நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

100 பேருக்கு தொற்றை பரப்பிய ஒருவர்.. நடுக்கத்தில் ஊட்டி.. கட்டிக்காத்த கட்டுப்பாட்டுக்கு ஆபத்து!

100 பேருக்கு தொற்று பரவி உள்ளதால் நீலகிரி கிலியில் உள்ளது

Google Oneindia Tamil News

ஊட்டி: நீலகிரி மக்கள் உச்சக்கட்ட பீதியில் உள்ளனர்... ஒருவர் 100 பேருக்கு தன்னுடைய தொற்றை கடகடவென பரப்பிவிட்டுள்ளார்.. இதனால் நீலகிரியே நடுங்கி போய் உள்ளது.

ஆரம்பத்தில் இருந்தே நீலகிரி மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் நிறைய விதிக்கப்பட்டன.. அவை கடைபிடிக்கவும் பட்டன.. எல்லைகள் மூடப்பட்டன... ஆய்வுகள் நடத்தப்பட்டன.. சோதனைகள் அதிகரிக்கப்பட்டன.. தொற்றே இல்லாத மாவட்டமாகவும், அடுத்த சில தினங்களிலேயே பச்சையை நோக்கி வீறு கொண்டு நடைபோட்ட மாவட்டமாகவும் நீலகிரி திகழ்ந்தது.

 corona symptoms for 100 people in nilgiris district

ஆனால், கோயம்பேடு சமாச்சாரம் வந்ததுமே இது நொறுங்கியது.. கோயம்பேட்டிற்கு காய்கறி இறக்க சென்ற லாரி டிரைவர்களுக்கு தொற்று பரவி, அதன் மூலம் சிலர் பாதிக்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் அனுதிக்கப்பட்டு, டிஸ்சார்ஜ் ஆகி சென்றனர்.. ஆனால், உயிர்பலி என்பது முதல்முறையாக காவு வாங்கப்பட்டபோது அச்சம் நீலகிரியில் தென்பட ஆரம்பித்தது.

இப்போது தனக்கு தொற்று வந்த ஒருவர், அதை 100 பேருக்கு பரப்பி விட்டுள்ளது அதிர்ச்சியை தந்து வருகிறது.. ஊட்டி பக்கத்தில் எல்லநள்ளி என்ற பகுதி உள்ளது.. இங்கு தனியார் ஊசி ஃபேக்டரி ஒன்று செயல்பட்டு வருகிறது.. 785 பேர் இங்கு வேலை பார்த்து வருகிறார்கள்.. இங்கு பணிபுரியும் அதிகாரி ஒருவருக்கு, கடந்த ஜுன் 16ம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்டது.. அதனால் உடனடியாக கோவை, இஎஸ்ஐ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையில் உள்ளார்.

இவர் கடந்த 12-ம் தேதி வரை ஃபேக்டரிக்கு வந்து போயுள்ளார்.. எல்லோரிடமும் சகஜமாக பேசி உள்ளார்.. அங்கு நடத்தப்பட்ட மீட்டிங்குகளிலும் பங்கேற்று பேசி உள்ளார்.. இவருக்கு தொற்று என்பதுமே, அலர்ட் ஆகிவிட்டது சுகாதாரத்துறை.. உடனடியாக டெஸ்ட் எடுக்கப்பட்டது... 100 தொழிலாளர்களுக்கு இந்த தொற்று பரவியது தெரியவந்தது.. அனைவருக்கும் உடனடியாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை தரப்பட்டு வருகிறது.. அந்த ஃபேக்டரிக்கும் சீல் வைக்கப்பட்டது.

விகாஸ் தூபே கூட்டாளிகளை வேட்டையாடும் உ.பி. போலீஸ்.. அதிகாலையே சீறிய குண்டுகள்.. 2 பேர் என்கவுண்டர்விகாஸ் தூபே கூட்டாளிகளை வேட்டையாடும் உ.பி. போலீஸ்.. அதிகாலையே சீறிய குண்டுகள்.. 2 பேர் என்கவுண்டர்

Recommended Video

    Coronavirus Spread In Air? | Covid-19 airborne threat | Experts Warning

    இதை பற்றி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா சொல்லும்போது, "நீலகிரியில் தொற்று, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது... எல்லநள்ளி தொழிற்சாலையில், கொரோனா தொற்று ஏற்பட்ட ஒருவரால் மட்டும், இதுவரை, 100 தொழிலாளர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது... தவிர, 785 தொழிலாளர்கள், அவர்களின் குடும்பத்தினரை டெஸ்ட்டுக்கு உட்படுத்தினோம்... தனிமையில் வைக்கப்பட்டவர்கள், எக்காரணத்தை கொண்டும் வெளியே வரக் கூடாது.. விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியுள்ளார்.

    English summary
    coronavirus symptoms for 100 people in nilgiris district
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X