திடீரென சரிந்த கலெக்டர்.. பதறிப்போய் ஓடி வந்து தாங்கிப் பிடித்த ஸ்டாலின்.. தீயாகப் பரவும் வீடியோ!
நீலகிரி: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடைபெற்ற அரசு விழாவில் தவறி கீழே விழப்போன மாவட்ட ஆட்சியரை முதல்வர் ஸ்டாலின் தாங்கிப் பிடித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகச் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் நேற்று மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றார்.
ஆத்தாடி.. திருமணம் பின் 3 நாள் பாத்ரூம் போக கூடாதாம்.. இந்தோனேசியாவில் வினோத நடைமுறை.. பரபர காரணம்
அந்த விழாவில் மேடையில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் கால் தவறி கீழே விழப்போன நிலையில் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் தாங்கிப் பிடித்துள்ளனர்

ஊட்டியில் ஸ்டாலின்
நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு வந்துள்ளார். மு.க.ஸ்டாலின் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற மலர் கண்காட்சியை தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். பின்னர் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு சென்று, அங்குள்ள ராணுவ போர்ச் சின்னத்திற்கு மரியாதை செய்தார். தொடர்ந்து பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

நலத்திட்ட உதவிகள்
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற ஊட்டி நகரின் 200வது ஆண்டு விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.28 கோடி மதிப்பில் 9,422 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். 34 கோடி மதிப்பில் 20 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், ரூ.56 கோடி மதிப்பிலான 28 முடிவுற்ற பணிகளையும் மக்கள் பயன்பாட்டிற்கு முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த விழாவில் மொத்தமாக ரூ.118 கோடியே 79 லட்சம் மதிப்பிலான அரசு திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

குறைகளைக் கேட்டார்
முன்னதாக, முதல்வர் ஸ்டாலின் இந்த விழா அரங்கில் அமைக்கப்பட்டிருந்த ஊட்டியின் 200-வது ஆண்டு விழா கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து விழா அரங்குக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்த மாற்றுத்திறனாளிகளிடம் நலம் விசாரித்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர் விழா மேடைக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித், குறும்பர் பழங்குடியினர் ஓவியத்தை நினைவு பரிசாக வழங்கினார்.

தவறி விழுந்த கலெக்டர்
முதல்வர் ஸ்டாலினுக்கு நினைவுப்பரிசு வழங்க வந்த நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் நிலை தடுமாறினார். அப்போது மேடையில் இருந்த முதல்வர் ஸ்டாலின் மற்றும் நீலகிரி திமுக எம்.பி ஆ.ராசா ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அம்ரித்தை தாங்கிப் பிடித்தனர். தவறி விழப்போன் மாவட்ட ஆட்சியர் அம்ரித்தை முதல்வர் ஸ்டாலின் தாங்கிப் பிடித்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது.

மனதும் குளிர்கிறது
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இயற்கையும் பசுமையும் நிறைந்த எழில்கொஞ்சும் பல்வேறு சிறப்புகள் உள்ள உதகைக்கு வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இயற்கை எழில் கொஞ்சும் உதகை போல் என் மனமும் குளிர்கிறது. உதகைக்கு எத்தனை முறை வந்திருந்தாலும் முதன்முறையாக அரசு நலத்திட்டங்கள் வழங்க வந்திருப்பது உதகை போன்று என் மனதும் குளிர்ச்சி அடைகிறது எனப் பேசினார்.