப் பாடலை ஸ்டாலினை வரவேற்க இராணுவ பேண்ட் வாத்திய குழுவினர் இசைத்தது அங்கிருந்த அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது.

English summary
Wellington Army Band troop played 'Neenga Nalla Irukkonum Naadu munnera' song while Chief Minister MK Stalin arrives in Ooty flowers festival
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X