நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சவாலான கிளைமேட்.. டாக்டர்கள், நர்ஸ்கள் சிறப்பாக பணியாற்றுகிறார்கள்.. நீலகிரி கலெக்டருடன் நேர்காணல்

Google Oneindia Tamil News

ஊட்டி: நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ஐஏஎஸ் அவர்கள் 'ஒன் இந்தியா தமிழ்' இணைய ஊடகத்திற்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் எங்கெல்லாம் திருமணம் மற்றும் நிகழ்ச்சிகள் நடக்கிறதோ அங்கெல்லாம் கொரோனா தொற்று கிளஸ்டர் அதிகரிக்க ஆக ஆரம்பித்தது.என்றார்.

நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ஐஏஎஸ்., 2009 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணியில் சேர்ந்தவர் ஆவார். இவர் மீன்வள அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றவர் ஆவார். நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவராக 10.07.2017 அன்று பொறுப்பேற்றார். கடந்த 3 வருடங்களாக நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.

இன்னசென்ட் திவ்யா ஐஏஎஸ் நமது செய்தியாளருக்கு காணொலி காட்சி வாயிலாக பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளையும்.அதற்கு அவர் அளித்த பதில்களையும் இப்போது பார்க்கலாம்.

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை நிராகரிக்க கி. வீரமணி முன்வைக்கும் 4 காரணங்கள்மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை நிராகரிக்க கி. வீரமணி முன்வைக்கும் 4 காரணங்கள்

கோவிட் அதிகரிப்பு

கோவிட் அதிகரிப்பு

கேள்வி: நீலகிரியில் இப்போது நிலைமை எப்படி உள்ளது?

பதில்: நீலகிரியில் கோவிட் நிலைமை கொஞ்சம் அதிகமாக உள்ளது. இங்கு கட்டுப்பாட்டில் தான் வைத்திருந்தோம். மற்ற ஊர்களில் இருந்து அதிகம் பேர் வர ஆரம்பித்தது. இங்கிருப்பவர்களும் வெளியில் சென்ற வர வேண்டிய திருந்தததால் கொரோனா அதிகமாக உள்ளது.

எப்படி பரவியது

எப்படி பரவியது

கேள்வி: நீலகிரி மாவட்ட எல்லைகளில் கட்டுப்பாடுகள் எந்த அளவிற்கு உள்ளது? முதலில் இருந்ததை போல் இப்போது இல்லையா?

பதில்: நீலகிரி மாவட்டத்தில் 16 செக்போஸ்ட்கள் உள்ளன. கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு என மூன்று மாநிலங்கள் சந்திக்கும் முக்கோண எல்லையாக நீலகிரி மாவட்டம் உள்ளது. 16 செக்போஸ்டிலும் பாதுகாப்பை 24 மணி நேரமும் அதிகரித்து வைத்துள்ளோம். மார்ச் மாதத்தில் முதன் முதலில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க ஆரம்பித்தது. முதலில் கேரளாவில் வர ஆரம்பித்தது. அப்பவே எல்லையை மூடி பாதுகாக்க ஆரம்பித்து விட்டோம். அங்கிருந்து வருபவர்களை உள்நுழைவு தடுக்க ஆரம்பித்தோம். லாக்டவுனுக்கு முன்பே சுற்றுலா இடங்களை மூடிவிட்டோம். அப்போது நீலகிரிக்கு பெரிய கேஸ்கள் வரவில்லை. டெல்லியில் இருந்தும், கோயம்பேட்டில் இருந்தும் வந்த சில பேரே பாதிக்கப்பட்டார்கள்

ஆனால் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையாக தமிழக அரசு மண்டலத்திற்கு செல்ல கட்டுப்பாடுகளை தளர்த்தியது.அத்துடன் பேருந்து சேவையும் இயக்கியது. அந்த சமயத்தில் பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் நீலகிரிக்கு வந்தார்கள். இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் உள்ளவர்களும் பிற மாவட்டங்களுக்கு சென்று வந்தார்கள். அந்த சமயத்தில் மக்கள் அதிக அளவு தேவையற்ற பயணங்களை மேற்கொண்டார்கள். மக்கள் அப்போது வழங்கப்பட்ட தளர்வுகளை சரியாக பயன்படுத்தவில்லை. அதனால் அதிகரித்துவிட்டது.

மருத்துவர்களுக்கு பாராட்டு

மருத்துவர்களுக்கு பாராட்டு

கேள்வி: நீலகிரி மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள், பெட்கள் எந்த அளவிற்கு இருப்பு உள்ளது.?

பதில்: நீலகிரி மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையை பொறுத்தவரை கொஞ்சம் குறைவான வசதிகளே இருந்தது, இங்குள்ள குளிர்ந்த கால நிலை நமக்கு எதிராக இருக்கிறது. கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு கொரோனா நோயாளிகளை அனுப்பி வைத்து வந்தோம். ஆனால் அங்கேயே இப்போது நிறைய பேரை கவனித்து வருவதால், நம்ம ஊட்டி அரசு மருத்துவனை, குன்னூர் அரசு மருத்துவமனையிலும் கொரோனா பாசிட்டிவ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறோம். ஏ சிம்டமேட்டிவ் நோயாளிகள்ளை (அறிகுறியற்ற நோயாளிகள்) பொறுத்தவரை, நமக்கு ஊட்டியை பொறுத்தவரை நிறைய அட்வான்டேஜ் இருக்கு. நிறைய பள்ளிகள், விடுதிகள், இடங்கள் உள்ளன. அவற்றை கோவிட் மையமாக எடுத்து நடத்தி வருகிறோம். ரொம்ப சக்சஸ் புல்லாக நடத்தி வருகிறோம். இன்றைய தேதிக்கு நான்கு பேர் தான் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் இருக்கிறார்கள். அவர்கள் கொஞ்சம் ஆபத்தான நோயாளிகள்.மற்ற எல்லாரையும் நீலகிரி மாவட்டத்தில் வைத்து சிகிசை அளித்து வருகிறோம். இது நீலகிரி மாவட்ட மருத்துவர்கள், செவிலியர்களின் திறனுக்கான சான்று.

திருமணம்

திருமணம்

கேள்வி: நீங்கள் கொண்டு வந்த ரூல்ஸ் தான் பேசும்பொருளாக இருந்தது. மாஸ்க் போடாதவர்களுக்கு அபராதம், தண்டனை அறிவித்தீர்கள். மக்கள் மாஸ்க் அணிந்து ஒத்துழைககிறார்களா?

பதில்: நீலகிரி மாவட்டத்தில் மக்களின் அன்றாட வாழ்வியல் கலாச் சாரம் முற்றிலும் மாறுபட்டது. கிராமங்களில் மக்கள் மிகவும் அன்யோன்யம் ஆக இருப்பார்கள். சமூக இடைவெளியை கடைபிடிக்க மாட்டார்கள். இது இப்போது தொற்று பரவும் போகுது பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. எங்கெல்லாம் திருமணம் மற்றும் நிகழ்ச்சிகள் நடக்கிறதோ அங்கெல்லாம் கிளஸ்டர் டெவலப் ஆக ஆரம்பித்தது. இங்கே விஷசங்களுக்கு அனைத்து கிராமங்களுக்கும் தகவல் கொடுப்பார்கள். ஒன்று சேர்வார்கள். அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக மக்கள் கூடுவார்கள். இதனால் கிளஸ்டர் அதிகமாக பரவ ஆரம்பித்தது. இதனால் மக்களிடம் கொரோனா பரவும் விதம் குறித்து வலுவான தகவலை சொன்னோம். அதாவது மற்றவர்கள் உடல் நலத்தை பாதிக்கும் செயல்களை செய்தால் தண்டனைக்குரிய குற்றம் என்பதை சொல்லியிருக்கிறோம். தொற்று நோய் தடுப்பு சட்டப்படி 2வருடம் வரை தண்டனை கொடுக்க முடியும். நம்முடைய அஜாக்கரதையால் தொற்று ஏற்பட்டால் தண்டனைக்கு வாய்ப்பு உள்ளதாக சொல்லியிருக்கிறோம்.

சுற்றுலா பாதிப்பு

சுற்றுலா பாதிப்பு

சுற்றுலாவை நம்பி உள்ள நீலகிரி மாவட்ட மக்களுக்கு அரசு பொருளாதார நலனுக்காக அரசு ஏதேனும் செய்திருக்கிறதா?

நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை இங்க டீ எஸ்டேட் தான் பிரதானம். முதல் கொஞ்ச நாட்கள் கழித்து தேயிலை எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். தேயிலை விவசாயம் தொடர்பான அனைத்து செயல்களும் தடை இல்லாமல் நடந்து வருகிறது. ஆனால் சுற்றுலாவை பொறுத்தவரை இப்போது அதற்கான சூழல் கிடையாது. இதனால் சுற்றுலா துறை பாதிக்கப்பட்டிருப்பது உண்மை தான். அதேநேரம் அவர்களுக்கு உதவும் வகையில் நிறைய திட்டங்கள் தமிழக அரசு மற்றும் மத்திய அரசுகள் கொண்டு வந்துள்ளன. தமிழக அரசு சார்பில் 1000 வழங்கப்பட்டுள்ளது. அது இல்லாமல் நலவாரியத்தில் சேர்ந்தவர்களுக்கு குறிப்பிட்ட தொகை நிதியாக வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் மகளிர் சுய உதவிக்குழுவில் சேர்ந்தவர்களுக்கு honor pernod brand என்று 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை கொடுக்கப்பட்டுள்ளது. நமது மாவட்த்தில் மட்டும் 560 பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா இல்லாததால் பாதிக்கப்பட்ட சாலையோர கடை வைத்துள்ளவர்கள், சுற்றுலா இடங்களில் கடை வைத்திருந்தவர்கள் ஆகியோருக்கு கொடுத்தோம். மற்ற சுயதொழில முனைவருக்கும் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. லாக்டவுனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசி மளிகை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய ஸ்பெசல் கிட் கொடுத்துள்ளோம்" என்றார். இன்னும் பல கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதிலும் வீடியோவில் உள்ளது. பாருங்கள்.

English summary
exclusive Interview with Nilgiris Collector Innocent Divya: she said Challenging Climate with covid Spread in Nilgiris district. we treat all people
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X