நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஐடி ரெய்டு மூலம், 18 தொகுதிகளில் இடைத்தேர்தலை நிறுத்த சதி... தினகரன் பகீர்

Google Oneindia Tamil News

ஊட்டி: வருமான வரித்துறையின் சோதனையைப் பயன்படுத்தி 18 தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தலை நிறுத்த மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

நீலகிரி மக்களவை தொகுதி அமமுக வேட்பாளர் ராமசாமியை ஆதரித்து அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நீலகிரி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

center and state plans stop the 18-member of assembly by election by IT Raid : TTV Dhinakaran

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் முயற்சியில் அதிமுக மற்றும் திமுகவினர் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

மேலும் வருமான வரித்துறையை 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலை நிறுத்த மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக தினகரன் கூறுகையில், "உளவுத்துறையை அவர்கள் (அரசுகள்) கையில் வைத்துள்ளார்கள்.

காங்கிரஸ் உதவியுடன் மாநில கட்சியைச் சேர்ந்தவர்தான் பிரதமர்.. டிடிவி தினகரன் பொளேர்! காங்கிரஸ் உதவியுடன் மாநில கட்சியைச் சேர்ந்தவர்தான் பிரதமர்.. டிடிவி தினகரன் பொளேர்!

ஆளும் கட்சி படுதோல்வி அடையும் என்பதால் குறிப்பாக எங்கள் வேட்பாளர்கள் மீதோ, அல்லது அவர்கள் சம்பந்தப்பட்டவர்கள் மீதோ, எங்கள் கட்சி நிர்வாகிகள் வீடுகளிலோ, அல்லது எங்கள் கட்சி பொறுப்பாளர்களின் வீடுகளிலோ, இவர்கள் போய் முன்னதாகவே பணத்தை வைத்துவிட்டு, அதன் பிறகு எங்கள் ஆட்களை பிடித்து, தேர்தல் ஆணையத்துக்கு தகவல் கொடுக்கலாம். உடனே தேர்தல் ஆணையமும் உடனே தேர்தலை நிறுத்த நடவடிக்கை எடுக்கலாம். எனவே இந்த தேர்தலில் மத்திய மாநில அரசுகள் அனைத்து அதிகார துஷ்பிரயோகங்களையும் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது" என்றார்.

English summary
AMMK Deputy General Secretary TTV Dhinakaran says center and state may plans stop the 18-member of by election by IT Raid
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X