நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டேய்.. தெரியாத்தனமாக ஊட்டிக்குள் நுழைஞ்சுட்டேன்.. விட்ருங்கடா.. தவித்து களைத்து போன கரடி குட்டி!

Google Oneindia Tamil News

Recommended Video

    ஊட்டியில் ஊருக்குள் நுழைந்த கரடி

    ஊட்டி: தெரியாத்தனமா ஊட்டிக்குள் நுழைந்துவிட்ட கரடிக்குட்டி நீண்ட போராட்டத்துக்கு பிறகு மயக்க ஊசி போட்டு பிடிக்கப்பட்டது!

    கடும் வறட்சி காரணமாக, தண்ணீர், உணவு தேடி வன விலங்குகள் சில சமயம் ஊருக்குள் வந்துவிடுகின்றன. இன்றும் அப்படித்தான் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

    ஊட்டியில் விடிகாலையிலேயே பரபரப்பாக இருக்கும் ஒரே பகுதி மார்க்கெட்தான். இந்த மார்கெட் பகுதியை சுற்றிலும் நிறைய வீடுகளும் உள்ளன.

    Pollachi Rapist: படிக்கும் போதே காம வெறியனாக வலம் வந்த திருநாவுக்கரசு.. யார் இவர்?.. பரபர தகவல்கள் Pollachi Rapist: படிக்கும் போதே காம வெறியனாக வலம் வந்த திருநாவுக்கரசு.. யார் இவர்?.. பரபர தகவல்கள்

    நாய்கள் குரைத்தன

    நாய்கள் குரைத்தன

    இந்நிலையில் இன்று காலை 6 மணி இருக்கும். ஊட்டி மார்க்கெட் பகுதிக்கு 7 வயது கரடி ஒன்று வந்துவிட்டது. ஆனால் மார்க்கெட் பகுதியிலேயே சுற்றித் திரியும் நாய்கள் கூட்டம் கரடியை பார்த்ததும் குரைக்க ஆரம்பித்தன. எல்லா நாய்களும் ஒன்றாக சேர்ந்து குரைக்கவும், கரடிக்குட்டி பயந்துவிட்டது.

    மாடியில் கரடி

    மாடியில் கரடி

    அதனால் பக்கத்தில் இருந்த குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து, மாடிகளில் ஏறியும், வீட்டுக்கு வீடு தாவியும் வந்தது. ஒரு கட்டத்தில் மாடி ஒன்றிலிருந்து கரடிக்குட்டியால் கீழே இறங்கவே முடியவில்லை. அதன் காலில் அடிபட்டு காயங்கள் ஏற்பட்டிருந்தன.

    காலில் காயம்

    காலில் காயம்

    அதற்குள் மார்க்கெட் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது. இதை பார்த்ததும் கரடிக்குட்டி இன்னமும் பயந்துபோய் சப்தத்தை எழுப்ப ஆரம்பித்தது. ஒரு பக்கம் நாய்கள், இன்னொரு பக்கம் மக்கள் தலைகள், காலிலோ அடிபட்ட காயம்.. போன்றவற்றினால் ஒரே இடத்தில் மாட்டிக்கொண்டு விழித்து கத்தியதுகரடி.

    சிக்கல்

    சிக்கல்

    இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வனத்துறையினர் கரடிக்குட்டியை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் ஒரு சிக்கல் என்னவென்றால், ஊட்டியில் கால்நடை மருத்துவர்கள் போதுமான அளவுக்கு இல்லை என்பதுதான்.

    குற்றச்சாட்டு

    குற்றச்சாட்டு

    "ஒருவேளை கால்நடை மருத்துவர் இருந்திருந்தால் காலையிலேயே சென்று அடிபட்ட கரடிக்கு மயக்க ஊசி போட்டு பிடிக்க செய்திருக்கலாம், சிகிச்சையும் தந்திருக்கலாம்" என்று பொதுமக்கள் குற்றச்சாட்டாக சொல்கிறார்கள்.

    மயக்க ஊசி

    மயக்க ஊசி

    இன்று பிற்பகலில்தான் மயக்க ஊசி போட்டு கரடிக்குட்டியை பிடிக்க முடிந்தது. அதன்பிறகு முதுமலை வனப்பகுதிக்கு அதனை கொண்டு செல்லும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    English summary
    7 years old bear has entered into the Ooty Market this morning and caught by Forest Officials
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X